Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

ஆருத்ரா தரிசனம்!

$
0
0



மார்கழிமாதம்புனிதமானது. மாதங்களுள்நான்மார்கழியாகஇருக்கிறேன்என்கிறார்பகவான்கிருஷ்ணன். மார்கழிச்சிறப்பைஉணர்த்தவேஆண்டாள்திருப்பாவைபாடியருளினாள். அதுவும்மார்கழிபெண்களுக்கேஉரியவிஷேமானமாதம்மார்கழித்திங்கள்மதிநிறைந்தநன்னாளில்நீராடப்போகுவீர்செல்வச்சிறுமியர்காள்! என்றுசிறுமிகளைத்தான்ஏவினாள்ஆண்டாள். காசும்பிறப்பும்கலகலப்பகைபேர்த்து-வாசநறுங்குழல்ஆய்ச்சியர்தம்மத்தினால்-ஓசைபடுத்தத்தயிரரவம்கேட்டிலையோஎன்றுமார்கழிவிடியற்பொழுதேஅறிவித்துசகபெண்களைநீராடச்செல்லஎழுப்புகிறாள்ஆண்டாள்.

மார்கழியில்வரும்திருவாதிரைநட்சத்திரநாள்ஒருபுண்ணியதினம்அதைஆருத்ராஎன்பர்நடராஜப்பெருமானுக்குஇன்னாளில்நடைபெறும்அபிஷேகஆராதனையைக்கண்டுஆனந்திக்கஆயிரமாயிரமாய்பக்தர்கள்கூடுவர். கேரளத்திலும்மார்கழித்திருவாதரைநாள்மிகச்சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது. ஆனால்அங்குஇதுமுழுமையாகஒருபெண்கள்பண்டிகையாகவேஉள்ளது. தவக்கோலம்பூண்டுகன்னியாகஇருந்தபார்வதி (மன்மதனை) எரித்தசிவபெருமானைத்தன்கணவராகவரிக்கிறாள். உமையின்அழகில்மயங்கியபெருமான், தாம்எரித்தகாமனைஉயிர்பெற்றுஎழச்செய்வதாகஅவளுக்குவரமளிக்கிறார். இந்தவரம்அருளியதைஎண்ணி, சிவபெருமான்தனதுஅழிக்கும்தன்மையைவிலக்கி, சிருங்காரஉருவம்எடுத்து, நாங்கள்வேண்டும்வரத்தையும்அருளவேண்டும்என்பதற்காகவேபெண்கள்இந்தவிரதத்தைக்கடைப்பிடித்து  வருகிறார்கள்பகவானைமகிழ்விக்கச்செய்துஉவமையவளைப்போல்கன்னிகளும், சுமங்கலிகளும்அதிகாலையில்குளித்துதூயஆடைகளைஅணிந்துஉண்ணாநோன்பிருந்துவழிபடுகிறார்கள். நிலைத்தமாங்கல்யத்துக்காகவும், ஐஸ்வர்யத்துக்காகவும்இந்தவிரதத்தைமேற்கொள்கிறார்கள். ஆனாலும்மகிழ்ச்சிக்கொண்டாட்டத்தினூடேஇந்தவிரதம்இருப்பதால்அவர்களுக்குஇரட்டிப்புசந்தோஷம்.
அஸ்வினிநட்சத்திரம்முதல்புனர்பூசம்வரையில்திருவாதிரைஉற்சவகாலமாகும். அதிகாலையில்எழுந்துகுளம், ஆறுபோன்றநீர்நிலையில்குளிப்பதுதிருவாதிரைவிரதத்தின்முக்கியஅம்சம். அசுவினியன்றுஅருணன்உதிக்குமுன், பரணியன்றுவெள்ளிதோன்றுமுன், கார்த்திகையன்றுகாகம்கரையும்முன், மிருகசீரிஷத்தன்றுமக்கள்உணருமுன்குளிக்கவேண்டும்என்பதுதிருவாதிரைஸ்நானத்தின்முறை. மிதமானகுளிரும்இதமானகாற்றும்வீசும்சுகமானவிடியற்காலைபொழுதில்இளம்பெண்களின்பாடல்ஒலிஅலைஅலையெனமிதந்துவரும்நீர்நிலையில்அவர்கள்குதித்துகும்மாளமிட்டுக்குளிக்கும்ஓசை, செப்புப்பானையின்வாயைமூடிவிட்டுத்தட்டுவதுபோல்அக்கம்பக்கத்தில்குடியிருப்போரின்காதுகளில்எதிரொலிக்கும்.
வீட்டுப்பெண்களும்மருமகள்களும்நீரில்தயிர்கடைவதுபோன்றுபலவிளையாட்டுகள்விளையாடுவார்கள். படிக்கட்டில்நெருப்பின்அருகேகுளிர்காய்ந்துகொண்டிருக்கும்கிழவிமார்கள், தாம்மூட்டியிருக்கும்தீயின்சிறியஒளியில்இதைக்கண்டுஇன்புறுவார்கள். குளித்துக்கரையேறியஇளம்பெண்கள், நெருப்பின்அருகில்குளிர்காயவரும்போதுகிழவிகள்கடுங்குளிர்! தாங்கமுடியவில்லை! எல்லாவற்றையும்தாங்கும்பூமிமாதாபோல்பெண்களும்பொறுமைகொண்டவர்களாகவிளங்கவேண்டும்என்பார்கள். குளித்துமுடித்தாகிவிட்டதா? வெள்ளாவியில்இட்டுவெளுத்தஆடையைஅணிந்துகொண்டுசாந்து, சந்தனம், மஞ்சள்பொட்டு, மைஇவற்றைஅணிந்துதசபுஷ்பம் (பத்துப்பூக்கள்) சூடியபிறகுகூட்டம்கூட்டமாகஅவர்கள்பாடிக்கொண்டுவீடுதிரும்புவார்கள்.

சிறுகுளத்தில்துடிபரவியது; சிறுகுன்றில்வெயில்பரவியது; வயலில்பசுபரவியது-உணர்உணர்என்குட்டிமாயேஎன்றபொருள்கொண்டஅவர்களதுபாட்டுசோம்பலால்தூங்கிக்கொண்டிருக்கும்தன்தோழியைஎழுப்புவதற்காகஇருக்கலாம். அல்லதுமகாமாயைதேவியைப்பற்றிஉணர்த்துவதாகஇருக்கலாம். திருவாதிரைநோன்பன்றுஅரிசிசேர்க்காதஎல்லாவகைதின்பண்டங்களும்தயாராகும். கார்த்திகை, மார்கழிமாதங்களில்ஏராளமாகக்கிடைக்கும்கிழங்குகளைக்கொண்டுசெய்யும்ஒருவிதகூட்டு, கூவக்கிழங்குமாவினால்செய்தகளி, இளநீர்இலைமுக்கியஇடம்பெறும்.
அக்காலத்திலும்திருவாதிரைநட்சித்திரம்அறுபதுநாழிகைக்குள்நூற்றெட்டுவெற்றிலைசாப்பிடவேண்டும்என்பதுசுமங்கலிகளுக்குமுக்கியமானஒருசடங்காகஇருந்தது. விளக்கைசாட்சியாகவைத்துக்கொண்டுஅதன்எதிரில்கையில்பிடித்துக்கொண்டுஅர்த்தநாரீஸ்வரர்சிவனைஎண்ணிக்கொண்டுநூற்றெட்டுவெற்றிலைசாப்பிடத்தொடங்குவார்கள். திருவாதிரைநட்சத்திரம்போல்அமைப்புஉள்ளகொடுவேலிப்பூக்கள்மார்கழியில்எங்கும்பூத்திருப்பதைகேரளாவில்காணலாம். இதைபாதிராப்பூ(நடுஇரவுப்பூ) என்பார்கள்திருவாதிரைநட்சத்திரம்உச்சியைஅடைந்துவிட்டதுஎன்றுஅறிந்தவுடன்பாதிராப்பூசூடுவார்கள்ஆருத்ராநட்சத்திரத்தைநோக்கிப்பூக்களைஅர்ப்பணம்செய்துபின்னர்வட்டமாகஅமர்ந்துகைதட்டிவிளையாடுவார்கள். திருவாதிரையின்பெருமையைப்பறைசாற்றும்பக்திப்பாடல்களைபாடுவார்கள். நிலவும்நிழலும்இன்பமாகஇணைந்தமுற்றத்தில்பெண்கள்மட்டும்விழித்திருப்பார்கள்.


தில்லைஸ்ரீநடராஜருக்குக்களிமிகவும்பிடித்ததுஏன்? இதற்குப்புராணம்சொல்லும்தகவல்.. தில்லையில்சேந்தனார்என்னும்சிவபக்தர்வாழ்ந்துவந்தார். விறகுவெட்டி, விற்றுதன்குடும்பத்தைநடத்திவந்தாலும், தினமும்சிவபூஜைசெய்யத்தவறமாட்டார். அத்துடன்தன்னைநாடிவரும்சிவனடியார்களுக்குவிருந்தளித்துமகிழ்வார். சிவனடியார்கள்உணவுஉண்பதுசிவபெருமானேநேரில்வந்துஉண்பதாகநினைத்துமகிழ்வார். சிவனடியார்களைஉபசரித்தபின்தான்அவர்உண்பதுவழக்கம். சேந்தனாரின்பக்தியின்பெருமையைஅனைவரும்தெரிந்துகொள்ளவேண்டும்என்றுதில்லைவாசன், திருவுள்ளம்கொண்டார். திருவாதிரைத்திருநாளுக்குமுதல்நாள்இரவிலிருந்துகடுமையாகத்தொடர்மழைபெய்துகொண்டிருந்தது, தொடர்மழையால்எங்கும்வெளியில்விறகுவெட்டச்செல்லமுடியாமல்தவித்தார்சேந்தனார். காட்டிற்குச்சென்றுவிறகுவெட்டிக்கொண்டுஅதைவிற்றுவந்தால்தான்அன்றையபொழுதுஓடும். வீட்டில்சமைப்பதற்குஎந்தப்பொருளும்இல்லை.
இந்தஇக்கட்டானநிலையில்சிவனடியார்யாராவதுவந்தால்என்னசெய்வது? அவர்களைஎப்படிஉபசரிப்பது? என்றுஅவர்மனைவியும்சேந்தனாரும்கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அவர்கள்வீட்டின்வாசல்முன், திருச்சிற்றம்பலம்... சம்போமகாதேவா... என்றகுரல்கேட்டுவெளியேவந்தவர்கள்மழைத்தூறலில்சிவனடியார்ஒருவர்நின்றுகொண்டிருந்ததைக்கண்டதும், அவரைமகிழ்வுடன்வீட்டிற்குள்அழைத்து, அவருக்குஆசனம்அளித்துபணிவிடைசெய்தார்கள். சிவனடியாரின்பசியைப்போக்கவீட்டில்சமைப்பதற்குஒன்றும்இல்லைஎன்பதால், சேந்தனாரின்மனைவி, வீட்டில்இருந்தசிறிதளவுஅரிசிமாவில்வெல்லப்பாகுதயாரித்துக்கலந்துகளிகிளறினாள். சிவனடியாரும்அவர்கள்கொடுத்தகளியைஉண்டு, மகிழ்வுடன்அவர்களைவாழ்த்தி, விடைபெற்றுச்சென்றார்.

மறுநாள்காலைசேந்தனாரும், அவர்மனைவியும்ஸ்ரீநடராஜப்பெருமானைத்தரிசிக்கசிவாலயம்சென்றார்கள். அங்குகோயிலைத்திறந்ததில்லைவாழ்அந்தணர்கள், இறைவன்சன்னதியில்களிசிதறிக்கிடப்பதைக்கண்டுவியந்தார்கள். சேந்தனாரும்அவர்மனைவியும்இறைவன்முன்களிசிதறிக்கிடப்பதைக்கண்டுஆச்சரியமடைந்தனர். சேந்தனாரும், தமதுவீட்டிற்குசிவனடியார்வந்ததையும், அவருக்குக்களிகொடுத்துஉபசரித்ததையும்அந்தணர்களிடம்கூற, இதுநடராஜப்பெருமானின்திருவிளையாடல்என்பதைஅறிந்து, சேந்தனாரையும்அவரதுமனைவியையும்போற்றிமகிழ்ந்தார்கள். அன்றிலிருந்துமார்கழிதிருவாதிரைத்திருநாளில்களிசெய்துஸ்ரீநடராஜப்பெருமானுக்குநிவேதனம்செய்வதுவழக்கமாகிவிட்டதுஎன்றுபுராணம்கூறுகிறது. மார்கழிமாதத்திருவாதிரைஅன்றுவிரதம்மேற்கொண்டுதிருவாதிரைக்களியைஉண்பவர்நரகம்செல்லமாட்டார்கள்என்பதுநம்பிக்கை.
நன்றி தினமலர்                                                                 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! மிக்க நன்றி!


Viewing all articles
Browse latest Browse all 1537