கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 38
1. தலைவர் ஊழல் வழக்குல மாட்டிக்கிட்டப்ப வருத்தப்படறேன்! வெட்கப்படறேன்னு! சொன்னாராமே திருந்திட்டாரா?
நீ வேற! எல்லோரும் கோடிக்கணக்குல ஊழல்பண்ணி மாட்டிக்கிட்டாங்க நாம லட்சக்கணக்குலேயே மாட்டிக்கிட்டமேன்னுதான் அப்படிச் சொன்னாரு!
2. கல்யாணப் பொண்ணோட கழுத்திலே எதுக்கு பெரிய போல்டு ஒண்ணை கட்டி விட்டிருக்கீங்க? புது பேஷனா?
நீங்கதானே நகை நட்டு போட்டு அனுப்புங்கன்னு சொன்னீங்க!
3. மண்ணின் மைந்தன்னு சொல்லி ஓட்டுக் கேட்டாரே தலைவர் ஜெயிச்சு வந்தாரா?
மண்ணைக் கவ்வ வைச்சுட்டாங்க!
4. ஆபிஸுக்கு லேட்டா வர்றது எங்க மேனேஜருக்கு பிடிக்காது!
அதுக்காக பத்தரைமணிக்கு ஆபிஸுக்கு வந்துட்டு வால்கிளாக்கை பத்துமணியா அட்ஜஸ்ட் பண்ணி வைச்சுட்டு போறதெல்லாம் ரொம்ப ஓவர்!
5. மந்திரியாரே! நால்வகை சேனைகளும் போருக்குத் தயாராகிவிட்டனவா?
பேருக்குத் தான் தயாராகி உள்ளன மன்னா!
6. காலையில் துன்பம் துரத்திவரும்னு ராசிபலன்ல படிச்சது சரியா நடந்துருச்சா எப்படி?
இன்னைக்கி நானே சமைக்கிறேன்னு மனைவி கிளம்பிட்டா!
7. மனைவிகிட்ட அடிவாங்காம இருக்கிறதுக்கு பூரிக்கட்டையை ஒளிச்சு வைச்சது தப்பா போச்சு!
ஏன்?
பூரிக்கல்லாலே அடிக்க ஆரம்பிச்சிட்டா!
8. குரங்கு ஜுரம்னு சொல்லி பையனை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணீங்களே எப்படி இருக்கு?
அடுத்த பேஷண்ட்கிட்ட தாவிருச்சு!
9. டாக்டரை பார்க்கிறதுக்கு முன்னாடியே எல்லா பேஷண்ட்டும் அழுதுகிட்டே இருக்காங்களா? ஏன்?
வெயிட்டிங் ரூம்ல டீவி சீரியல் பார்த்துக்கிட்டு இருக்காங்களே!
10.எதிரியை பிடிக்காமல் கோட்டை விட்டுவிட்டார்கள் மன்னா!
அப்படியானால் நம் கோட்டையையும் வெகு சீக்கிரத்தில் விட்டுவிட வேண்டியதுதான்!
11. தலைவர் சட்டத்தை வளைச்சி வெளியே வந்தவர்னு சொல்றீங்களே அவ்வளவு சட்டம் தெரிஞ்சவரா?
நீங்க வேற! இரும்பு ஜன்னல் சட்டத்தை வளைச்சி வெளியே வந்தவருன்னு சொல்ல வந்தேன்!
12. சதா பேசிக்கிட்டே இருந்த மாமியாருக்கு அல்வா கொடுத்திட்டியாமே எப்படி?
ஒரு கிலோ அல்வா கிளறிவாயிலே திணிச்சிட்டேன்! இப்ப வாயையே திறக்க முடியலை இல்லை!
13.டாக்டர் என்னோட ஜாதகத்துல எனக்கு எழுபத்து மூணு வயசுன்னு போட்டிருக்கு!
அதை தீர்மானிக்க வேண்டியது நானாச்சே! எப்படி போடுவாங்க!
14. என்னோட கல்யாணத்துக்கு ஓத்து வரமாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்!
அப்புறம்?
ஒத்து ஊதறவர் இல்லாமலே நாயனத்தோட கல்யாணம் நடந்துருச்சு!
15. திருஷ்டிபூசணிக்காயை சுத்தி ஒடைச்சாங்களே! திருஷ்டி எல்லாம் உடைஞ்சி போச்சா?
தெருவுல வண்டியிலே போன ரெண்டு பேரோட கால்தான் உடைஞ்சி போச்சு!
16. எவ்ளோதான் முயற்சி பண்ணாலும் பதினோறு மணிக்கு மேல தூக்கம் வர மாட்டேங்குது டாக்டர்!
படுக்கிற இடத்தை மாத்தி பாருங்களேன்!
ஆபிஸ்ல சீட்டை எல்லாம் மாத்த முடியாது டாக்டர்!
17.தலைவருக்கு கிறுக்கு முத்திப்போச்சு!
எப்படிச் சொல்றே?
நான்கூட மக்களுக்கு சேவை செய்யறேன்! எனக்கும் சேவைவரி கட்டுங்கன்னு சொல்றார்!
18.ஊர்ப்பணத்தை எல்லாம் பெட்டியிலே போட்டு வச்சிருக்கேன்னு சொல்றாரே யார் அவர்?
சினிமா தயாரிப்பாளர்தான்!
19.மாப்பிள்ளை வெளிநாட்டுல இருக்கலாம்! அதுக்காக இப்படியா?
ஏன் என்ன ஆச்சு?
வீடியோ கான்பரன்சிங்க்ல தாலி கட்டறேன்னு சொல்றாரு!
20.வேலைக்காரி வரும்போது தூரமா எழுந்து போயிடறீங்களே ஏன்?
நீதானே சொன்ன வேலைக்காரிக்கிட்டே டிஸ்டர்ன்ஸ் மெயிண்டெயின் பண்ணனும்னு!
21.நம்ம கல்யாண நாளை நீங்க எப்படி மறப்பீங்க?!
நீதானே வாழ்க்கையிலே வர்ற துன்பங்களை கெட்ட கனவா நினைச்சு மறந்துடனும்னு சொன்னே!
22.உங்க கதைகளை படிக்கும்போதே சொக்கிப் போயிடறேன்னு சொல்றீங்களே அவ்ளோ உயிரோட்டமாவா இருக்குது!
நீங்க வேற தூக்கம் சொக்கிட்டு வருதுன்னு சொல்றேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!