இராமேஸ்வரத்தில் உதித்த இந்தியாவின் விடிவெள்ளி!
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவன்!
மாணவர்களுக்கோர் வழிகாட்டி!
மாநிலம் மட்டுமல்ல! “மா” நிலம் விரும்பும் மனிதநேயர்!
கனவை விதைத்து நினைவாய் ஆக்க சொன்னவர்!
கவிதை உள்ளம் கொண்டவர்!
மாபெரும் அறிவியல் அறிஞராய் வேர்விட்டு
மக்களின் தலைவராய் குடிபுகுந்தார்!
எளிமை நேர்மை உறுதியுடனே
எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார்
தள்ளா வயதிலும் அவர் உழைத்தார்!
வல்லரசு கனவினை நனவாக்க
வாலிபப் படையொன்று உருவாக்க
கல்விக் கூடங்களை அவர் தேர்ந்தெடுத்தார்!
பள்ளிப் பிள்ளைகளோடு கலந்துரையாடி
நாளைய பாரதம் உருவாக்கினார்!
கற்றார் அவர் தம் கருத்துக்கள்
காலனைக் கூட கவர்ந்ததுவே! ஐயோ! அவனுமே
கலாமின் உயிர்தனை கவர்ந்துவிட்டான்!
கவர்ந்தது உயிரை மட்டும்தான்!
கலாமின் சிந்தனை விதைகள் விருட்சங்கள் ஆகிடுமே!
கனவு மெய்ப்பட செய்வது நமது கடமையாகுமே!
மறைந்த மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்! அவர் கனவை நினைவாக்க உறுதி ஏற்போம்!