தளிர் சென்ரியு கவிதைகள்!
காந்தி தேசம் ஆனது
காணாமல் போனது
காந்தீயம்!
சிக்கலான உணவு!
சிக்கிக்கொண்டது!
நூடுல்ஸ்!
வழிகாட்ட வேண்டியவர்
வழிதவறி போனார்!
டிராபிக் ராமசாமி!
வர்ணஜொலிப்பில் ஆறுகள்!
இருண்டுபோனது விவசாயம்!
சாயக்கழிவுகள்!
வாழ்க்கைத் தரம் உயர்கையில்
தாழ்ந்து போனது தராதரம்!
இலவசப் பொருட்கள்!
இலவசமாய் கொடுத்தும்
ஏற்க ஆளில்லை!
அரசுப்பள்ளிகள்!
நகரைச் சுற்றிவந்தன சாலைகள்
நலிந்து போனது
விவசாயம்!
துரிதமாய் புகுந்த நோய்கள்
துவக்கிவைத்தன
துரித உணவுகள்!
பழுக்க வைத்தார்கள்
கரைந்துபோனது பணம்!
கல் வைத்த பழங்கள்!
கல்வைத்தார்கள்
பொலிவிழந்தது உடல்
பழங்கள்!
குளிரூட்டிக்கொண்டிருந்தது
குளிர்விப்பான் உயர்ந்து கொண்டிருந்தது
பூமியின் வெப்பம்!
மலைப்பாம்புகளிடம் சிக்கி
மரணம் அடைகின்றன
அரசுப்பள்ளிகள்!
காலம்காட்டும் கைபேசிகள்
கைவிட்டுப்போயின
கடிகாரங்கள்!
ரெண்டாம் கல்யாணம்
சந்தோஷத்தில் மாப்பிள்ளை!
இடைத்தேர்தல்!
சுமை இறக்கியும்
பாரம் சுமக்கின்றன
அரசுப்பேருந்துகள்!
ஆடு தாண்டிவிட்டது!
ஆறு தாண்டவில்லை!
மேகதாது அணை!
புதுமாப்பிள்ளை வர
பொசுங்கினர் பழைய மாப்பிள்ளைகள்!
இடைத்தேர்தல்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!