புகைப்பட ஹைக்கூ 69
விழித்தது சூரியன்
விடிந்தது
பொழுது!
மஞ்சள் பூத்ததும்
மலர்ந்தது
பொழுது!
கடலில் குளித்தவன்
கரையில் எழுந்தான்
சூரியன்!
சூடு பட்டதும்
ஓடிப்போனது இருள்!
சூரியன்!
மேகத்திரைவிலக
மேதினி ஒளிர்ந்தது
சூரியன்!
பொன்னானது பூமி
பொன்னன்
உதயம்!
பூமி அருகில் வந்ததும்
புன்னகைத்த சூரியன்!
அதிகாலை!
செவத்த மாப்பிள்ளையை
சீண்டியது பூமி!
அதிகாலை!
ஒளி பட்டதும்
ஒளிந்து கொண்டது
குளுமை!
மலர்ந்தன மலர்கள்
புலர்ந்தது பொழுது!
அதிகாலை!
மூடி வைத்தாலும்
ஓடி வந்தது
சூரியன்!
புல்லினங்கள் கட்டியம்
புறப்பட்டது
சூரியன்!
ஒளிக்கதிர்கள்ஊடுறவல்
ஒளிந்து கொண்டது
பனித்துளி!
இரவின் இறப்பில்
பிறந்தது
சூரியன்!
தினமும் சொல்கிறது
பிறப்பின் தத்துவம்
சூரியன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!