கோவைப் பேரூர் பட்டீஸ்வரர்!
பெருமாள் கோயில்களில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதம் கதவு திறக்கப் படும். ஆனால் கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. பங்குனி உத்திரம், ஆருத்ரா, போன்ற தினங்களில் நடராஜர், சிவகாமி அம்மன் வீதியுலா சென்று திரும்பும் சமயம் சிவகாமி அம்மன் மட்டும் இந்த சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் நுழைவாள். அண்ணன் மகாவிஷ்ணுவிற்கு உரிய வாசலில் தங்கை அம்பிகை உரிமையாக நுழைவதாக சொல்லுகிறார்கள்.
பிறவாப்புளி: ஒரு மரத்தில் உள்ள எல்லா விதையும் முளைக்காது என்று உங்களால் சொல்ல முடியுமா? நிச்சயம் சொல்ல முடியாது அல்லவா? பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத் தலவிருட்சம் பிறவாப் புளி எனப்படுகிறது. இதன் விதைகள் முளைப்பது இல்லை. முக்தி அளித்து பிறவா வரம் தரும் இறைவன் ஆலய தல விருட்சமான இதன் விதைகளும் முளைப்பது இல்லையாம். இந்த ஊர் மாடுகள் போடும் சாணத்தில் புழுக்கள் தோன்றாதாம்.
நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை மட்டும் அபிஷேகம் செய்யப்படும். ஆனால் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நடராசப்பெருமானுக்கு ஆண்டில் பத்துமுறை அபிஷேகம் செய்விக்கப் படுகிறது. சிவாலயங்களில் ஆடும் நடராசரை காண்போம். இவர் ஆடி முடிக்கும் தருவாயில் உள்ள நடராசர். இந்த நடராஜரின் குறும்புப் பார்வை மிக அழகானது. சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இத்தலம் கருதப்படுகிறது. மேலைச்சிதம்பரம் என்றும் வழங்கப்படுகிறது.
தலவரலாறு: முன்னொருசமயம் பிரம்ம தேவர் படைப்புத்தொழில் செய்ததில் களைத்துப் போக நாரதர் காமதேனுவை படைப்புத்தொழில் செய்ய ஈசனை நோக்கி தவம் செய்ய சொன்னார். காமதேனுவும் இத்தலத்தில் வந்து இங்கு புற்று வடிவில் இருந்த ஈசனை வழிபட்டு தவம் இருந்தது. ஒருசமயம் காமதேனுவின் கன்றான பட்டி புற்றாக இருந்த சிவனை காலால் மிதித்து விட்டது. காமதேனு சிவனிடம் கன்று செய்த தவறை மன்னிக்கும்படி கேட்டது.
புற்றிலிருந்து வெளிப்பட்ட ஈசன், இருவரையும் ஆசிர்வதித்து அருளினார். பட்டி மிதித்தமையால் வெளிப்பட்டமையால் பட்டீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
சிவனின் நடனம் காண விரும்பிய மகாவிஷ்ணு பட்டி முனி என்ற பெயரில் இடையனாகவும் பிரம்மா கோமுனியாக பசு வடிவில் இங்கு வந்ததாக ஐதீகம். நடராஜருக்குரிய சபைகளில் இது கனக சபையாகும். இங்குள்ள கனக சபையில் நடராஜர் எழுந்தருளி நடனமாட அருகில் கோமுனி, பட்டிமுனி உள்ளனர். தத்துவங்கள், மற்றும் வேதத்தை குறிக்கும் தூண்கள் 3 பஞ்சாட்சர படிகள் என விஷேசமாக சபை அமைந்துள்ளது.
இக்கோயிலின் தீர்த்தம் கொம்பு தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. பட்டிஸ்வரரை வழிபட்ட காமதேனு தன் கொம்பினால் தோண்டி உண்டாக்கிய தீர்த்தம் இது. ‘சிருங்கத் தீர்த்தம்’ என்று வடமொழியில் வழங்கப்பட்டது. இங்குள்ள பைரவர் ஞான பைரவர் என்று வழங்கப்படுகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இந்த ஆலயத்தில் உள்ள தட்சிணா மூர்த்தி சன்னதியில் விஜயதசமியில் அட்சராப்பியாசம் நடப்பது இன்னொரு சிறப்பான செய்தியாகும்.
சிவலிங்க சொருபத்தில் பீட சக்தியாக மனோன்மனி அம்பாள் பாவிக்கப்படுகிறது. இந்த அம்பிகையை நாம் தரிசிக்க முடியாது. ஆனால் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் இந்த அம்பிகைக்கு தனி சன்னதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
ஆனித்திருமஞ்சன விழா
திருப்பேரூர்பட்டீசுவரர்கோயிலில்ஆண்டுக்கொருமுறைநாற்றுநடும்விழாஆனிமாதத்தில்கிருத்திகைதொடங்கிபூராடநட்சத்திரத்தில்நாற்றுநடவும், உத்திரத்தில்திருமஞ்சனமும்ஆககோலாகலமாய்நடக்கிறது. காஞ்சிநதிக்கரையில்நாற்றுநடும்திருவிழாஇன்றும்சிறப்பாகநடைபெறுகிறது. இவ்விழாஏற்பட்டவரலாறுபின்வருமாறு
சகலமும்தானே என்றதத்துவத்தைசுந்தரருக்குஉணர்த்தஎண்ணிய சிவபெருமான், சுந்தரர்திருப்பேரூர்வந்திருந்தபோதுவிவசாயியாகஅவதாரமெடுத்தார். சிவபெருமான்பள்ளன் என்ற விவசாயியாகவும், உமாதேவிபள்ளிஎன்றவிவசாயப்பெண்ணாகவும்அவதரித்துநாற்றுநடச்சென்றனர். தனதுபக்தரானசுந்தரரைபற்றிநன்குஅறிந்தசிவபெருமான்'சுந்தரன்வந்துகேட்டால்நான்இருக்கும்இடத்தைசொல்லாதே'என்று நந்திதேவரிடம் எச்சரித்துவிட்டுசென்றார். இறைவனைதரிசிக்ககோயிலுக்குவந்தசுந்தரமூர்த்திநாயனார், கோயிலில்இறைவனைகாணாமல்நந்திதேவரைவிசாரித்தார். சிவபெருமானின்எச்சரிக்கையையும்மீறிநந்திதேவர்சுந்தரரிடம்இறைவன்இருக்குமிடத்தைகூறிவிட்டார். சுந்தரரும்நதிக்கரையில்நாற்றுநட்டுக்கொண்டிருந்தசிவபெருமானைதரிசித்துமகிழந்தார். நந்திதம்சொல்மீறியதற்காகக்கோபம்கொண்டு, கையிலிருந்தமண்வெட்டியால்நந்தியின்தாடையில்சிவபெருமான்அடித்துவிட்டார். (இந்தக்கோயிலில்நந்திதேவரின்தாடைசற்றுசப்பையாகக்காட்சியளிக்கிறது). பிறகுநந்திதேவர், மன்னிப்புவேண்டிதவமிருக்க, தனது தாண்டவதரிசனத்தைஅவருக்குசிவபெருமான்அருளினார். பிறப்பில் பேதமில்லை என்று இறைவனே உணர்த்திய தலம் இதுவாகும்.
கரிகால் சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.
இத்தலத்தைதரிசிப்போருக்குஇனிபிறப்பில்லைஎன்பதுபொருள். ஆதிசங்கரர்தன்தாயின்முக்திவேண்டிஇங்குபிரார்த்தனைசெய்துள்ளார். இங்குள்ளபனைமரம்"இறவாப்பனை'எனப்படுகிறது. இங்குதரிசனம்செய்தால்அழியாப்புகழ்கிடைக்கும்என்றுபொருள்.
கோவையில் இருந்து பத்துகிலோ மீட்டர் தூரத்தில் பேரூர் உள்ளது. காந்திபுரம் டவுன்ஹாலில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
நடை திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை.
தொலைபேசி: 0422- 2604989.
ஆனித்திருமஞ்சன நாளில் ஆனந்த கூத்தாடும் பேரூர் நடராசர் தரிசனம் காண்போம்! நலம்பெறுவோம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!