Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

இந்து தீவிர வியாதிகள்!

$
0
0
 இந்து தீவிர வியாதிகள்!


சென்ற இரண்டு வாரங்களாக புதன் கிழமைகளில் மதங்களில் நடக்கும் சில கேலிக்கூத்துக்களையும் அது என்னை பாதித்தமையும் குறிப்பிட்டேன்.
   இந்து தீவிர வியாதிகள் என்ற தலைப்பில் இந்த வாரம் பார்க்கபோவது மோடி தர்பார் ஆசாமிகளை. ஆர்.எஸ்.எஸ் என்றொரு அமைப்பு. அதன் ஆதி அந்தம் இதைப்பற்றியெல்லாம் நான் ஏதும் அறியேன். அறிந்து கொள்ளும் ஆசையும் இல்லை. இதன் கிளைகளாக இந்து முன்னனி போன்ற இயக்கங்கள். இவை மதம் வளர்க்கின்றேன் என்ற போர்வையில் மதம் பிடித்து அலைகின்றன என்றே சொல்லவேண்டும். மதம் என்ன செடியா கொடியா நட்டு வளரவைக்க.
   இந்த அமைப்பினர் செய்யும் செயல்கள் அனைத்தும் வேடிக்கையாக இருக்கும். பசுவை தெய்வமாக மதிக்க வேண்டும். பசுவைக் கொல்லக் கூடாது. கோமாதா பூஜை செய்கிறோம். எல்லோரும் உங்கள் ஊர் பிள்ளையார் கோவிலுக்கு வாருங்கள் என்பார்கள். வீடு வீடாக போய் அழைப்பார்கள். இதற்கென ஓர் அமைப்பாளர். அவருக்கு சில தொண்டர்கள். இரண்டு மூன்று தினங்கள் வீடு வீடாக வந்து கோயிலுக்கு அழைத்துச் சென்று பிரசங்கங்கள் நடத்தி பசு ஒன்றிற்கு பூஜைகள் புனஸ்காரங்கள் செய்து ஆரத்தி எடுத்து அனைவரையும் வழிபடச் சொல்வார்கள். பிரசாதம் தருவார்கள் அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு கலைந்து போகும் பொதுமக்கள் அன்றைய மாலையிலேயே அந்த அமைப்பாளரின் மிலிடரி ஓட்டலில் பிரியாணியும் குஸ்காவும் ஒரு வெட்டு வெட்டுவார்கள்.
     விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால் போதும்! ஊரெல்லாம் ஒரே ரணகளம்தான். மூலைக்கு மூலை பிள்ளையார் வைத்து அமர்க்களப்படுத்தி ஊர்வலம் வந்து காசு வசூலித்து இறுதி நாளன்று டாஸ்மாக்கிற்கு தானம் செய்து விட்டு கடலில் கரைத்து விடுவார்கள்.
   இதில் போட்டிவேறு! அவன் ஐந்தடி பிள்ளையாரா? நான் ஆறடி வைப்பேன்! அவன் ஒருவேளை பூஜை செய்து படையலா? நான் மூன்று வேளை படையல் போடுவேன்! பிள்ளையாருக்கு ஆறடி மாலையா? நான் இன்னும் பெரியதாக போடுவேன்! எல்லாம் எத்தனை நாளைக்கு இந்த பிள்ளையார் வைக்கும் போதே கடலில் போட நாள் குறித்துத்தானே அனுப்புகிறார்கள் அதுவரை.
   பாவம் உள்ளூர் விநாயகர் கோவிலில் விளக்கேற்றக் கூட எண்ணெய் இருக்காது. இருட்டில் அமர்ந்து இருப்பார் பிள்ளையார். ஆனால் இந்த ரெடிமெட் பிள்ளையார்களோ அமர்க்களப்படுவார்கள்.
   இன்னுமொன்று இவர்கள் செய்வது படிக்கிற பிள்ளைகளை கெடுப்பதுதான்.  ‘சாகா’ என்றொரு பயிற்ச்சி! நல்ல உடற்பயிற்சிதான் இல்லையென்று சொல்லவில்லை! அதை விடுமுறை தினத்தில் சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை! மாலைவேளைகளில் பிள்ளைகளை கூட்டிச்சென்று நம் மதத்தை காக்கிறோம் அது இதென்று பெற்றோர்களை சரிகட்டி அழைத்துச் சென்று ஓர் இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி இவர்களுடைய பாட்டு பிரசங்கம் என்று வீணடிக்கின்றனர்.

    பிள்ளைகளின் கல்வியை இப்படி பாழடிக்கலாமா? பெரும்பாலும் இந்த பயிற்சிக்குச் செல்பவர்கள் கொஞ்சம் மக்கு பசங்களே! படிப்புக்கு டிமிக்கி கொடுத்து இங்கே செல்கின்றனர். ஏற்கனவே படிப்பில் பின் தங்கியிருப்பவனுக்கு இதனால் இன்னும் பின்னடைவுதானே!
   இப்படி இந்த அமைப்புக்களால் என்ன பிரயோசனம்! இதனாலெல்லாம் இந்துமதம் வளர்ந்துவிடுமா என்ன? ஏதோ ஓர் அரசியல் கட்சியின் கைக்கூலிகளாக இருந்துகொண்டு இன்னும் சில கைக்கூலிகளை வளர்க்க வேண்டுமானால் இது உதவலாம். உண்மையில் மதம் வளர்க்க நினைப்பவர்கள் இப்படி புதிது புதிதாக பிள்ளையார் வைக்காமல் இருக்கும் கோவில்களை சீரமைத்து அதில் விளக்கேற்றி வைக்கலாம். இந்துமதத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவலாம். இலவசமாக டியுசன் சொல்லித் தரலாம். இதையெல்லாம் விட்டு இப்படி சாகா அது இதென்று பிள்ளைகளை அழைத்துச் சென்று அவர்கள் எதிர்காலத்தை பாழாக்கலாமா?


 இவர்கள் இப்படி என்றால் இப்போதெல்லாம் திடீர் சாமியார்களும் சித்தர்களும் முளைத்து விடுகிறார்கள். அவர்களை குருஜி என்றுதான் பக்தியோடு அழைக்க வேண்டியிருக்கிறது. காவி வஸ்திரம் ஒன்றை அணிந்து கொண்டு ஒரு முழம் தாடியும் உச்சிக்குடுமியும் வைத்துக்கொண்டால் சுவாமிஜி ஆகிவிடுகிறார்கள்.
    ஏதோ ஒன்றை வசியம் செய்து கொள்கிறார்கள். அல்லது அரைகுறையாக இந்துமத நூல்களையும் ஜோதிடத்தையும் கற்றுவைத்துக்கொண்டு ஒரு கோவிலை கட்டி வைத்துக் கொண்டு குறி சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
    நம் மக்களுக்கு எல்லாமே கவலைதான்! காலையில் எழுந்ததும் ஒண்ணுக்கு வரவில்லை என்றால் கூட யாரோ செய்வினை செய்து விட்டார்கள் என்று சந்தேகம் கிளம்பிவிடுகிறது. ஓடு அந்த கோவிலுக்கு சாமியாரை பார்! அவர் குறி சொல்லுவார். பரிகாரம் சொல்லுவார் என்று நமக்கு இலவச ஆலோசனை மையங்கள் அண்டைவீடு பக்கத்துவீடு எதிர்வீடு என்று ஏராளம்.
     குறிப்பாக பெண்களிடையே இந்த குறி சொல்பவர்களுக்கு செல்வாக்கு அதிகம். இவர்கள் ஒன்று சொல்லிவிட்டால் அதை அப்படியே செய்து முடிக்கத் தயாராக இருக்கின்றனர் பெண்கள். அந்தக் கோவிலுக்கு போ எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்று! பூசணிகாயில் விளக்கேற்று! தேங்காய் மூடியில் விளக்கேற்று. மிளகாய் அரைத்து இந்த சாமிக்குத் தடவு! காசை வெட்டிப்போடு! இப்படி எண்ணற்ற பரிகாரங்கள் அவர்கள் கற்பனையில் உலா வருகின்றன.
    இந்த மிளகாய் அரைத்து தடவுதல் அதை நினைக்கும்போதே நமக்கு உடம்பு எரிகிறது! உண்மையில் அந்த சாமிக்கு உயிர் இருந்தால் தடவுபவரை சுட்டெரித்துவிடும். இது போதாதென்று தாயத்து குளிகை என்று இன்னும் என்னமெல்லாமோ செய்கின்றனர் இந்த சாமியார்கள்.
  போதாத குறைக்கு பவுர்ணமி அமாவாசைகளில் இந்த சாமியார்களின் ஆசிரமத்தில் நடக்கும் மகா யாகங்கள்! அதில் என்னவெல்லாமோ கொட்டுகிறார்கள். ஒரு நியமனமும் கிடையாது. இத்தனை செய்தும் நோய் தீரவில்லை! குறை தீரவில்லை என்றால் திருந்துகிறார்களா?
   அதுதான் கிடையாது நம் மக்களிடம்! இந்த சாமியார் சரியில்லை! அந்த சாமியாரிடம் போ! சரியாகிவிடும்! அடுத்த சாமியாரிடம் ஓடுகிறார்கள்.
   இது போதாது என்று வாஸ்து கற்கள், வாஸ்து மீன், ராசிக்கல் மோதிரம்,  எந்திரம், மூலிகை என்று எண்ணற்ற வியாபாரங்கள். இப்படியெல்லாம் இருந்தால் இதை வாங்கிவைத்து அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிட மாட்டார்களா? இதை மக்கள் உணருவதே இல்லை. அவர்களுக்குத் தேவை உடனடியாக ஓர் நிவாரணம். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற அவசரம். இந்த சாமியார்களுக்கு என்று சில லோக்கல் சேனல்கள் விளம்பரம் செய்கின்றன. இன்னும் சிலருக்கு பத்திரிக்கை விளம்பரம். இதையெல்லாம் நம்பி அந்த டீவியிலே வந்தாரு. இந்த புக்குலே படிச்சேன்! தொட்டது எல்லாம் துலங்குதாம்! அவருகிட்ட மாரியம்மனே இறங்கி வந்து பேசுதாம்! என்றெல்லாம் ஓடுகின்றனர் மக்கள்.
   சாமியார்களிடம் வைக்கும் நம்பிக்கையை தன் மீது வைத்தாலே எல்லாம் சரியாகிவிடும்! அதுபோல இன்பங்களும் துன்பங்களும் வாழ்வின் இருபக்கம்! அதை அனைவரும் அனுபவித்தே ஆகவேண்டும்! இதை உணரவேண்டும் மக்கள்.

  கடவுள் உன்னிடம் எதையும் கேட்பதில்லை! அவருக்கு கொடுக்க நீ யார்? உனக்கு இது வேண்டும் என்று அவரிடம் யாசிப்பவன் நீ! உனக்கு கொடுக்கும் நிலையில் கடவுள் இருக்கிறார் என்றால் அவருக்கு நீ என்ன கொடுப்பது? இதை உணர வேண்டும். இதெல்லாம் இந்துமதத்தை பிடித்த தீவிர வியாதிகள். இதைக் குணப்படுத்தினாலே இந்துமதம் செழிக்கும். இதை  உணரவேண்டும் மக்கள்.
    இதனால் ஆலயங்களை சீரமைப்பதையும், பழைய கோவில்களுக்கு உபயங்கள் செய்வதையும் குறை சொல்லவில்லை! அது உங்கள் கடமை! இருண்டு கிடக்கும் கோயிலுக்கு விளக்கேற்றி வைப்பது தவறில்லை! இதை கொடுத்தால்தான் இதை செய்வேன் என்று பேரம் பேசுவதுதான் தவறு.

   உள்ளார்ந்த அன்புடன் இறைவனை வணங்குங்கள்! நம் மதம் ஒன்றும் பிள்ளையில்லை வளர்க்க! அது தானாக வளரும். நம் வினைகளை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும். அதை எந்த பரிகாரமும் சரி செய்து விடாது. வீணாக மூடநம்பிக்கைகளில் கவனம் செலுத்தாதீர்கள் என்பதுதான் என் கருத்து.

உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்! உங்களை தேடி இறைவன் வருவார் என்று சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கின்றேன்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!