Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

தளிர் சென்ரியு கவிதைகள் 10

$
0
0
தளிர் சென்ரியு கவிதைகள் 10


1.      தள்ளாட விட்டு தலைநிமிர்கிறது
தமிழகப் பொருளாதாரம்!
டாஸ்மாக்!

2.      எங்கெங்கும் பறக்குது கொசு!
எளிதாக பரவி வருகுது
டெங்கு!

3.      தள்ளி வைக்கப்பட்ட
கள்ளிச் செடிகள்!
பிச்சைக்காரர்கள்!

4.      அள்ளிக் குவித்தவர்கள்
துள்ளி குதிக்கிறார்கள்!
கிரானைட் முதலைகள்!

5.      கலர் கலராய் கடைகளில் தண்ணீர்!
உலர்ந்து போனது உடலுக்கு நல்ல
இளநீர்!

6.      தூங்காத வாகனங்கள்
துயில் எழுப்புகின்றன!
நகரவாசிகள்!

7.      தூசும் புகையும் மாசு!
துரும்பாய் நினைத்தால்
அள்ளலாம் காசு!

8.      பஞ்சனை கிடைத்தும்
படுத்து இளைப்பாறவில்லை!
பன்னீர் செல்வம்!

9.      உதிரும் பூக்கள்!
கோர்ப்பார் இல்லை!
காங்கிரஸ்!

10.  ஊசலாடும் உயிர்கள்!
ஊமையான கட்சிகள்!
    உறக்கத்தில் இந்தியா!

11.   பிரபலங்கள் பெருக்கினார்கள்!
    சேர்ந்தது குப்பை!
    தூய்மை இந்தியா!

12.  தேய்த்து குளித்தாலும்
விடவில்லை அழுக்கு!
 கோத்ரா சம்பவம்!

13.  குப்பையான கோயில்கள்!
தெருவுக்கு வந்த கடவுள்!
 வீதி உலா!

14.  உதைத்து ஆடினாலும்
ரசித்து பார்த்தார்கள்!
கால்பந்து!

15.  சுத்தம் செய்கையில்
அழுக்கானது துடைப்பம்!
ஆம் ஆத்மி!

16.  பெருகிய வாகனங்கள்!
அருகிப்போனது!
நடை!

17.  படிப்படியாக பால் ஊற்றினார்கள்!
துடித்துக் கொண்டு இருந்தது
பால்வற்றிய தாயுள்ளம்!

18.  வேண்டி வருவனிடம்
வேண்டிக் கொண்டிருந்தார் கடவுள்!
உண்டியல்!

19.  நெல்லாய் விளைந்த மண்ணில்
கல்லாய் முளைத்தது கட்டிடங்கள்!
 வீட்டுமனைகள்!

20.  கிழிந்து கிடந்தாலும்
நிறைந்து கிடக்கிறது பை!
பிச்சைக்காரன்!

டிஸ்கி} கவிதையை எழுதி மேலும் செம்மைப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்கிறார் ஐயா முத்துநிலவன். ஆனால் நான் பெரும்பாலும் அப்போதே சுடச்சுட என்ன தோன்றுகிறதோ அதை எழுதி அப்படியே பதிவிட்டு விடுகிறேன்! என்னுடைய பெரும்பாலான பதிவுகள் அப்படித்தான்! அதே போலத்தான் இந்த பதிவும். இன்று சென்ரியு எழுதலாம் என்று வந்து 6-15 மணிக்கு அமர்ந்தேன்! நாற்பத்தைந்து நிமிடங்களில் விளைந்த சென்ரியுக்கள் இவை! உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை பின்னூட்டத்தில் தெரிவித்தால் இன்னும் சிறப்பாக எழுத முயல்வேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

  

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!