Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 3

$
0
0

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 3


கடந்த இரண்டு பகுதிகளில் தமிழ் நூல்களை எழுதியவர்கள் நூல் விளக்கம், பகுதிகள் சிறப்பு பெயர்கள் போன்றவற்றினை பார்த்தோம். இன்று சில தூய தமிழ் சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம். உங்களோடு சேர்ந்து நானும் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

நல்ல தமிழ் அறிவோம்!

உனக்கு பையனா பொண்ணா?  வயசு என்னா? என்று பொதுவாக கேட்பதுண்டு அந்த வயசு என்பதற்கு தூய தமிழ் சொல் என்ன தெரியுமா?  அகவை

பொறுத்தவர் பூமி ஆள்வார் என்று ஒரு பழமொழி உண்டு! அந்த பூமியை அகிலம்என்று நல்ல தமிழில் அழைக்கலாம்.

வாழை மரம் கட்டாமல் எந்த விசேஷமும் நடப்பது இல்லை! தன்னையே தரும் வாழைக்கு தமிழில் அசோகு என்றொரு பெயர் உண்டு என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

குறளோவியம் படைத்தவர் கலைஞர் என்றும் அவரது தாயார் பெயர் அஞ்சுகம் என்பதும் தமிழர்கள் பலர் அறிந்திருப்பார்கள் அந்த அஞ்சுகம்என்பது என்ன தெரியுமா? கிளியைத்தான் நல்ல தமிழில் அஞ்சுகம் என்று  அழைக்கிறோம்.

சிலிண்டர் விற்கும் விலைக்கு விறகு அடுப்புக்கே போய்விடலாம் என்று நினைத்தாலும் விறகும் இன்று பொன் போல விலை பலமடங்கு ஏறிவிட்டது. விறகின் அழகிய தமிழ் பெயர் கறல்.

கலாப காதலா! என்று பாடல் வரிகள் கேட்டிருப்பீர்கள்! கலாபம் என்றால் என்ன தெரியுமா? தோகை என்பதன் நல்ல தமிழ் தான்கலாபம். மயிலுக்கும் இந்த பெயர் உண்டு!

பிள்ளையார் இல்லா ஊர் இருக்காது. அந்த விநாயகனை  தமிழ் கரிமுகன்என்று அழைக்கிறது. கரி என்றால் யானை! யானை முகத்தோனை கரிமுகன் என்று அழைப்பது நியாயம் தானே!


தினமும் ஓளிக்கடலை துலக்கு என்றால் நீங்கள் அது என்னப்பா ஓளிக்கடல் என்று கேட்பிற்கள்! ஓளிக்கடல்தான் ஒருவரின் முக அழகை சிறப்பிக்கும். சொல்லை தெளிவாக பேச வைக்கும் பல் போனால் சொல் போச்சு! என்று பழமொழி சிறப்பிக்கும் அழகு பற்களைத்தான் ஒளிக்கடல்என்கிறது தமிழ்.

அவ ரொம்ப அழகு!  இந்த பூ மிகவும் அழகு என்று அழகுக்கு அழகு சேர்க்கும் சொல்லாக  ஒயில்என்ற சொல் அமைந்து  சிறப்பிக்கிறது.

ஆதவனை கண்டால் மலரும் தாமரைக்கு  மற்றொரு தமிழ் சொல் மரை மலர்!

         பொங்கல் பண்டிகைக்கு மனைவி வாங்கி அடுக்கிய சேலைகளை பார்த்து மயங்கி விட்டீர்களா? மயக்கத்திற்கு நல்ல தமிழ் மருட்சி!
        நாட்டில் மலினங்கள் மலிந்து விட்டன என்றால் உங்களுக்கு புரியாது! குற்றங்கள் மலிந்து விட்டன என்றால் ஒத்துக் கொள்வீர்கள்தானே! குற்றங்களைமலினங்கள் என்கிறது தமிழ்.
     காற்றுக்கு மருத்து என்பது நல்ல தமிழ்
இவ்வளவும் படிக்கையிலே உங்களுக்கு ரொம்ப ஆயாசம் வந்திருக்கும்!  அதாங்க களைப்பு!களைப்பு போக்கிங்க! அடுத்தவாரம் இன்னும் சில சொற்களை பார்க்கலாம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!