தளிர் சென்ரியு கவிதைகள் 12
- வேட்பாளர்கள் போட்டி
வெற்றிபெற்றது துட்டு!
இடைத்தேர்தல்!
- வேலைகொடுத்தார்கள்
ஓய்வு எடுக்கிறார்கள்
நூறுநாள் வேலை!
- கதைவிட்டதும்
உதைபட்டார்கள்!
மாதொருபாகன்!
- கண் பார்க்கையில்
வலி!
திருநங்கையர்!
- முடங்கிய அரசு இயந்திரம்!
தொடங்கியது
கொசு உற்பத்தி!
- கொடிகட்டிப்பறந்தன வயல்கள்!
கொட்டப்பட்டன வயிற்றில் மண்!
வீட்டுமனைகள்!
- உத்தரவின்றி உள்ளே வந்தன
மெத்தனமில்லாது அழிந்தது பொருளாதாரம்!
அந்நிய ஏற்றுமதி!
- காப்பதற்குபதில் எடுக்கின்றன
உயிர்காக்கும் மருந்துகள்!
விலை!
- அடங்காப்பசியில் மருத்துவம்!
விழுங்குகின்றன பணத்தோடு
பல உயிர்கள்!
- புகையில்லா போகி!
கொசுவர்த்தியோடு கழிந்தது
இரவு!
- கடையான பாதைகள்!
வியாபாரம் செழித்தது!
காவல்துறை!
- திருடி எடுக்கிறார்கள்!
திருட்டு போகிறது!
தமிழ் சினிமா!
- விலைபோகும் அறிவு!
பெருமிதத்தில் படைப்பாளி!
புத்தகச் சந்தை!
- அள்ளிக்குவித்தார்கள்!
வறண்டுபோனது
விவசாயம்!
- மலையை முழுங்கினார்கள்!
செரிக்கவில்லை!
சகாயம்!
- இலவசமாய் கொடுத்தாலும்
கசக்கிறது!
அரசுபள்ளியில் கல்வி!
- நூலறுந்தாலும்
விடவே இல்லை பிடி!
தமிழக அரசு!
- நத்தையாய் நகரும் வாகனங்கள்!
களவாடின நேரங்கள்!
வாகன நெரிசல்!
- காரணமில்லாமல் கூடி
சத்தம் போட்டன!
சாலை நெரிசலில் வாகனங்கள்!
- குடிப்பெயர்ச்சி ஆகையில்
கூட்டிவந்தது சனி!
டாஸ்மாக்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!