கொஞ்சம் சிரியுங்க பாஸ்!
1.வயிறு வலிக்குதுன்னு டாக்டர்கிட்டே போனியே என்ன ஆச்சு?
அவர் எழுதுன மருந்துங்களோட விலையை பார்த்ததும் நெஞ்சுவலியே வந்துருச்சு!
2.கோயில் கோயிலா சுத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லாம போயிருச்சு!
ஏன் வேண்டுதல் பலிக்கலையா?
நல்ல செருப்பு கிடைக்கலை!
3. நம்ம ராப்பிச்சையோட ரவுசு தாங்க முடியலை!
ஏன் என்ன ஆச்சு!
நம்ம வீட்டு சாப்பாடு சரியில்லைன்னு வாட்ஸ் அப் பில மெசேஜ் ஷேர் பண்ணிகிட்டு இருக்கான்.
4.பொண்ணு முழுகாம இருக்கிறது சந்தோஷம்தானே ஏன் வருத்தப்படறீங்க!
இவ முழுகாம இருக்கிறதுக்கு காரணமானவன் இவளை தலை முழுகிட்டானே!
5.நில உச்சவரம்பு சட்டத்தை தலைவர் எதுக்கு எதிர்க்கிறாரு!
காணி காணியா வாங்கி போட்டிருக்கிற நிலமெல்லாம் காணாம போயிரப்போகுதுன்ற அச்சம்தான்!
6.அந்த ஸ்கூல் அட்மிசன் வித்தியாசமா இருக்குமாம்!
அதுக்காக பர்த் சர்டிபிகேட் கேட்கலாம் பேங்க் பேலன்ஸ் சர்டிபிகேட் எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை!
7.நம்ம பாரம்பரியத்தை இந்த எலக்ஷன்லேயும் கடைபிடிச்சிட்டோம் தலைவரே!
எப்படி?
இந்த முறையும் டெபாசிட் வாங்கலை!
8.மன்னர் எதற்கு கொல்லரிடம் எரு உரங்களை அனுப்பி இருக்கிறார்!
வீரத்திற்கு உரமிட வேண்டும் என்று மந்திரி சொல்லிவிட்டாராம்!
9.மன்னர் சேடிப்பெண்களோடு நதியில் புனலாடிய விஷயம் ராணிக்குத் தெரிந்துவிட்டது!
அப்புறம்?
தணலாய் ராணி சீறியதில் ரணமாற வைத்தியரிடம் சென்றுவிட்டார் !
10.நகை கடையில் என்னங்க கலாட்டா?
பழைய தங்கத்தை வாங்கிக்கறேன்னு சொல்லி வாங்க மாட்டேங்கிறாங்களாம்!
தப்புதானே!
அட இவர் வாங்கிக்க சொல்றது தன் மனைவி தங்கத்தை!
11.தலைவர் மகளிர் அணித்தலைவிகிட்ட சேட்டைப் பண்ணி மாட்டிகிட்டாராமே! அப்புறம் என்ன ஆச்சு!
நோட்டை பிடுங்கிக்கிட்டு விட்டுட்டாங்க!
12.புலவர் ஏன் இப்படி தலைதெறிக்க ஓடி வருகிறார்!
குத்துப்பாட்டு எழுதாவிட்டால் குத்திவிடுவேன் என்று மன்னர் மிரட்டி இருக்கிறாராம்!
13.எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு அப் நார்மலா எதுவும் இல்லேன்னு சொல்றீங்க! ஆனா இன்னும் பதினைஞ்சு நாள் இங்கேயே அட்மிட் ஆகியிருக்கணும்னு சொல்றீங்களே ஏன் டாக்டர்!
என் பேங்க் பேலன்ஸ் அப்நார்மலா இருக்கே!
14.இந்த தலைவர் பதவியை நானாக விரும்பி ஏற்கவில்லை!
நாங்களாக விரும்பியும் கொடுக்கவில்லை தலைவரே!
15.காட்டுக்கு வேட்டையாடச் சென்ற மன்னர் ஏன் சீக்கிரமே திரும்பிவிட்டார்?
காட்டு ராஜா மன்னரை வேட்டையாட முயன்றுவிட்டதாம்!
16. அந்த டாக்டர் எதையும் பாசிட்டிவாத் தான் திங்க் பண்ணுவாரு!
அதுக்காக என் ப்ளட் குருப்பை ஏ ஒன் நெகட்டிவ் கிறதை ஏ ஒன் பாசிட்டிவ்னு மாத்தி எழுதறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!
17.எதுக்கு மாப்பிள்ளை வீட்டுல டீவி சீரியல் பார்க்க கூடாதுன்னு தடை போடறீங்களாம்?
நீங்கதானே சொன்னீங்க உங்க பொண்ணு கண்ணுல ஒரு சொட்டு தண்ணி கூட வராம பார்த்துகணும்னு!
18. பொண்ணை சும்மா அனுப்ப மாட்டோம்னு அன்னிக்கு சொன்னீங்க இன்னிக்கு இப்படி வெறுமனே அனுப்பறீங்களே இது நல்லா இருக்கா!
நாங்க எங்க சும்மா அனுப்பறோம்! அவ வாயும் வயிறுமா இல்ல இருக்கா!
19. ஆபிஸ் டைம்ல யாரும் பேஸ் புக் ஓபன் பண்ணக் கூடாதுன்னு மேனேஜர் ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டுட்டாரு!
அப்புறம்!
வாட்ஸ் அப் அனுப்ப ஆரம்பிச்சிட்டோம்!
20. தலைவர் பண்ண கலாட்டாவாலே கிளப் அசந்து போயிருச்சு!
என்ன பண்ணாறு!
வேட்டிக் கட்டி உள்ளே வரக்கூடாதுன்னு சொன்னதும் வேட்டியை கழட்டிட்டு அன் டிராயரோட உள்ளே நுழைஞ்சி இருக்காரு!
21. அட்சய திருதியைக்கு எது வாங்கினாலும் பெருகும்கிறது உண்மைதான்!
எப்படி சொல்றே?
நான் லோன் வாங்கினேன்! இப்ப எக்கச்சக்கமா பெருகிடுச்சே!
22. தனக்கு எதிரா தீர்ப்பு எழுதின ஜட்ஜை பார்த்து தலைவர் ஏதோ சொன்னாராமே என்ன அது?
நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுதுன்னாராம்!
23. பட்டப் பகல்ல எல்லார் முன்னாடியும் தாலியை அறுத்தும் உன்னை சும்மா விட்டுட்டாங்களா எப்படி?
தாலியை அறுக்கறது இப்ப கட்சிகாரங்க பேஷன் ஆக்கிட்டாங்களே!
24. எதிரி அத்தனை முறை எள்ளி நகையாடிய போதும் மன்னர் வாளாவிருந்துவிட்டாராமே?
ஆம்! மன்னர் அவசரத் தேவைக்கு வாளை அடகு வைத்துவிட்டாராம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!