பொங்கல் வாழ்த்துக்கள்!
தென்னகச்சுற்றுலா முடித்து
தங்கிய தனுசை விட்டு
வடதிசை பயணிக்கும் பகலோன்
திடமாய் மகரத்தில் குடிபுகும்
மங்கல பொங்கல் நன்னாள்.
சேற்றிலே நாற்றிட்டு
செந்நெல்லை விளைவித்து
சோற்றினைத்தரும் சோணாடும்
ஆழ்கடலில் முத்தெடுத்து
அழிவிலா தமிழ்சங்கமெடுத்து
தமிழ்வளர்த்த பாணாடும்
கலைவளர்க்கும் கடல்மல்லை!
தலைநகராம் காஞ்சியுடை
பல்லவநாடும் கண்ட தமிழ்நாடும்
பன்னாளாய் கொண்டாடும்
பொன்னான பொங்கல் பெருநாள்!
இன்னாள் இனிக்க!
நன்னாளாய் நாள்தோறும் விடிய!
என்னாளும் இன்பமாய் சிறக்க
தளிர் பூவின்
தைத்திருநாள் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!