தளிர் ஹைக்கூ கவிதைகள்!
உப்பைத் தின்றாலும்
இனிப்பைத் தந்தன
மழைமேகங்கள்!
குளித்து முடித்ததும்
புத்தாடை உடுத்தின கட்டிடங்கள்!
பாசி!
உருக உருகப்
பெருகியது நீர்!
மழை!
பின்னல் போட்டதும்
கலைத்துப்போட்டார்கள்!
சிலந்தி!
வாசமில்லா இடத்தில்
வாசம் செய்தது!
சிலந்தி!
தோற்றாலும்
முயற்சித்துக்கொண்டே இருக்கிறது!
குழந்தைகள்!
கல்லை உடைத்ததும்
பிறந்தது கலை!
சிலை!
இருண்ட வீடு
விளக்கேற்றியது
நிலா!
வண்டுகள் மொய்த்தாலும்
வதங்கவில்லை!
நிலா!
கவன ஈர்ப்புத் தீர்மானம்
கொண்டுவந்தது குழந்தை!
அழுகை!
சிரித்தால் சொர்கம்!
அழுதால் நரகம்!
பொதுவெளியில்
இதழோடு இதழ்பதித்தது
வண்ணத்துப்பூச்சி!
வண்ணங்கள்வாங்க
மலர்களிடம் பேச்சுவார்த்தை!
வண்ணத்துப்பூச்சி!
உறுதியாக இருந்தும்
வழுக்கிவிடுகின்றன
பாறைகளில் பாசிகள்!
மூடி மறைத்தது!
ஆழத்தை!
குளத்து நீர்
பதுக்கல் பொருட்கள்!
அபகரிக்கப்பட்டன!
குளத்துமீன்கள்!
காய்ந்து போனது ஈரம்!
உதிர்ந்தது!
காலில் ஒட்டிய மண்!
நிலாக்குளியல்!
கண்விரித்து களித்தன!
அல்லிமலர்கள்!