தளிர் சென்ரியூ கவிதைகள்! 5
பணமுதலைகள்
முழுங்கின
மலையழகு!
ஆறுவழிகள் பெருகின
அருகிப்போயின
கிராமங்கள்!
கழனிகள் எல்லாம்
கலர் தோரணங்கள்!
உதித்தது புதிய நகரம்!
காகிதத்தை பயன்படுத்தாதே!
அறிவுறுத்தின நகரெமெங்கும்
ஆயிரம் சுவரொட்டிகள்!
கால மாற்றம்!
ஆயிரங்களில் இருந்து லட்சங்களுக்கு
விலை போகிறது உயிர்!
தோண்டத் தோண்டப் பிணங்கள்!
நாற்றமெடுத்தது
அதிகாரிகளின் ஊழல்!
பசி ஆற்றிக்கொண்டிருக்கிறான்
பசியோடு
ஓட்டல் பணியாள்!
மது ஆற்றில்
நீந்துகிறது
குறைக்க குறைக்க
ஏறுகிறது விலை!
நடிகையின் உடை!
உயரத்தில் ஏறுகிறது விலைவாசி
தாழ்ந்து போகிறது சாமான்யனின்
தராசு!
தட்டுக்களில் சில்லறை
சிலர் உள்ளே சிலர் வெளியே!
கோயில்!
குறைகளைக் கரைய
நிறைந்தன உண்டியல்கள்!
கோயில்!
கன்று போட்டது!
ஆறியது குழந்தையின் பசி!
பசு!
உயர்வை நோக்கிய பயணம்
உயிரை பறித்து முடிந்தது!
கட்டுமானத் தொழிலாளார்கள்!
பூக்களை விற்றுக் கொண்டிருத்தாள்
வாடிக்கொண்டு இருந்தது முகம்!
சுத்தமான இடம்
அசுத்தமாகின்றது!
கோயில்கள்!
அசுத்தமாகின்றது!
கோயில்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!