Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

குழந்தைகள் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்!

$
0
0
 கிருஷ்ண ஜெயந்தி விரதம்!


கிருஷ்ணஜெயந்திஆண்டுதோறும்கிருஷ்ணரின்பிறப்பைக்கொண்டாடுகிறஇந்துசமயவிழாவாகும். ஆவணிமாதத்தில்தேய்பிறையின்எட்டாம்நிலையில் (அஷ்டமி) ரோகிணிநட்சத்திரம்சேர்ந்தநாளில்இவ்விழாநிகழ்கிறது. நமதுபண்டிகைகளில்கிருஷ்ணஜெயந்திக்குஎன்றுமேதனிஇடம்உண்டு. எப்போதெல்லாம்உலகத்தில்அதர்மம்தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம்பகவான்அவதரிக்கிறார். 

அந்தவகையில்அதர்மத்தைஅழிக்கபகவான்கிருஷ்ணன்பூலோகத்தில்வந்துபிறந்தநாளேகிருஷ்ணஜெயந்தியாகக்கொண்டாடப்படுகிறது. 
கிருஷ்ணஜெயந்திஅன்றுவீட்டில்மாலை 6 மணிக்குகண்ணனின்படத்தைஅலங்கரித்துநெய்விளக்குஏற்றவேண்டும். குழந்தைகளைகண்ணனாகவும், ராதையாகவும்அலங்கரிக்கவேண்டும். தேங்காய், பழம், வெற்றிலைபாக்குபோன்றபூஜைபொருட்களுடன்கண்ணனுக்குபிடித்தமானசீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூகலந்தகோதுமைபொங்கல், இனிப்புபூரி, மோர்குழம்பு, ரவாலட்டு, தேன்குழல், சர்க்கரைகலந்தவெண்ணை, பாசிப்பருப்புபாயாசம்போன்றபிரசாதங்களைபடைத்துகுழந்தைகளுக்குவழங்கவேண்டும். 
     நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம். 

தஹிகலா என்றால் என்ன தெரியுமா? பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலப்பது என்பர். வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.
 

மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணை மிகவும் பிடித்தமானது என நினைத்து அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணையை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள்.
 

தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணையைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். அவ்வாறு எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.
 


மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணை பால் போன்ற பலவிதமான பண்டங்களை உண்ணுவார்கள். பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வ்ரஜபூமியில் ஸ்ரீகிருஷ்ணன் தனது உணவுடன் தன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள்.
 

இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
 


கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமிசூத்திரம்
  • கோகுலாஷ்டமி (கிருஷ்ணாஷ்டமி) விரதம்வேறுஸ்ரீஜெயந்திவேறு
  • கோகுலாஷ்டமி (கிருஷ்ணாஷ்டமி) விரதம்சந்திரமாதமானசிராவணபகுளஅஷ்டமிதிதியேபிரதானம்
  • அஷ்டமிநள்ளிரவில்வியாபித்திருப்பதுமிகமுக்கியம்
  • இந்தகோகுலாஷ்டமி (கிருஷ்ணாஷ்டமி) விரதமஆடி (கடகம்) அல்லதுஆவணி(சிம்மம்) மாதத்தில்வரும்
  • ஆவணியில்வரும்பொழுதுஸ்ரீஜெயந்தியுடன்சேர்ந்துஅல்லதுமுன்னாள்அல்லதுபின்னாளில்வரும்
ஸ்ரீஜெயந்திசூத்திரம்

  • அஷ்டமிதிதி, ரோகினிநட்சத்திரம், ஹர்ஷணயோகம், ரிஷபலக்னம்சேர்க்கைமிகமுக்கியம்
  • சந்திரமாதமானசிராவணமாதத்தில்அல்லதுபாத்ரபதமாதத்தில்வரும்
  • சிராவணமாதத்திற்குஅதிகமுக்கியத்துவம்ஆயினும்சிராவணமாதத்தில்அஷ்டமிரோகினிசேர்க்கைஇல்லைஎனில்பாத்ரபதமாத்தில்செய்யலாம்
  • சூரியன்நிற்கும்சிம்மமாஸம்தவிரகடகம்(ஆடி), கன்னி(புரட்டாசி) மாதங்களில்செய்யக்கூடாது.
  • சிராவணமாதத்தில்அல்லதுபாத்ரபதமாதத்தில்அஷ்டமி, ரோகினிசேர்க்கைஇல்லைஎன்றால்அந்தவருடம்ஸ்ரீஜெயந்திஇல்லை!
வைகானஸஸ்ரீஜெயந்திசூத்திரம்
  • ஸ்ரீஜெயந்திசூத்திரம்இதற்குபொருந்தும்ஆயினும்
  • ரோகினிக்குகார்திகைதொடர்பு, அஷ்டமிக்குசப்தமியின்தொடர்புஇருக்கக்கூடாது.
பாஞ்சாரத்திரஸ்ரீஜெயந்திசூத்திரம்
  • ரோகினிக்குகார்திகைதொடர்பு, அஷ்டமிக்குசப்தமியின்தொடர்புஇல்லையெனில்மிகவும்விசேஷம்
  • அஷ்டமிமுடிவுகாலமும், ரோகினிமுடிவுகாலமும்உதயத்தில்இரண்டுநாழிகைஇருப்பின்அன்றுதான்ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி (ஸ்ரீவைஷ்ணவஜெயந்தி) ஆகும்
     என் மகள் வேத ஜனனி கிருஷ்ணர் வேஷத்தில்
இந்த வருடம் வரும் ஞாயிறன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. குழந்தைகளை மகிழ்விக்கும் இந்த விழாவை கொண்டாடி கண்ணன் அருளினை பெறுவோம்!

(தகவல்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை)
நன்றி: தினகரன், மாலைமலர், புரோகிதர் இணைய தளங்கள்


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!