ஹன்சிகா-சிம்பு காதல்! அம்போ?
தமிழ்சினிமாவின் ஜாலிபாயாக மன்மத அவதாரம் எடுத்து திரிந்துகொண்டிருந்தார் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டாரான இவருக்கு படங்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை என்றாலும் ‘கன்னி ராசி’ அமோகம்தான்! முதலில் ஜோதிகாவிற்கு ரூட் விட்டுப் பார்த்தார். சூர்யா அவரை தட்டிக்கொண்டு போக அடுத்து நயனுடன் காதல் செய்தார்.
திடீரென்று என்ன ஆனதோ நயன் சிம்புவின் காதலுக்கு குட்பை சொல்ல மனம் வெறுத்து ஆன்மீக வாதியாக மாறினார். ரஜினி பாணியில் இமயமலைக்கு சென்றார். அப்படியே சன்னியாசி ஆகியிருந்தால் ஒரு வேளை தமிழ் சினிமா தப்பித்திருக்கும்.
யார் செய்த பாவமோ?!! மீண்டும் நடிக்க வந்தார்.சல்மான் கான் நடித்த ஒரு இந்தி படத்தை ரீமேக்கில் செய்து பல்பு வாங்கிய கையோடு அவருக்கு மீண்டும் கன்னிராசி வேலை செய்ய ஆரம்பித்தது. வாலு, சேட்டைக்காரன் இரண்டு படங்களில் அவருடன் நடிக்க ஒப்பந்தம் ஆனார் பப்ளிமாஸ் ஹன்சிகா!
பீலீங்கில் இருந்த சிம்புவிற்கு ஹன்சிகாவின் காதல் இனித்தது! முதலில் மறுத்தாலும் டிவிட்டர் பேஸ்புக், நாளிதழ் என எல்லாவற்றிலும் இந்த காதல் வளர்ந்தது. இடையில் மீண்டும் நயனுடன் ஒரு படத்தில் ஜோடி போட்டார் சிம்பு. அவ்வளவுதான்! சிம்பு- ஹன்சிகா காதலுக்கும் வாழ்வு முடிந்துவிட்டது. காதலர் தினத்தன்று நான் தனிமையில் இருக்கிறேன் என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டார் ஹன்சிகா!
சிம்புவின் அடிபொடிகள் இதனால் கலங்கிப் போயினர். என்ன ஆயிற்றோ என்று அவர்கள் பதறியபோது ஹன்சிகாவிற்கு மனதில் கோயில் கட்டியவர்கள் தங்கள் குலதெய்வத்துக்கு நேர்ந்து கொண்டனர். இந்த நிலையில் தான் என் திருமணத்தை அம்மா முடிவு செய்வார். இப்போது சினிமாவில் பிஸியாக இருக்கிறேன்! இன்னும் ரெண்டு மூணு வருசத்திற்கு அதைப்பற்றி யோசிக்கக்கூட மாட்டேன்! என்று சொல்லி இருக்கிறார். சிம்புவுடனான உங்கள் காதல் முறிந்துவிட்டதா? என்று கேட்டபோது மவுனித்த அவர் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்வேன் என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளாராம்!
எது எப்படியோ! சிம்புவின் கன்னிராசி இன்னும் தொடர்கிறது!
ஹன்சிகா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்கின்றனர்!
பின்குறிப்பு} கொன்றைவானத் தம்பிரான் மன்னிப்பாராக! ரொம்ப நாளா சினிமா கிசு கிசு எதுவும் எழுதலை! பத்திரிக்கைகளில் படிச்சதை கோர்த்துவிட்டிருக்கேன்! காப்பி பண்ணலை சாமியோவ்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது! நன்றி!