புகைப்பட ஹைக்கூ 72
வேஷம் போட்டு
ஏமாற்றுகிறார்கள்!
தேர்தல்!
காசுக்கு போடுகிறார்கள்
வேஷம்!
தேர்தல்!
காசுக்கு ஆடுகிறார்கள்
‘கை’
கூலிகள்!
உடல்முழுதும் வண்ணம்
உழைக்காமலே வருது பணம்!
தேர்தல்!
சாமிமுன் ஆடினால் அருள்
சரக்கடித்து ஆடினால்
தேர்தல்!
‘கை’ கோர்த்ததும்
கரைபுரண்டது உற்சாகம்
தேர்தல்!
தலைவனை உருவாக்க
தப்பாட்டம் ஆடும் தொண்டர்கள்!
தேர்தல்!
உழைப்பை விரட்டி
உல்லாசத்தை அழைக்கிறது
தேர்தல்!
எந்த வண்ணம் பூசினாலும்
இவர்கள் வண்ணம் மாறவில்லை!
தேர்தல்!
வண்ணங்கள்
எண்ணங்களாகாது
தேர்தல்!
உழைக்கிறார்கள்
கட்சிக்கல்ல
ஒப்பந்தக் கூலிக்கு!
வண்ணங்கள் கலையும்போது
வாக்குறுதிகளும் மறந்துபோகும்
தேர்தல்!
கரைபுரண்ட வெள்ளத்தை
அணைபோட்டது ஆணையம்!
தேர்தல்!
‘கை’க்கு கைமாறும் பணம்
‘கை’ கொட்டி சிரித்தது ஜனம்!
தேர்தல்!
வண்ணம் அடித்து கொண்டாடினும்
வரவில்லை மறுமலர்ச்சி!
தேர்தல்!
ஒரு வேளைச்சோற்றுக்கு
உத்திரவாதமளித்தது
தேர்தல்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!