1.தலைவர் ரொம்ப ப்ராக்டிக்கலா இருக்காருன்னு எப்படி சொல்றே?
பிறந்தநாளுக்கு வந்தவங்க வாழ்த்த வயதில்லைன்னு சொன்னாலும் பரவாயில்லை அன்பளிப்புக்கு பையில காசில்லைன்னு சொல்லாதீங்கன்னு சொல்றாரே!
2.மன்னர் இப்போதெல்லாம் ரெகுலராக இரவில் நகர் சோதனைக்கு கிளம்பி விடுகிறாரே!
மகாராணியின் குறட்டை சத்தம் தாள முடியவில்லையாம்! அதற்கு நகர்வலமே மேல் என்று கிளம்பிவிடுகிறார்!
3.பொண்ணை எப்பவும் வீட்டுலேயே பூட்டி வைக்கிறதுக்கு நான் தான் காரணம்னு எப்படி சொல்றீங்க மாப்பிள்ளை?
நீங்கதானே உங்க பொண்ணு சொக்கத் தங்கம்னு சொன்னீங்க! தங்கத்தை பாதுகாப்பா பூட்டி இல்ல வைக்கணும்!
4.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சு!
ஏன்?
தன்னை பார்க்க வர்றவங்க கண்டிப்பா டோக்கன் வாங்கனும்னு சொல்றார்!
5.உனக்குத்தான் குழந்தையே பிறக்கலையே அப்புறம் எதுக்கு அட்மிஷனுக்கு ஸ்கூலூக்கு போயிட்டு வந்தேன்னு சொல்றே?
அந்த ஸ்கூல்ல கண்சீவ் ஆன உடனே அட்மிசனுக்கு புக் பண்ணா இருபது பர்செண்ட் டிஸ்கவுண்ட் பண்றாங்களே!
6.தொண்டர்கள் எல்லோரும் தினமும் ஹார்லிக்ஸ் பூஸ்ட் குடிக்கணும்னு தலைவர் எதுக்கு அறிக்கை விட்டிருக்காரு!
நம்மக் கட்சியிலே தொண்டர் பலம் இல்லைன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டிருக்காரு!
7.வாழ்க்கை ஒரு வட்டங்கிறதுக்கு நம்ம தலைவரே சரியான உதாரணம்!
எப்படி சொல்றே?
நம்ம தலைவர் முதல்ல ஜெயில்ல இருந்துதான் கட்சி ஆரம்பிச்சாரு! இப்ப மறுபடியும் ஜெயிலுக்கு போயிருக்காரே!
8.எங்க புதுசா நகை கடை திறந்தாலும் என் மனைவி முத ஆளா அங்க நிற்பா!
பலே! அப்புறம்!
அதனாலதான் நான் இப்ப தெருவுக்கு வந்து நிற்கறேன்!
9.அட்சய திருதியைக்கு நகை வாங்கினா வளருமாமே!
கண்டிப்பா வளரும் நகை கடைக்காரன் வருமானம்!
10.மாப்பிள்ளை பெரிய குடிகாரர்னு அன்னிக்கு சொல்லவே இல்லையே தரகரே!
என்னங்க நீங்க! மாப்பிள்ளை பணத்தை தண்ணியா செலவழிக்க அஞ்சவே மாட்டாருன்னு அப்பவே சொன்னேனே!
11.துணிக்கடை திறப்பு விழாவுக்கு வந்த தலைவர் மானத்தை வாங்கிட்டார்!
என்ன செய்தார்?
கட் பண்ண ரிப்பனை அப்படியே சுருட்டி பாக்கெட்ல போட்டுக்கிட்டார்!
12.நம்ம தலைவர் விவரம் புரியாத அப்பாவியா இருக்காருப்பா?
ஏன்?
எல்லா தலைவர்களும் முன் ஜாமின் கேட்டு அப்ளை பண்றாங்களே நாமளும் ஒண்ணு அப்ளை பண்ணிடுவோமான்னு கேக்கறார்!
13.தளபதியாரே! நமது படைகள் போருக்குத் தயாராக இருக்கிறதா?
மன்னா! பேருக்குக் கூட நம்மிடம் படைகள் இல்லையே!
14.யார் நல்லா சமைக்கிறாங்கன்னு அம்மாவுக்கும் மனைவிக்கும் போட்டி!
அப்புறம்?
அப்பாவைவிட நானே நல்லா சமைக்கிறதா இரண்டுபேருமே ஏகமனதா ஒத்துக்கிட்டாங்க!
15.ஆபிஸ்ல லஞ்சத்தை ஒழிக்கணும்னு ஒருமனதா முடிவெடுத்தாங்கன்னியே அப்புறம் என்ன ஆச்சு!
எல்லோரையும் வீட்டுலே லஞ்சப் பணத்தை வாங்கிக்க சொல்லிட்டாங்க!
16.அந்த டாக்டர் ரொம்ப கிண்டல் பேர்வழியா இருக்கார்!
ஏன்?
உடம்புல சுகர் ரொம்ப சேர்ந்து போச்சு டாக்டர்னா காபி போட்டு சாப்பிடுங்கன்னு சொல்றாரே!
17.தலைவர் எதுக்கு வீட்டுக்கு வீடு பிளாஸ்திரி கொடுக்கப் போறேன்னு திடீர்னு சொல்றாரு?
மின்வெட்டுல இருந்து மக்களை காப்பாத்த போறாராம்!
18. ஐயா, சாமி!...
சோறு எதுவும் இல்லை கிளம்புப்பா!
சோறெல்லாம் வேண்டாம் சாமி! போன்ல சார்ஜ் குறைஞ்சு போச்சு! கொஞ்சம் போட்டுத் தர்றீங்களா? பேஸ்புக்ல அப்டேட் பண்ணனும்!
19. நம் மன்னரைப் போல கொடை வள்ளலை யாரும் கண்டிருக்க முடியாது!
அவ்வளவு தர்மம் செய்வாரா?
நீ வேற! இதுவரை நடந்த போரில் எல்லாம் வெண்கொற்ற குடையை இழந்து இழந்து ஓடி வந்துவிடுகிறாரே அதைச் சொன்னேன்!
20. அட்சய திருதியைக்கு எல்லா கடையிலயும் தள்ளுபடி தராங்களாமே!
அது தள்ளுபடி இல்லே! தள்ளும் படி! அப்பத்தானே விற்காத நகையெல்லாம் நம்ம தலையிலே கட்ட முடியும்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!