கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 32
- வாக்கிங் போலாம்னு கூப்பிட்டா மாவுக்கட்டு போட்டிருக்கு வரலைன்னு சொல்றியே! எப்ப அடிபட்டுச்சு? கட்டு எதையும் காணோமே?
அட நீ வேறப்பா! இட்லிக்கு மாவு அரைக்கணுங்கிறதைத்தான் அப்படிச் சொன்னேன்!
- நம்ம தலைவர் எல்லாத்துலேயும் காசு பாக்கிறதுல கில்லாடின்னு எப்படி சொல்றே?
தனக்குக் கொடுத்த டாக்டர் பட்டத்தை கூட வித்து காசாக்கிட்டாரே அதை வச்சுத்தான்!
- மன்னா! மன்னா! எதிரி ராணியாரை சிறை எடுத்துச் செல்கிறான்!
விதி யாரை விட்டது! தன் தலையில் தானே மண்ணைவாரிக் கொண்டுபோட்டு செல்கிறான் விட்டுத் தள்ளுங்கள்!
- எங்கள் தலைவரை குடிகாரன் குடிகாரன் என்று இழிவு படுத்துகிறீர்களே! இளைய தலைமுறை குடித்துக் கெட்டுப்போகக் கூடாது என்பதற்காகத்தான் மொத்த சரக்கையும் தானே குடித்து அவர்களை காப்பாற்ற பெரும் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்!
- போட்டியிலே ஜெயிச்சதும் அந்த கேப்டன் ஏன் ஸ்டம்ஸை எடுத்துட்டு போறார்?
அவர் விக்கெட் கீப்பராம்!
- அந்த ஸ்கூல்ல எப்படியோ அடிச்சி புடிச்சி அட்மிஷன் வாங்கிட்டேன்!
உனக்குத்தான் கல்யாணமே ஆகலையே! யாருக்கு?
கல்யாணம் பண்ணிண்டு பொறக்கற குழந்தைக்குத்தான் இப்பவே அட்மிசன்!
- பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துனங்கிறதை தலைவர் தப்பா புரிஞ்சிக்கிட்டாரா எப்படி?
கூட்டத்துக்கு வர்றவங்க டூத் பிரஷும் பேஸ்டும் கொண்டு வந்து உதவனும்னு அறிக்கை விட்டிருக்காரே!
- தலைவர் தன்னை பார்க்க வர்றவங்க கிட்டே இனிமே சால்வைகளை வாங்கி வராதீங்கன்னு சொல்லிட்டாராமே!
சால்வைங்க நிறைய சேர்ந்து போச்சாம்! அதனாலே பெட்ஷீட் வாங்கிட்டு வாங்கன்னு சொல்லியிருக்கார்!
- மன்னர் இரவில் நகர்வலம் வருவதை ராணியார் தடை செய்கிறாரே ஏன்?
மன்னர் திருட்டுத் தனமாக சைட் அடிப்பதை யாரோ ராணியார் காதுகளில் போட்டுக் கொடுத்துவிட்டார்கள்!
- எதிரி மன்னன் மீது மன்னர் பெருங்கோபத்தில் இருக்கிறாரா ஏன்?
புறாக்களை தூது அனுப்பாமல் வாட்ஸ் அப்பில் மேசேஜ் அனுப்புகிறானாம்!
- உங்களை கட்டிக்கிட்டதுக்கு பேசாம ஒரு எருமைமாட்டை கட்டிக்கிட்டிருந்திருக்கலாம்!
நல்லவேளை! பாவம் அந்த எருமை தப்பிச்சிருச்சு!
- ஆபிஸ்ல இன்னிக்கு சிஸ்டம் சர்வர் டவுண் ஆனதாலே யாருக்கும் கையும் ஓடலை காலும் ஓடலை!
அப்புறம்?
ஒருவழியா மதியத்துக்குமேல ரெடியாகி பேஸ்புக்குல போய் லைக் போட்டப்புறம்தான் எல்லாரும் நிம்மதியானாங்க!
- எங்க வீட்டுக்காரர் எப்பவும் அவரேதான் வெங்காயம் உரிச்சுத் தருவார்! என்னை உரிக்க விடமாட்டார்!
ஏன்?
என்னை கண்கலங்காம பார்த்துக்கிறாராம்!
- எட்டுவருஷமா உங்களை சனிப் பிடிச்சு ஆட்டி வைக்குது!
கரெக்ட் ஜோஸ்யரே! எட்டுவருஷம் முன்னாடித்தான் எனக்கு கல்யாணம் ஆச்சு!
- அந்த மெக்கானிக் ரொம்ப நல்லவர்னு எப்படி சொல்றே?
வண்டியை சர்வீஸ் விட்டாக்க முழு பெட்ரோலையும் திருட மாட்டார் நாம் வீடு போய் சேர கொஞ்சம் பெட்ரோலை விட்டுவைப்பார்!
- பொண்ணு கோயில் சிலையாட்டம் இருக்கும்னு சொன்னீங்க ஆனா கறுப்பா இருக்குதே!
நீங்க முன்னே பின்னே கோயில் சிலையை பார்த்ததே இல்லையா சிலை கறுப்பாத்தானே இருக்கும்!
- இன்னும் காதலிச்சிட்டு இருக்கியான்னு கேட்டா நம்பர் அதேதான்! ஆனா நெட்வொர்க்கை மாத்திட்டேன்னு சொல்றீயேடீ! புரியலை!
காதலிச்சுட்டுத்தான் இருக்கேன்! ஆனா ஆளைத்தான் மாத்திட்டேன்னு சொல்ல வந்தேன்!
- மன்னா! காட்டு விலங்குகள் நாட்டுக்குள் புகுந்துவிட்டன!
அடடா! நான் கொஞ்சம் நிம்மதியாக இருப்பது அவைகளுக்குக் கூட பொறுக்கவில்லையா அமைச்சரே!
- ஏன் டாக்டர் பெட்ல இருக்கிறவங்களை கொண்டுபோய் வாசல்ல உக்காரச் சொல்றீங்க!
இன்னிக்கு யாரும் அவுட் பேஷண்ட்ஸ் வரலையே போர் அடிக்குது!
- அந்த டாக்டர் ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நாலு தடவை செக் பண்ணிட்டுத்தான் செய்வாரு!
பேஷண்டையா?
பேஷண்ட்டோட பேங்க் பேலன்ஸை!
21 மன்னர் எதற்கு வீடியோ கான்பரன்ஸ் வேண்டும் என்று சொல்கிறார்?
எதிரி மன்னனை நேருக்கு நேர் பார்க்க அச்சமாக இருக்கிறதாம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!