தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 11
கரைகள் மாற்றம்
கறைபட்டது
நற்பெயர்!
நாற்றத்தில் கலந்தது
நறுமணம்!
காங்கிரஸில் குஷ்பூ!
வீங்கிப் போன பொருளாதாரம்!
ஒட்டிப்போனது
ஏழையின் வயிறு!
நிரம்பிக் கொண்டிருந்தது
நிறையவில்லை!
உணவுவிடுதி!
கறை
நல்லதுதான்!
சோப்புக் கம்பெனிக்கு!
ஒளிந்து விளையாடுகையில்
ஒளியிழக்கிறது தொழில்கள்!
மின்சாரம்!
மரணங்களால்
மரணித்தன
பள்ளிக்கூடங்கள்!
சுமையாகும் கல்வி!
அழுத்தத்தில்
மாணவர்கள்!
விலையில்லா பொருட்கள்
வீடுதோறும்!
விற்பனைக்குவந்தது குடிநீர்!
கட்டண தரிசனம்!
நிர்ணயிக்கப்படுகிறது
கடவுள் அருள்!
விலைகொடுத்து
வாங்கப்படுகிறது
கடவுள் தரிசனம்!
கரை சேர்க்குமுன்னே
கரைத்துவிடுகின்றன!
மருத்துவமனைகள்!
மரங்கள் மரணம்!
மடியில் அழுதன எழுதுகோல்கள்!
காகிதம்!
சாலைகளுக்கு வழிவிட
சாய்ந்தன
மரங்கள்!
மறைந்து கொண்ட மழை!
உறைந்து போனது
விவசாயம்!
மனைகளைபிரசவித்தன வயல்கள்
மரணித்தது
விவசாயம்!
குடி உயர
கோன் உயருகிறது!
டாஸ்மாக்!
அழுத பிள்ளையிடம்
பால் குடிக்கின்றன!
மருத்துவமனைகள்!
வினையான விளையாட்டு!
விலைபோனது உயிர்!
பிலிப் ஹ்யூஸ்!
தாயின் மடியில் கொலை!
தறுதலையான பிள்ளையால்வேதனை!
தவிக்கும் கல்வித்துறை!
அங்காடியான கோயில்கள்!
விலைபேச அலைமோதும்
மக்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும் நன்றி!