Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

வளைகாப்பு நாயகி குங்குமவல்லி!

$
0
0
வளைகாப்பு நாயகி குங்குமவல்லி!



ஆலயங்கள் தோறும் அருள்பாலிக்கும் அம்மனை விதவிதமான அலங்காரங்களால் அலங்கரித்து அழகு பார்த்து கொண்டாடுவது பக்தர்களின் பரம விருப்பம். மலர் அலங்காரம், பழ அலங்காரம், காய்கனி அலங்காரம், நகை அலங்காரம், சந்தன காப்பு, விபூதி, மஞ்சள், குங்கும காப்பு அலங்காரங்கள் என்று பலவகையில் அம்மனை அழகுபடுத்தி பார்த்து அவள் கருணை பெற்றுய்வது பக்தர்களின் விருப்பம்.
    அந்த வகையில் திருச்சி உறையூர் தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் குங்குமவல்லி அம்மனுக்கு வலையல்களால் அலங்காரம் செய்து அழகு பார்ப்பது கண்கொள்ளா காட்சியாகும். பெண்கள் என்றாலே மஞ்சள், குங்குமம், வளையல் முக்கிய பங்கு வகிக்கும். வளை சூடா பெண்கள் இல்லை. அந்த வகையில் இந்த குங்குமவல்லித் தாயாருக்கு வலையல்களால் அலங்கரித்து அகம் மகிழ்கிறார்கள் பக்தர்கள்.
   அது போலவே பொதுவாக கோயில்களில் குங்குமம், விபூதி பிரசாதம் கிடைக்கும். இங்கு அம்மனுக்கு வளையல் சார்த்தி அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது. தை மாத  மூன்றாம் வெள்ளியில் நடைபெறும் வளைகாப்பு வைபவம் இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். கர்ப்பிணி பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி தங்கள் பிரசவம் சுகமாக அமைய வேண்டுகின்றனர்.

   சுமார் ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் சோழர்களால் கட்டப்பட்டது. இறைவன் தான் தோன்றீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாகும். இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு நவகிரகங்கள் தங்கள் நாயகியருடன் தம்பதி சமேதராக வீற்றிருப்பது ஆகும். இந்த கோலத்தை வேறு எங்கும் காண்பது அரிதான் ஒன்றாகும்.


   இக்கோயிலின் தெற்கு பிரகாரத்தில் தில்லைக் காளி மிக கம்பீரமாக எழுந்தருளி உள்ளார். இவருக்கு பவுர்ணமி, அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. நிகும்பலா யாகம் எனப்படும் மிளகாய் வற்றல் கொண்டு செய்யப்படும் யாகமும் இங்கு செய்விக்கப்படுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு எலுமிச்சை மாலை சாற்றி வழிபட்டால் சகல தோஷங்கள் விலகி துன்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை.


  இங்குஅருள்பாலிக்கும்குங்குமவல்லிஅம்பிக்கைக்குவருடந்தோறும்தைமாதம்மூன்றாவதுவெள்ளி, சனி, ஞாயிறுகளில்வளைகாப்புஉற்சவம்நடைபெறுகிறது. இவ்விழாவில்கர்ப்பிணிகளும், குழந்தைபாக்கியம், மணப்பேறுவேண்டுபவர்களும்கலந்துகொண்டுபயன்பெறுகின்றனர். அச்சமயம்அம்மனைஆயிரக்கணக்கானவளையல்களைக்கொண்டுஅலங்காரம்செய்வார்கள். அந்தவளையல்களைஅங்குவரும்பெண்களைஅம்மனாகபாவித்துஅவர்களுக்கும்அணிவிப்பர். வெள்ளிக்கிழமையன்றுகர்ப்பிணிப்பெண்களுக்குவளையல்அணிவிப்பதால், அவர்கள்சுகப்பிரசவத்தில்குழந்தைபெறுவார்கள்என்றநம்பிக்கைநிலவுகிறது. சனிக்கிழமையன்றுகுழந்தைஇல்லாதபெண்களுக்குவளையல்அணிவிக்க, அவர்களுக்குகுழந்தைபாக்கியம்விரைவில்கிடைக்கும். ஞாயிறன்றுமணமாகாதபெண்கள்வளையல்அணிந்துகொள்ள, அவர்களுக்குவிரைவாகதிருமணம்நடந்தேறும்என்பதுஇங்குள்ளபக்தர்களின்நம்பிக்கை.

செல்வவளம்தரும்மகாலட்சுமிசன்னதிக்குநேராகவில்வதளம்இருப்பதுகுறிப்பிடத்தக்கது. மகாலட்சுமியின்அம்சமேவில்வம்என்பதால், இத்தகையஅமைப்புஇயற்கையாகவேஏற்பட்டுள்ளதுபோலும். இதுமிகவும்விசேஷமானஅமைப்பு.


சூரவாதித்தசோழமன்னன்ஒருமுறைநாகலோகம்சென்றான். அங்கிருந்தகாந்திமதிஎன்றநாககன்னிகையின்மீதுஅவனுக்குகாதல்ஏற்பட்டது. அவள்சிவபக்தை. தினமும்திருச்சிராப்பள்ளிமலையில்வீற்றிருக்கும்தாயுமானசுவாமியைவணங்கவரும்வழக்கம்உடையவள்.

நாகலோகத்தலைவரானஆதிசேஷனின்அனுமதிபெற்றுகாந்திமதியைசூரவாதித்தன்மணந்துகொண்டான். திருமணத்துக்குபிறகும்மலையிலுள்ளசிவனைவணங்ககாந்திமதிதவறவில்லை.

இந்நிலையில்அவள்கர்ப்பவதியானாள். அவளுக்குமலையேறமிகவும்சிரமமாகஇருந்தது. இந்தகஷ்டத்தையும்பொருட்படுத்தாமல், அவள்மலையேறத்தவறவில்லை. ஏற்கனவே, காவிரிக்கரையில்ஒருபெண்ணுக்குபிரசவம்பார்த்து, "தாயும்ஆனவன்'எனபெயர்பெற்றசிவபெருமான், தன்பக்தையானகாந்திமதியின்மீதுஇரக்கம்கொண்டார்.

ஒருநாள்காந்திமதியால்நடக்கமுடியவில்லை. வயிற்றுப்பாரத்தையும்சுமந்துகொண்டுமலையில்எப்படிஏறுவதுஎனதவித்தாள். அவள்மீதுஇரக்கம்கொண்டசிவன், தானேஅங்குதோன்றினார்.

""
மகளே! காந்திமதி, கலங்காதே, இனிஉனக்குபிரசவம்ஆகும்வரை, நீமலைக்குவந்துஎன்னைதரிசிக்கவேண்டாம். இங்கேயேஉனக்காகநான்லிங்கவடிவில்அமர்வேன். நீஇவ்விடத்திலேயேஎன்னைவணங்கிதிரும்பலாம்.

தானாகஉன்முன்தோன்றியஎனக்கு"தான்தோன்றீஸ்வரர்'என்றதிருநாமம்ஏற்படும். என்மனைவிபார்வதிதேவி, உன்போன்றபெண்களுக்குதாயாய்இருந்துபிரசவம்பார்ப்பாள். குங்குமம்காப்பாள். அவளுக்கு"குங்குமவல்லி'என்றதிருநாமம்ஏற்படும்,''என்றார்.

காந்திமதிமகிழ்ச்சியடைந்துபிரசவகாலம்வரைஅங்குவந்துஇறைவனைவணங்கி, அழகியகுழந்தையைப்பெற்றெடுத்தாள்.

இருப்பிடம் :

திருச்சிஜங்ஷன்பஸ்ஸ்டாண்டில்இருந்துசத்திரம்பஸ்ஸ்டாண்ட்செல்லும்வழியில், ருக்மணிதியேட்டர்ஸ்டாப்பில்இறங்கிகோயிலைச்சென்றடையலாம். உறையூர்ரோட்டில்கோயில்அமைந்துள்ளது. 


வளங்கள் வர்ஷிக்கும் வரலஷ்மி விரதமும், சகல நன்மைகள் தரும் பிரதோஷ விரதமும் கூடி வரும் இந்த நாளில் சுயம்புவாய் தோன்றிய தான் தோன்றீஸ்வரரையும் வளைகாப்பு நாயகி குங்குமவல்லியையும் தரிசிப்பது சிறப்பான ஒன்றாகும்.

 படங்கள் உதவி: கூகுள் இமேஜஸ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!