Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

தளிர் லிமரிக் கவிதைகள்! பகுதி 3

$
0
0
தளிர் லிமரிக் கவிதைகள்!


1.முன்னாளில் அவர் ஜட்ஜு
இன்னாளில் அவர்தான் பத்திரிக்கை நியுசு
மு.கவை கலக்கிடும் மார்கண்டேய கட்ஜு

2. எங்க ஊருலேஎல்லாமே அம்மா!
 மத்தவங்க எல்லாம் சும்மா!
 எதுர்த்து நிக்க விட்டிடுவோமா?


3. சச்சினுக்கு கொடுத்தாங்க எம்பி!
 சபைக்கு ஒருநாளும் வரலையே தம்பி!
 சலுகைகள் இனிக்குதோ நம்பி!

 4.ஆட்கொல்லி நோய் எபோலா!
 ஆப்பிரிக்காவில் அடித்தது தபேலா!
 அகிலமே நடுங்குகிறது கோபாலா!

  5.வேட்டியை தடுத்தால் சிறை!
  விரைந்து போட்டார்கள் சட்டம்!
குடித்து கூத்தாடினால் யாருக்கு இருக்கு அக்கறை!

6 லார்ட்ஸில் ஜெயித்ததும் மப்பு!
 லாஸ் ஆனது பேட்டிங்கு!
 குக் வச்சாரு நல்லா ஆப்பு!

7.கோலிக்கு போட வேணும் வேலி!
குப்பத்துல ஆடுவாங்க கில்லி!
இந்தியன் டீமுக்கு பிடிச்சது கிலி!

8.நாடு மீது இல்லை அக்கறை
நாடிவரும் சில்லரையே துரை!
நாறிப்போச்சு தலைவர்களின் சமூக அக்கறை!


 9.செல்லில்  இருக்கும் கவனம்
 செயலில் இல்லை இக்கணம்!
 செத்துப்போனது சுதந்திரம்!

10.நாடே ஆகுதாம் டிஜிட்டல்!
நன்றே செய்கிறார் மோடி!
இன்றும் இருக்கிறான் ஏழை கோடி!

11.ஆறுகளில் இல்லை நீரு!
அடிமட்டத்தில் புகுந்தது கடல்!
அள்ளிக் குவித்தார்கள் மணல்!

12.பாலம் மேலே ரெயிலு!
பள்ளத்துல தள்ளாடுது தமிழனோட உயிரு!
வெள்ளோட்டம் போகுது மெயிலு!


13.ஆளாளுக்கு கொடுக்கிறாங்க விருது!
அதைக் கொண்டாட ஒரு பொழுது!
படம் பிடிச்சு காண்பிச்சா பணம் கொட்டுது!

14.சரம் சரமா போட்டாங்க சாலை!
சாலையோர மரமெல்லாம்  காணலை!
சல்லிசா பயணிக்க கொடுக்க வேணும் விலை!


15. கடலிலே கலக்குது இரசாயணம்!
   கவுச்சியும் ஆகுது பாஷாணம்!
   ஆலைகள் மீறுது விதிமுறை!
அரசுக்கு அதிலில்லை அக்கறை!

16. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
    அதுக்கு நடுவே சீரியலு!
    வருஷம் தவறாம விருது!
    வளர்ந்துடும் பாரு டி.ஆர்பி!


17. உள்ளத்தில் இருக்குது உறுதி!
   உழைப்புக்கு கிடைக்குது வெகுமதி!
   ஆணுக்கிங்கு பெண் சம நீதி!
   

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!