Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

எல்லாமே உன் வசப்படும்!

$
0
0
ஏற்றங்களை காணும் போது
ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி! ஒருநாள்
சரிகையில் சடுதியில் துயரங்களாய்
உருமாறி பெருக்கெடுக்கிறது ஆற்றாமை!

ஆற்றாமைதான் நம் முன்னேற்றத்தின்
முதல் முட்டுக்கட்டை! அதனோடு குட்டிபோடும்
கோபங்கள் தாபங்கள் தவறான நடவடிக்கைகள்!
ஊக்கம் உன்னுள்ளே புகுந்தால் ஆமைகள் அடங்கிப்போகும்
தேக்கங்கள் கரைந்து போகும்!

உயரத்தில் ஒளிவீசும் சூரியனைக்கூட
ஒருநாள் துயரத்தில் ஆழ்த்தி
மறைக்கின்றன மேகங்கள்!
மறைக்கப்பட்டாலும் மறக்காது ஒளிவீசி
மங்காது நிற்கிறான் சூரியன்!

ஓங்கிவளர்ந்த மலைகளெல்லாம் கூட
ஒருநாள் சரிந்து போனதாக சரித்திரம் உண்டு!
ஆழ்கடலின் போக்கும் மாறும்
அலையடிப்பதும் நின்று போகும்!
ஆதலின் கடல்வற்றிப்போவதில்லை!

பிறப்பிருக்கும் உலகில் கட்டாயம்
இறப்பும் இருக்கும்!
நன்மை இருக்கும் இடத்திலே
தீமைகளும் பிறக்கும்!
அமைதியிருக்கும் உள்ளத்திலே ஒருநாள்
புயலும் வீசும்!

கடும் மழைக்கு போட்டியாய்
சுடும் வெயில் வறுத்தெடுக்கும்!
அமுதம் விளையும் இடத்தில்தான்
விஷமும் விளைகின்றது!

வெற்றிபெற்ற மனிதனுக்கு பின்னால்
தோல்வி முகங்கள் பல உண்டு!
இன்பங்களும் துன்பங்களும்
வருத்தங்களும் மகிழ்ச்சிகளும்
வெற்றிகளும் தோல்விகளும்
ஏற்றங்களும் இறக்கங்களும்
மேடுகளும் பள்ளங்களும்
கலந்ததுதான் வாழ்க்கை!
ஏற்றம் வந்தாலும் சரிவு வந்தாலும் ஓர்
மாற்றம் வரும் என்று நம்பு!

உன் மீது நம்பிக்கை இருப்பின்
உருவாகும் துயரமெல்லாம் நீர்த்துபோகும்!
நம்பிக்கை போயின் நாடிவரும் இன்பம் கூட
 துன்பமாய் தோன்றும் கைவிட்டு போனாலும்
கைவிடக்கூடாது நம்பிக்கை!
கலக்கங்களை கண்டு கலங்காதிரு!
இலக்கங்களை முன்னிருத்தாமல்
இலட்சியத்தை முன்னிருத்தி உழை!
உறுதிதனை இறுதிப்படுத்து!
எல்லாமே உன் வசப்படும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles