ஜோக்ஸ்!
1. தலைவருக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம் போயிருச்சு!
ஏன்?
பின்ன என்ன ஜெயில்ல இருந்து ரிலீஸாகி 100 நாள் ஆனதுக்கு வெற்றிவிழா கொண்டாடனுன்னு சொல்றார்!
2. பொண்டாட்டி ஊருக்கு போறான்னு இவ்வளவு சந்தோஷப்படறீயே ஏன்?
‘ஹோம் ஒர்க்’ ஒரு வாரம் செய்யாம ஜாலியா இருக்கலாமே!
3. அள்ளி அள்ளி சம்பாதிக்கிறாங்க ஆனா கிள்ளி கிள்ளித்தான் கொடுக்கிறாங்கன்னு ஏட்டு புலம்பறாரே என்ன விஷயம்?
மணலை அள்ளி சம்பாதிக்கறவங்க மாமூலை கிள்ளித்தான் கொடுக்கிறாங்கன்னு சிம்பாலிக்கா சொல்றார்
4. டிஸ்கோவுக்கு வரிபோடும் சேனலை தடை செய்ய வேண்டும்….
தலைவரே அது டிஸ்கோவரி இல்லை! டிஸ்கவரி சேனல்!
5. தலைவரை சுத்தி இவ்ளோ கூட்டம் எறும்பு மாதிரி மொய்க்குதே என்ன விஷயம்?
ஒரு வேளை தலைவருக்கு சக்கரைவியாதின்ற விஷயம் தெரிஞ்சிடுச்சோ என்னமோ?
6. அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
இவருக்கு வர வர நாக்கு நீளமாயிருச்சு டாக்டர்! அட்வைஸ் பண்ணுங்கன்னு சொன்னதுக்கு ஸ்கேல் எடுத்து அளந்து பார்த்துட்டு நார்மலாத்தானே இருக்குன்னு சொல்றார்!
7. வானம் பொழிகிறது பூமிவிளைகிறது உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி!
வசனமெல்லாம் சரிதான்! ஆனா வாங்கின கடனை அடைக்கனுமே மன்னா!
8. ஆடி மாசமானாலே தலைவர் கோயில் கோயிலா கிளம்பிடுவார்!
அவ்ளோ பக்தியா?
அங்கதானே இலவசமா கூழ்வாக்கறாங்க!
9. ஒரு கப் காபியைக் கூட உன்னாலே சூடாத் தரமுடியாதான்னு கோபத்துல என் பொண்டாட்டியை கேட்டுட்டேன்!
அப்புறம்!
அதற்கப்புறம் இன்னும் எதுலேயும் சூடு தணியலை!
10. விட்டுக் கொடுத்துப் போறதுதான் வாழ்க்கைன்னு என் மனைவிகிட்ட சொன்னது தப்பா போச்சு?
ஏன்?
நீங்க இந்த மாச சம்பளத்தை எனக்கு விட்டுக் கொடுத்துடுங்க! நான் என் வேலையெல்லாம் உங்களுக்கு விட்டுக் கொடுத்துடறேன்னு சொல்றா!
11. அந்த பிச்சைக்காரணுக்கு ரொம்பவும்தான் கொழுப்பு!
என்ன ஆச்சு?
ஸ்விஸ் அக்கவுண்ட்ல பணம் போட என்ன செய்யனும்னு கேக்கறான்!
12. ஒரு மேட்சிலேயும் ஆடாத அவரை எதுக்குங்க டீம்ல வெச்சிருக்காங்க!
அவரு “அவுட் ஸ்டேண்டிங்” பேட்ஸ்மேனாம்!
13. அவரு கட்டிக்க போற பொண்ணுக்கிட்ட விடாம பேசிக்கிட்டே இருக்காரே! கண்டிக்க மாட்டீங்களா?
விட்டுத் தள்ளுங்க! கல்யாணமானதும் இவனால பேசவா முடிய போவுது!
14. அவங்க ஏன் மத்தவங்க குழந்தைக்கு ஊட்டி விட்டுட்டு தன் குழந்தையை ஸ்கேல் வச்சு அளக்கறாங்க?
ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானே வளருங்கிறதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க!
15. அவரு தக்காளி வியாபாரம் பண்றாரு…
பெரிய பிசினஸ் மேன்னு சொல்லுங்க!
16. அந்த ஓட்டல்ல என்ன கலாட்டா?
தக்காளி சட்னி இல்லேன்னு சொன்னா அட்லீஸ்ட் மணத் தக்காளி சட்னியாவது கொடுக்க கூடாதான்னு கேக்கறாராம் கஸ்டமர்!
17. ஜட்ஜ்கிட்ட தலைவர் கேட்ட சந்தேகத்தை கேட்டு கோர்ட்டே சிரிச்சிருச்சு!
அப்படி என்ன கேட்டார்?
கனம் கோர்ட்டார் அவர்களேன்னு எல்லோரும் கூப்பிடறாங்களே நீங்க எவ்ளோ கனம்னு யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க நீங்களாவது சொல்லுங்கன்னுதான்!
18. மாப்பிள்ளை ‘ஜிகர்தண்டா’ வேணும்னு அடம்பிடிச்சார்! ஆனா ‘பிரியாணி’தான் கிடைச்சது!
கூல்டிரிங்ஸ் கேட்டா பிரியாணியையா வாங்கி கொடுப்பீங்க!
நீங்க வேற அவர் கேட்டது ஜிகர் தண்டா விசிடியை!
19. மந்திரியாரே! நம் ஆராய்சி மணியின் நாவை யாரோ அறுத்துவிட்டார்களாமே!
நீங்கள்தானே மன்னா! நம் நாட்டில் இனி ஆராய்சி மணியே ஒலிக்க கூடாது என்று சொன்னீர்கள்!
20. மன்னர் வாளை வீசியதும் எதிரிகள் ஓடிவிட்டார்களாமே!
வாளை நிலத்தில் வீசி நெடுஞ்சான் கிடையாக கீழே விழுந்தபின் எதிரிகள் என்ன செய்வார்கள்!
21. தற்கொலைக்கு முயற்சி பண்ணினவரை தடுத்திட்டேன்னு சொல்றீங்களே என்ன பண்ணாறு?
அடுக்குமாடி குடியிருப்புல ஒரு ப்ளாட் வாங்கிறதா இருந்தாரு!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!