Quantcast
Channel: தளிர்
Viewing all 1537 articles
Browse latest View live

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 47

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 47


1.   தலைவர் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினது இல்லைன்னு எப்படிச் சொல்றே?
சமச்சீர் கல்வின்னா எல்லா பசங்களும் ஒரே மாதிரியா சீர் கொண்டுவருவாங்களான்னு கேக்கறாரே!

2.   மன்னர் ஏன் கட்டியம் கூறுபவனை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்?
ஆநிறை கவர்ந்த மன்னா! என்று சொல்லுவதற்குபதில் வாய் தவறி ஆணுறை கவர்ந்த மன்னா என்று சொல்லிவிட்டானாம்!

3.   அந்த கிரிக்கெட் ப்ளேயர் எப்பவும் எக்ஸ்ட்ரா கவர் திசையிலேயே பீல்ட் பண்றாரே என்ன விஷயம்?
எக்ஸ்ட்ரா கவர் கொடுத்து டீம்ல நுழைஞ்சவராம்!

4.   நல்லா கூடி வந்த சம்பந்தத்தை ஏன் திடீர்னு வேண்டாம்னு சொல்லிட்டீங்க?
மாலையில டிபன் 500 பேருக்கு வெங்காயபஜ்ஜி போடனும்னு சொல்றாங்களே ஆகற காரியமா இது!

5.   தலைவரை ஊழல் வழக்குலே கைது செய்துட்டாங்களாமே!
  ஆமாம்! இதுவரைக்கும் அவர் சம்பாரிச்சது எல்லாம் புழலுக்கு இரைத்த நீராகிவிட்டது!

6.   தமிழ் வாத்தியார் பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்னாச்சு?
கடிதத்தில் இலக்கணப்பிழை இருக்குன்னு சொல்லி திருப்பிக் கொடுத்திட்டா!


7.   மன்னருக்கு ஆங்கில மோகம் அதிகரித்துவிட்டது!
  எப்படிச் சொல்கிறாய்?
போரில் புறமுதுகிட்டு வருவதை ” ஐ யம்,ரிடன் பேக்”   என்று சொல்கிறாரே!

8.   மந்திரியாரே நமது அவையில் ஆசு கவி யாராவது இருக்கிறார்களா?
எமக்குத் தெரிந்தவரை நம் அவையில் காசு கவிகள் தான் இருக்கிறார்கள் மன்னா!

9.   அந்த ஆள்கிட்ட நிறைய பணம் இருக்கு! பிக்பாக்கெட் அடிச்சிரலாம்னு எப்படி சொல்றே?
ஓட்டலுக்குள்ளே ஆனியன் தோசை சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரே!

10.ஏன் சார் ஆட்டோவை டிராபிக் போலீஸ் கிட்டே நிறுத்த சொல்றீங்க?
நீதானப்பா ஏறும்போது பாத்து போட்டுக் கொடுங்கன்னு சொன்னே?

11.தலைவர் எப்பவும் அவுட் ஆப் ஸ்டேஷன்லேயே இருக்காரே என்ன விஷயம்!
ஊருக்குள்ளே வந்தா ஸ்டேஷனுக்குள்ள பிடிச்சு போட தயாரா இருக்காங்கன்னு அர்த்தம்!


12.தலைவரே உங்களை எதிர்கட்சிக்காரங்க நாற அடிச்சிட்டாங்க…!
என்ன?
மூத்திர சந்துக்குள்ளெ உங்க ப்ளெக்ஸ் பேனரை கொண்டு வச்சிருக்காங்க!

13.என் பெண்டாட்டிக்கு கோவம் வந்தா நான்  ரோட்டுக்கு வந்துருவேன்.!
  ஏன்?
அவ தூக்கி வீசற பொருளை எல்லாம் பொறுக்கி எடுத்துட்டு போகனுமே!

14.அந்த பால்காரனுக்கு ஆனாலும் ரொம்ப கொழுப்பு!
ஏன்?
நீ கொடுக்கிற பால் வெறும் தண்ணி… காசே கொடுக்க முடியாதுன்னு சொன்னா.. மினரல் வாட்டர் கலந்து தரேனே அந்தக் காசையாவது கொடுங்கன்னு சொல்றான்!


15.ஸ்பெஷல் வார்ட் வேணுமா சாதா வார்டு வேணுமான்னு கேக்கறீங்களே டாக்டர் என்ன வித்தியாசம்!
ஸ்பெஷல் வார்டுல பெண் நர்ஸ் இருப்பாங்க! சாதாவார்டுல ஆண் நர்ஸ் இருப்பார்!

16. குற்றங்கள் குறையனுங்கிறதுக்காகத்தான் கோயில் உண்டியலை கொள்ளை அடிச்சியா புரியலையே!
தப்பு செய்யறவங்க எல்லாம் அங்கதானே கொண்டுபோய் கொட்டி வைக்கிறாங்க எடுத்தா கொஞ்சம் குறையுமேன்னுதான்!

17.பூரி செய்யறதிலே என் வைஃபை அசைச்சுக்க முடியாது!
அவ்வளோ நல்லா செய்வாங்களா?
வாய்க்குள்ள போட்ட பூரியை அசைக்க முடியாதுன்னு சொன்னேன்!

18.அந்த டாக்டர் தியேட்டரை விட்டு வந்ததும் ரிசெல்ட்ட கரெக்டா சொல்லிருவாரு!
ஆபரேஷன்ல அவ்ளோ பர்பெக்டா!
நீ வேற அவர் சினிமா தியேட்டரை விட்டு வந்து படத்தோட ரிசெல்டை சொல்லுவாருன்னு சொன்னேன்!


19. மன்னரின் உயிர் அவர் கால்களில் இருக்கிறதா? என்ன சொல்லுகிறாய்!
  போரில் தோற்றுவிட்டார்! இனி ஓடிவருவதில்தான் உயிர் இருக்கிறது என்று சொல்லுகிறேன்!

20.தடகளப் பந்தயத்தில் மன்னருக்கு ஓட்டப்பந்தயம் தான் மிகவும் பிடிக்குமாமே!
பின்னே அவர் போர்க்களத்தில் ஓடிவருவதில் சூரப்புலியாச்சே!

21.தலைவரோட கூட்டத்துல மேடையிலே நிறைய கூட்டமாமே!
ஆமாம் மேடை நிறைஞ்ச கூட்டம்! தொண்டர்கள் நிறையலே!

22.பிறந்தநாள் வாழ்த்துக் கூட்டத்துக்கு தலைவர் ஏன் கையில குடையோட வர்றார்?
தொண்டர்கள் வாழ்த்து மழையிலே நனைஞ்சிட போறோம்னு ஒரு பாதுகாப்புக்குதான்!

23.தலைவர் இதுவரைக்கும் எல்லா கட்சிக்கும் தாவிட்டார் ஒரு கட்சியையும் விட்டு வைக்கலை!
அதுக்காக ஜம்பிங் ஜெயண்டேன்னு ப்ளெக்ஸ் பேனர் வைக்கிறது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லே!

24.நான் நடிக்க வந்ததே ஓர் ஆக்ஸிடெண்ட்!
  இந்த விபத்தாலே நிறைய பேரு பாதிக்கப்பட்டிருக்காங்களே இழப்பீடு தருவீங்களா?

25.அந்த டைரக்டர் சைலண்டா ஓர் புதுமுகங்களை வைச்சு ஓர் படம் எடுத்தாரே என்ன ஆச்சு?
  சத்தமே வரலை!

26. அந்த ஜோடி ரொம்ப சிக்கனமான ஜோடின்னு எதை வைச்சு சொல்றீங்க?
புருஷன் கனமாவும் மனைவி “சிக்’க்குனு இருக்கறாங்களே அதை வச்சுத்தான்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்

செல்லும் செல்லாதததுக்கு செட்டியாரைக் கேள்! பாப்பாமலர்!

$
0
0
செல்லும் செல்லாதததுக்கு செட்டியாரைக் கேள்! பாப்பாமலர்!


 ஓர் ஊர்ல ஒரு செட்டியாரு இருந்தாரு. பெரிய வியாபாரி, அதோட பணத்தை வட்டிக்கும் விடுவாரு. அவர் பேரு சக்கரை செட்டியார். நூறு ரூபாய் பணத்துக்கு ஆறு ரூபாதான் வட்டி அதிகமில்லை. மாதா மாதம் பத்துரூபாய் கட்டிவிட வேண்டும். பத்து மாசத்தில் கடனை தீர்த்துவிட வேண்டும்.

   பத்துமாச வட்டி அறுபது ரூபாய், பத்திரம் எழுத கூலி முக்கால் ரூபாய், பத்திர மகமைப்பணம் ஒண்ணேகால் ரூபாய் என மொத்தம் அறுபத்திரண்டு ரூபாய் முதலிலேயே பிடித்தம் ஆகிவிடும். மீதி முப்பத்தெட்டு ரூபாய்தான் கொடுப்பார். அதை பத்து மாதங்களில் நூறு ரூபாயாக திருப்பிட வேண்டும். கொடுப்பது முப்பத்தெட்டு ரூபாய். பத்திரம் நூறுரூபாய்க்கு எழுதி வாங்கிவிடுவார்.

    வட்டியை இப்படி வறுமையாளர்களிடம் கசக்கி பிழிந்து எடுத்து எடுத்து கொழுத்துப்போன செட்டியார் வெளியூர்களில் கொடுத்த பணத்தை வசூலிக்க ஒரு நாளு அயலூருக்கு போனாரு.

    அங்க வசூல் பண்ண பணம் ஒரு ஐம்பதாயிரம் தேறுச்சு! இந்த கதை நடக்கிற காலத்துல நோட்டு எல்லாம் கிடையாது. தங்கக் காசுதான். அதனால இந்த பணத்தை எல்லாம் ஓர் துணிப்பையில் போட்டு இடுப்பிலே கட்டிக்கொண்டார். ஊர் திரும்பணும் பொழுது போயிருச்சு! அவருக்குத் துணையா ஓர் காவலாளு இருப்பான். அன்னிக்குன்னு பார்த்து அவனுக்கு உடம்புக்கு சுகமில்லாம போயிருச்சு. அதனால அவனும் வரலை. செட்டியாருக்கு அசலூர்ல தங்கறதுக்கு அச்சமா இருந்துச்சு! ஆனது ஆவட்டும்னு கிளம்பிட்டாரு.

   பத்துமைல் நடக்கணும் வழியிலே ஆளரவம் இல்லாத காடு வேற துணைக்கு ஓரு ஆளு இருந்தா தேவலைன்னு அவருக்குத் தோணிச்சு. வழியிலே ஓர் வாலிபன் வாட்டசாட்டமா செக்கு உலக்கையாட்டம் நின்னுக்கிட்டு இருந்தானாம். செட்டியாரு அவனை பார்த்து, யாரப்பா நீ! நான் பக்கத்து ஊருக்கு போவணும் துணைக்கு வர்றியா?ன்னு கேட்டாரு.

 அவனும் சாப்பாடு போட்டா வாரேன்னு சொன்னான். சரிப்பா! உனக்கு சாப்பாடு போட்டு கூலியும்  தரேன்! என்னோட துணைக்கு வா!ன்னு கூட்டிக்கிட்டாரு. அவன் சுத்த மூடன். ஆள் உசந்த அளவுக்கு அறிவு உசராத ஆளு! நல்ல சாப்பாட்டு ராமன். அவனைக்கூட்டிக்கிட்டு செட்டியாரு நடந்தாரு.

   வழியிலே ஓரு  கடையில இட்டிலி வித்துக்கிட்டிருந்தாங்க! துணைக்கு வந்தவன் பசிக்குதுன்னு சொன்னான். செட்டியாரு ஓர் எட்டணா காசை கொடுத்து சாப்பிட்டுவான்னு சொல்லி அனுப்புனாரு. அவன் ரெண்டனாவுக்கு வயிறு புடைக்க இட்டிலி சாப்பிட்டு மீதி ஆறணாவை கொண்டுவந்து செட்டியார் கிட்டே கொடுத்தான்.

   செட்டியாருக்கு என்ன தோணிச்சோ தெரியலை! நீயே வச்சுக்கன்னு சொல்லிட்டாரு. மூடனுக்கு ரொம்ப சந்தோஷம் அதை மடியிலே கட்டிக்கிட்டான். ரெண்டுபேரும் நடந்தார்கள். வழியிலே பெரிய காடு வந்தது. காட்டை பார்த்ததும் மூடனுக்கு பயமா போயிருச்சு!

   செட்டியாரே! உன்னோட நா வரலை! நீ வாங்கி கொடுத்த இட்டிலியைக்கூட கக்கிடறேன்! இந்தா நீ கொடுத்த ஆறணா! ஆளை விடு! அப்படின்னுட்டு மூடன் ஓடப் பார்த்தான்.

   செட்டியாருக்கு தர்ம சங்கடமா போயிருச்சு! அடடா! இந்த முட்டாளைப்போய் துணைக்கு கூட்டி வந்தோமே! என்று வருந்தி, இளைஞனே! உனக்கு ஒன்றும் நேராது! நான் துணைக்கு இருக்கிறேன்! பயப்படாதே என்று சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு காட்டுக்குள் நுழைந்தார்.

   கொஞ்ச தூரம் போனதும் யாரோ நடமாடும் சத்தம் கேட்கவே, செட்டியார் அங்கே இருந்த ஓர் புதருக்குள்ளே பதுங்கினார். மூடனையும் பதுங்கச் சொன்னார். அங்கே திருடர்கள் கூட்டம் ஒன்றுசென்று கொண்டிருந்தது. பதுங்கிய மூடன் நேரம் ஆகவும் உறங்கிப் போய் உருண்டு போய் பாதையில் விழுந்தான்.

   கும்மிருட்டு! திருடர்கள் கருப்புத் துணி கட்டிக்கிட்டு ஈட்டியும் வாளும் எடுத்துட்டு அவ்வழியே வந்தார்கள் அவங்க மொத்தம் முப்பத்திரண்டு பேர்கள். புதரிலே மறைஞ்சிருந்த செட்டியாருக்கு குலை நடுங்கிச்சு! ஆஹா! இவங்க கிட்ட மாட்டினா அதோகதிதான்னு நினைச்சாரு.

  வழியில் உறங்கிக் கிடந்த மூடனை ஏதோ மரத்துண்டு என்று அந்த திருடனுங்க தாண்டி தாண்டி போனாங்க! கடைசியா வந்த ஒரு திருடன், இதென்ன மரத்துண்டு வழியிலே கிடக்குது என்று காலால் உருட்டினான். அவன் கூட வந்தவனோ, டேய், அது பணந்துண்டு! காலாலே உதைக்காதே! காலில் சிறாய் குத்திக்கொள்ளப் போகிறது! என்றான்.


  இதைக்கேட்ட மூடனுக்கு ஆத்திரமாய் வந்தது, உடனே துள்ளி எழுந்து, ஆறடி மனுசன் படுத்து கிடந்தா உருட்டி தள்ளிட்டு பனந்துண்டுன்னு சொல்றீங்களே! எந்த பணந்துண்டு மடியிலேவாவது ஆறணா துட்டு இருக்குமா?ன்னு கத்தினான்.

    திருடர் தலைவனுக்கு கோபமாய் வர மூடனின் கன்னத்தில் ஒன்று வைத்தான். மூடனோ, என்னை அடி! பொருத்துக்கிறேன்! ஆனா பனந்துண்டுன்னு சொல்லாதே! ஏன்னா பனந்துண்டு மடியிலே ஆறனா இருக்காது! அப்படின்னு சத்தம் போட்டான்.

    அடடா! இவன் ஆறணா, ஆறணான்னு திருப்பித் திருப்பிச் சொல்றானே! இருக்குதா பாப்போம்னு அவன் மடியில் துழாவி ஆறணாவைப் பிடுங்கிக் கொண்டான். அது ஒரணாக்காசுகளா! ரெண்டணாக் காசுகளான்னு இருட்டில் துழாவிப் பார்த்தான்.

   மூடனுக்கு கோவம் வந்துருச்சு! என்னய்யா! பணத்தை தடவி தடவி பாக்கிறீங்க? செல்லுமா செல்லாதாதான்னு பாக்கிறீங்க? செல்லும் செல்லாததற்கு செடி மறைவில் இருக்கும் செட்டியாரைப் போய் கேளும்யா! என்றான்.

     அவ்வளவுதான்! செட்டியாரை சூழ்ந்துகொண்டனர் திருடர்கள். மூடனை துணைக்கு கொண்டுவந்தது செட்டியாருக்கு வினையாகிவிட்டது. ஊரார் வயிற்றெரிச்சலை வட்டியாக வாங்கிக் கொட்டிக் கொண்டார் இல்லையா! இப்ப வட்டியும் முதலுமா ஐம்பதாயிரம் பொன்னை இழந்து விதியேன்னு வீடு வந்து சேர்ந்தார்.

 (செவிவழிக்கதை)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


மனக்கவலைகள் அகற்றிடும் மஹா சங்கட ஹர சதுர்த்தி!

$
0
0

மனக்கவலைகள் அகற்றிடும் மஹா சங்கட ஹர சதுர்த்தி!


    அகஜானனபத்மார்க்கம்கஜானனம்அஹர்நிசம்
அநேகதம்
தம்பக்தாநாம்ஏகதந்தம்உபாஸ்மஹே

கஜாநநம்பூதகணாதிஸேவிதம்கபித்தஜம்பூபலஸாரபக்ஷிதம்
உமாஸுதம்
சோகவிநாசகாரணம்நமாமிவிக்நேச்வரபாதபங்கஜம்

முழு முதற்கடவுளாம் தும்பிக்கையான் விநாயகருக்கு உகந்த விரதங்கள் பதினொன்று உள்ளன. அவற்றுள் மிகச்சிறப்பானதும் எல்லோரும் பின்பற்றக்கூடியதும், எளிமையானதுமான ஓர் விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஆகும்.  இந்த விரதம் இருந்து இழந்த நிம்மதியை, பொருளை, ஆரோக்கியத்தை, ஐஸ்வர்யத்தை, லஷ்மிகடாட்சத்தை பலர் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி ஆகும். தேய்பிறை சதுர்த்தி தினம் செவ்வாய்க் கிழமையில் வந்தால் மிகவும் விஷேசமாகும். ஒவ்வொரு ஆண்டும் உத்தராயணம், மற்றும் தட்சிணாயண காலத்தில் மாசி, மற்றும் ஆவணி மாதங்களில் வரும் தேய்பிறை சதுர்த்தி மஹா சங்கடஹரசதுர்த்தி என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

      விரதத்தில்மிகச்சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள்அனைத்தையும்தீர்க்கக்கூடியசங்கடஹரசதுர்த்தியில்விரதம்இருந்தால்அளவுகடந்தஆனந்தத்தைஅடையலாம். சகலசௌபாக்கியங்களையும்பெறலாம்.
ஒவ்வொரு
மாதமும்வரும்"சங்கடஹரசதுர்த்தி"நாளில்விரதம்இருந்தால்குடும்பத்தில்சுபிட்சமும், தடைகளின்றிஎல்லாகாரியங்களும்வெற்றியடையும்.

"
ஹர"என்றசொல்லுக்குஅழித்தல்என்றுபொருள். சங்கடங்களை அழிக்கும் சதுர்த்தி தினம் சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஆவணிமாததேய்பிறையில்வரும்சதுர்த்திநாளில்இவ்விரதத்தைகடைப்பிடிக்கதுவங்கவேண்டும். செவ்வாய்கிழமைகளில்வரும்சங்கடஹரசதுர்த்திமிகவும்சிறப்புவாய்ந்ததாகும். இதை"மகாசங்கடஹரசதுர்த்தி"என்றுஅழைக்கின்றனர்.

பிள்ளையார்வழிபாடுமிகவும்எளிமையானது. கல், மண், மரம், செம்புமுதலியவற்றால்இறைவனின்திருவுருவங்களைச்செய்யவேண்டும்என்றுஆகமங்கள்கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளிபோன்றஉலோகங்கள், முத்து, பவளம்போன்றரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்குவேர், அத்திமரம், பசுவெண்ணெய், அரைத்தசந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம்ஆகியவற்றால்விநாயகர்வடிவத்தைஅமைக்கலாம். இதனைத்தான்பிடித்துவைத்தால்பிள்ளையார்என்றுவேடிக்கைப்பழமொழியாகநாட்டுப்புறத்தில்சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதைநதிக்கல்) ஆகியவற்றைஒருகைப்பிடிபிடித்தாலேஅதுபிள்ளையாராகிவிடும்என்பதால்இவ்வாறுகூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும்விநாயகப்பெருமானைஆவாஹனம்செய்துவழிபடுவர். விநாயகப்பெருமானைமிகஎளிமையாகவடிவமைத்துவிடலாம்.


   இத்தனை எளிமையானவரான பிள்ளையாரை சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று எளிமையாக அருகம் புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட அனைத்துப் பாவங்களும் அகலும். சங்கடஹர சதுர்த்தி உபவாசம் என்பது அன்று முழுவதும் உணவருந்தாமல் வெறும் பால், மற்றும் பழம் மட்டும் அருந்தி விரதம் இருந்து, இடைவிடாத கணேச தியானம் மனதினில் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று  அருகம்புல், வெள்ளெருக்கம் பூ, வாசனை புஷ்பங்கள் சார்த்தி தேங்காய், பழம், முதலியவை நிவேதனம் செய்து அர்சித்து வழிபடலாம்.

    அன்று இரவு 9.00 மணி வாக்கில் உதயமாகும் சந்திரனை தரிசித்து தீபம் காட்டி வழிபாடு செய்து விரதத்தை முடிக்க வேண்டும். இரவில் எளிய உணவாக சிற்றுண்டி மட்டும் உண்ண வேண்டும். இவ்வாறு ஆவணி சதுர்த்தியில் துவங்கி அடுத்த ஆடி மாதம் வரை 12 சதுர்த்திகள் விரதம் இருந்தால் நினைத்தது கை கூடும் என்பது நம்பிக்கை.

சதுர்த்தியன்றுவிநாயகர்  அகவல், விநாயகர்கவசம், காரியசித்திமாலைபாடல்களைப்பாடிஅவரைவழிபடலாம். இதில்எடுத்தசெயல்வெற்றிபெறச்செய்யும்தனிச்சிறப்புடையது  காரியசித்திமாலை கேட்டவரம்தரும்தனிச்சிறப்புடையஇத்துதியைவிநாயகர்முன்புஅமர்ந்துஉள்ளம்ஒன்றிப்பாராயணம்செய்பவர்களின்மனவிருப்பம்எளிதில்நிறைவேறும். சிறப்புமிக்கஇத்துதியைமூன்றுவேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள்நினைத்த  காரியங்கள்கைகூடும். அனைத்துவகைகளிலும்வெற்றி  உண்டாகும். எட்டுநாட்கள்ஓதிவரமனதில்மகிழ்ச்சிஉண்டாகும். சங்கடஹரசதுர்த்திதிதிகளில்(தேய்பிறைசதுர்த்தி) எட்டுமுறைஓதினால்அஷ்டமாசித்திகைகூடும். தினமும் 21 முறைஇப்பாடலைப்பாராயணம்செய்வோரின்சந்ததிகல்வியிலும், செல்வத்திலும்மேம்பட்டுத்திகழும்என்பதுஐதீகம். கபிலநாயனார்இத்தகவலைஎழுதியுள்ளார்.


விநாயகருக்குரிய11 விரதங்கள்

1.வெள்ளிக்கிழமைவிரதம்
2. செவ்வாய்க்கிழமைவிரதம்
3. சதுர்த்திவிரதம்
4. குமாரசஷ்டிவிரதம்
5. தூர்வாகணபதிவிரதம்
6. சித்திவிநாயகர்விரதம்
7.துர்வாஷ்டமிவிரதம்
8. நவராத்திரிவிரதம்
9.வெள்ளிப்பிள்ளையார்விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார்விரதம்
11. சங்கடஹரசதுர்த்திவிரதம்

இவ்விரதங்களில்
ஆவணிமாதத்தில்வரும்சதுர்த்திவிரதம்மிகவும்முக்கியமானதாகும்

விநாயகர் துதிகள்:
 
ஐந்துகரத்தனையானைமுகத்தனை

இந்தின்
இளம்பிறைபோலும்எயிற்றனை

நந்தி
மகன்றனைஞானக்கொழுந்தினைப்

புந்தியில்
வைத்துஅடிபோற்றுகின்றேனே.
                                                                                        திருமூலர்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணிமின் கனிந்து
                                            11ஆம் திருமுறை
பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே. 
                           சம்பந்தர்
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்.  
                          கச்சியப்பர் 


குள்ளக்குள்ளனைக்குண்டுவயிறனை
வெள்ளைக்
கொம்பனைவிநாயகனைத்தொழு
வெள்ளைக்
கொம்பன்விநாயகனைத்தொழு
துள்ளி
யோடும்தொடரும்வினைகளே
கருணை
வள்ளல்கணபதியைத்தொழ
அருமைப்
பொருள்கள்அனைத்தும்வருமே
முப்பழம்
வெல்லம்மோதகம்தின்னும்
 தொப்பையப்பனைத்தொழவினைஇல்லை
வேழ
முகத்துவிநாயகனைத்தொழவாழ்வுமிகுந்துவரும்.
                                                                                நாட்டுப்புறப்பாடல்

இது போன்ற தமிழ் துதிகளை பாடியும் விநாயகரை வழிபாடு செய்யலாம்.

விநாயகர்அகவல்பற்றிகாஞ்சிப்பெரியவர்கருத்து


மற்றகிழமைகளில்மறந்துவிட்டாலும்விநாயகரைவெள்ளிக்கிழமைமற்றும்சதுர்த்திதிதிகளில்மறக்காமல்வணங்கவேண்டும். அவ்வாறு, விநாயகரைவணங்கும்போதுஉங்கள்நினைவிற்குவரவேண்டியஇன்னொருவர்அவ்வையார். அவர்சீதக்களபசெந்தாமரைப்பூம்என்றுதுவங்கும்விநாயகர்அகவல்என்னும்பாமாலையைஎழுதியவர். இதைசதுர்த்தியன்று  பாடினால், நீங்கள்பிள்ளையாரிடம்ஏதாவதுவேண்டினால், அவர்இரட்டிப்பாகத்தருவார். விநாயகர்அகவல்படிப்பதுவீட்டுக்கும், நாட்டுக்குமட்டுமல்ல, உலகுக்கேநல்லது. காஞ்சிப்பெரியவர்இதுபற்றிகூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், <லகத்துக்கும்நன்மைஉண்டாவதற்குஅவ்வையார்மூலம்பிள்ளையாரைப்பிடிப்பதேவழி, என்கிறார்.
  விநாயகர் அகவல் படிக்க இங்கே சொடுக்குங்கள்! விநாயகர் அகவல்

சங்கட ஹர சதுர்த்தி தினம் நாளை 1-9-2015 செவ்வாய்க் கிழமை வருகின்றது. விநாயகருக்கு உகந்த செவ்வாய் கிழமையில் வரும் இந்த நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவோமாக!

(படித்தது தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

குரோதம் கொண்ட குரோம் பிரவுசர்!

$
0
0

குரோதம் கொண்ட குரோம் பிரவுசர்!

கடந்த வெள்ளியன்று வரலஷ்மி விரதம். நிறைய பேர் வீடியோ பகிர்கின்றார்களே நாமும் இன்று வீடியோ பகிர்வு ஒன்று இடலாம் என்று நினைத்தேன். ஏற்கனவே கொஞ்சம் சிரியுங்க பாஸ் பதிவு போட்டிருந்தேன். வரலஷ்மி மா இண்டிக்கு ராவம்மா…! என்ற பாடலை யூடியுபில் பார்த்தேன். இன்றைய தினத்திற்கு இது பொருத்தமாக இருக்கும் என்று யூ டியுப் டவுன் லோடரில் தரவிறக்கினால் கொஞ்சத்தில் தரவிறங்க வில்லை.

   ஏதோ எரர் காட்டிக் கொண்டே இருந்தது. நான் பாட்டுக்கு விட்டுவிட்டு அடுத்தவேலையை பார்க்க போயிருக்க வேண்டும். அங்கேதான் என் கை சும்மா இருக்கவில்லை. கூகுளில் சர்ச் செய்து வேறு ஒரு யு டியுப் டவுண்லோடரை இன்ஸ்டால் செய்து அந்த பாடலை டவுண்லோடிட்டுவிட்டேன்.

      மாலையில் ஏழு மணி அளவில் பதிவிட்டு கொள்ளலாம் அதுவரை சக பதிவர்களின் பதிவுகளை படிக்கலாம் என்று எண்ணி பதிவுகளை வாசித்து கருத்திட ஆரம்பித்தேன். அப்படியே யாதோ ரமணி அவர்கள் தளம் சென்றதும் விளம்பரம் ஒன்று குறுக்கிட்டது. இவர் தளத்தில் இப்படி ஆகாதே என்று அடுத்த தளம் சென்றாலும் படிப்பதற்குள்ளேயே விளம்பரம் ஆக்ரமித்து அதை குளோஸ் செய்தால் அடுத்த பக்கத்தில் திறக்க ஆரம்பித்துவிட்டது. 

   என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பயர்பாக்ஸ் பிரவுசருக்குச் சென்று ஓப்பன் செய்தால்  இப்படி விளம்பரம் குறுக்கிடவில்லை. பிரவுசரில்தான் கோளாறு என்று குரொம் பிரவுசர் செட்டிங் சென்று எதை எதையோ மாற்றியும் ஒன்றும் சரியாகவில்லை. இரண்டு ஜீ.பி வேறு செலவாகிவிட்டது. எப்படி என்றே தெரியவில்லை. வருத்தமுடன் குளோஸ் செய்துவிட்டு படுக்கப் போய்விட்டேன்.

   சனியன்று மீண்டும் இணையத்தை திறந்து பிரவுசர் ஓபன் செய்கையில் விளம்பரம் குறுக்கிடவில்லை! அப்பாடா என்று ஒர் பதிவு போட்டுவிட்டு அடுத்த பதிவுகளுக்கு சென்றால் மீண்டும் விளம்பரத் தொல்லை. அதுவும் டேட்டிங்க் விளம்பரங்கள், ரம்மி என்று அநாகரிகமான விளம்பரங்கள். குரோம் செட்டிங்ஸ் சென்று எதை எதையோ குடாய்ந்து குக்கிஸ்களை நீக்கிய பின் விளம்பரம் சிறிது நேரம் நின்றது. ஆனால் என் ஐடியில் கருத்திட முடியவில்லை.

   வெறுத்துப் போய் பயர் பாக்ஸில் சிலரது தளங்களுக்கு மட்டும் சென்று கருத்திட்டு வந்தேன். உடல் அசதியாக இருந்தமையால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாக குரோம் பிரவுசரை என் கம்ப்யூட்டரில் அன் இன்ஸ்டால் செய்தேன். இன்று சீ கிளினரில் டியுன் அப் செய்துள்ளேன். நாளை மீண்டும் தரவிறக்கி பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

    இன்றைய பதிவுகள் படிப்பது, இடுவது எல்லாம் பயர்பாக்ஸில்தான். முதலில் இதைத்தான் பயன்படுத்தினேன். குரோம் வந்தபின் இதில் பயன்படுத்துவது கஷ்டமாக இருக்கிறது.

   வேறு யாராவது ஊடுருவி விட்டார்களா என்றும் பயம்! ஆனால் செக் செய்தபோது அப்படி எதுவும் கிடைக்கவில்லை! அதனால் ஓர் நிம்மதி! இந்த குழப்பத்தில் நேற்று பதிவும் இடவில்லை. யாருடைய தளத்திற்கும் வரவில்லை! நாளையும் சங்கட ஹர சதுர்த்தி இருப்பதால் இணையம் பக்கம் வர முடியுமா என்று தெரியவில்லை.
குரோம் பிரவுசர் மீண்டும் தரவிறக்கலாமா? அல்லது பழைய தறவிறக்கையதையே பயன்படுத்தலாமா?  இல்லை பயர் பாக்ஸிலேயே தொடரலாமா? உங்கள் ஆலோசனைகளை சொன்னால் நன்றாக இருக்கும்.
தரவிறக்கிய வீடியோ டவுன் லோடர் ytd video downloader.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

ரக்‌ஷாபந்தன்!

$
0
0

ரக்‌ஷாபந்தன்!


ஊரெல்லாம் ரக்‌ஷாபந்தன் திருநாள் களைகட்டிக் கொண்டிருந்தது. இளவயது பெண்கள் தம் வயதொத்த இளைஞர்கள், சகோதரர்கள் கையில் ராக்கியைக் கட்டி ஆசி வாங்கி பணமும் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

   இதோ ரேகா கையில் ஓர் ரக்‌ஷா பந்தன் கயிறுடன் அந்த தெருவில் நுழையவும் நண்பர்களோடு தன் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த சுமனுக்கு வியர்த்தது. ரேகாவை அவன் நேசிக்கின்றான். இதுவரை அவளிடம் சொல்லவில்லை. சொல்ல தைரியம் வரவில்லை.

     ரேகா அவன் வசிக்கும் அடுத்த தெருவில் வசிக்கின்றாள். அவன் தங்கையோடு படிக்கின்றாளாம். அடிக்கடி தங்கையை பார்க்கவும் அவன் வீட்டுக்கு வருவாள். அப்போது இருவருக்கும் பழக்கம். பழக்கம் என்றால் ஹாய், ஹலோ! நல்லா இருக்கீங்களா? இப்படி பேசிக் கொள்வதுதான். ஆனால் அவனுக்கு ரேகாவை நிரம்ப பிடித்து இருந்தது. ரேகாவுக்கு அவனை பிடித்திருக்க வேண்டும். ஆனால் இருவரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

    ரேகாவை முதன் முதலில் ஒரு பேருந்து நிறுத்தத்தில்தான் பார்த்தான் அவன்.  அன்று அவன் நினைத்தது எல்லாம் நடந்தது. யாரடி நீ மோகினியில் நயன் தாராவை பார்த்ததால் தான் நல்லது நடக்கிறது என்று எண்ணிக் கொண்டு ஃபீல் செய்யும் தனுஷ் போல மாறிப்போனான் சுமன்.

   அன்று முதல் எந்த காரியத்தை முதலில் செய்ய ஆரம்பித்தாலும் ரேகாவை பார்க்காமல் செய்ய மாட்டான். எக்ஸாம் எழுதப்போனாலும் சரி! புதிதாக பைக் வாங்க போனாலும் சரி தெரு முனையில் காலைவேளையில் போய் காத்து நிற்பான். அந்த பெண்ணும் கல்லூரி செல்ல பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்பாள். எட்ட நின்று ஒர் பார்வை. அவள் இவனை பார்த்து புன்னகைத்துவிட்டால் கூடுதல் மகிழ்ச்சி. அன்று பூராவும் இவன் நிலை கொள்ளாமல் தவிப்பான். 
   

    அதற்கு ஏற்றார் போல அவளை பார்த்துவிட்டு அவன் துவக்கிய செயல்கள் எல்லாம் வெற்றியானது. அத்தனை நாள் அரியர்ஸ் வைத்திருந்த எக்ஸாமில் பாஸாகினான். ரொம்பநாளாய் வாங்க முடியாத பைக் லைசன்ஸ் வெற்றிகரமாக வாங்கினான். இன்று கூட அவன் அவளை எதிர்பார்த்து காத்திருப்பது நாளை நடக்க விருக்கும் ஓர் முக்கிய இண்டர்வியுக்கு அதிகாலையிலேயே கிளம்ப வேண்டும். அதிகாலையில் அவளை பார்ப்பது சிரமம். செண்டிமெண்டாய் இப்போது பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று நினைத்து கிளம்புகையில் நண்பர்கள் வந்துவிட தெரு முனையில் நண்பர்களோடு  பேசியபடியே காத்திருந்தான்.

      நினைத்தார்போல அவளும் வந்தாள். ஆனால் அவள் கையில் ரக்‌ஷா பந்தன் கயிறு. ஓ இன்று ரக்‌ஷா பந்தனோ? ஆஹா… இன்று இதை இவள் எனக்கு கட்டிவிட்டால் என்ன ஆவது? சகோதரன் ஆகி விடுவேனே! என்னால் அவளிடம் அப்படி பழக முடியாதே! ஐயோ இவள் கண்ணில் பட வேண்டாமே என்று நழுவ நினைத்தான்.

      ஆனால் அவள் கவனித்து விட்டாள். முன்னை விட வேகமாக வந்தாள்.  "ஹாய்…  ஒரு நிமிஷம்..!  ஹேப்பி ரக்‌ஷா பந்தன்…"என்றபடி அவள் முன்னேற  இவன் கூட்டாளிகளும்  "ஹேப்பி ரக்‌ஷாபந்தன்.."என்று சொல்ல.. இவன் பம்மினான்.

         ஐயோ வசமாக மாட்டிக் கொண்டோமே! எல்லோர் கையில் கட்டி விட்டு போகட்டும் நம் கையிலும் கட்டி விட்டால் நம் ஆசை… கனவு எல்லாம் என்ன ஆவது? என்றபடி  தவிக்க

    "ஹாய் சுமன்… ஹேப்பி ரக்‌ஷா பந்தன். உங்க வீட்டுக்கு வரலாமா?"என்றாள் அவள்.

       "எ… எதுக்கு? "

     "என்ன சுமன்? இப்படி கேட்கறே? இன்னிக்கு ரக்சா பந்தன்  கயிறு கட்டத்தான். "

     "ஐயோ வேணாம்….! "

   "இல்லை சுமன்! இன்னைக்கு கண்டிப்பா ரக்‌ஷாபந்தன் கட்டித்தான் ஆகனுமாம் அம்மா சொன்னாங்க."

    "அம்மா சொல்லி அனுப்பினாங்களா.."

   "ஆமாம்…! "

    "கண்டிப்பா ராக்கி கட்டித்தான் ஆகனுமா…?"


    "இல்லையா பின்னே…? இன்னைக்குத்தானே ரக்‌ஷாபந்தன்…" 
"சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் கிட்டே ஆசி வாங்கணும் இல்லையா…"

    "கண்டிப்பா…."சுமனின் முகம் தொங்கிப் போனது. 

   "என்ன சுமன்? என்னை வீட்டுக்குக் கூப்பிட மாட்டியா?"

    "எ… என்னது?"

  "வீட்டுக்கு கூப்பிடமாட்டியான்னு கேட்டேன்!"

   "வா… வாங்க..!"

   "ஒரு நிமிஷம் இரு சுமன்.. அம்மாவும் வரேன்னாங்க!"

     "அம்மாவா? அவங்க எதுக்கு?"புரியாமல் முழித்தான் சுமன்.

    "அம்மா… ரெடியா… சுமன் ஒத்துகிட்டாச்சு! வாங்க போகலாம்."
 பலியாடாய் சுமன் முன்னேற பின் தொடர்ந்தார்கள் அவர்கள்.

    சுமனின் வீட்டுக்குள் நுழைந்ததும், "வாங்க வாங்க!"என்று வரவேற்றாள் சுமனின் அம்மா.

     "ஹேப்பி ரச்ஷா பந்தன்…  அண்ணா  இருக்காரா கூப்பிடுங்க.. ”என்றபடி ஸ்வீட்டை நீட்டினாள் ரேகாவின் தாய்.

   அதற்குள் சுமனின் அப்பா வெளியே வர.  “ஹேப்பி ரக்‌ஷா பந்தன் அண்ணா…! ”என்றபடி அவர் கையில் ராக்கியை கட்டி விட்டு  “ஆசிர்வாதம் பண்ணுங்கன்னா!” என்றபடி காலில் விழுந்தாள் ரேகாவின் தாய்.

    அறுபது மைல் வேகத்தில் துடித்த சுமனின் இதயம் நிம்மதி அடைந்து  ஸ்… அப்பாடி,…! என்று நிமிர தூரத்தே நின்று கண் சிமிட்டி பழிப்பு காட்டினாள் ரேகா.
   பெண் மனதை புரிந்து கொள்ளாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தான் சுமன்.

    டிஸ்கி} நேத்து சீனுவின் ரக்‌ஷா பந்தன் படிச்சதுமே தோணுன ஓர் கருவினை கதையாக்கி உள்ளேன். நேரமின்மையால் இன்னும் கூர் தீட்டவில்லை! பணிகளுக்கு இடையே ஓர் பதிவு இது! உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

கோஹ்லியின் தொடர் வெற்றி! தோனிக்கு பின்னடைவா?

$
0
0

கோஹ்லியின் தொடர் வெற்றி! தோனிக்கு பின்னடைவா?


    இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்போதும் இந்தியா ஜெயித்துக் கொண்டிருக்க வேண்டும். ஜெயிக்கும் போதெல்லாம் கொண்டாடுவார்கள் தோற்றவுடன் தூக்கி வீசி விடுவார்கள். இப்போது பாராட்டு வாங்கும் முறை கோஹ்லியினுடையது. இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தொடர் வெற்றி பெற்று தந்து இருக்கிறார். பாராட்ட வேண்டிய விஷயம்தான்.

   குறிப்பாக இந்த தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றியை நெருங்கிவிட்ட பின்னர்   மட்டையாளர்களின் தவறால் போட்டியை இழந்தார்கள். அப்போதும் கோஹ்லி மனம் தளரவில்லை. அடுத்த போட்டியில் சாதிப்போம் என்றார். சொன்னபடி சாதித்துக் காட்டியுள்ளார். அன்னிய மண்ணில் அஷ்வினின் பந்து வீச்சு அவ்வளவாக எடுபடுவது கிடையாது. ஆனால் இந்த முறை 21 விக்கெட்டுக்களை சாய்த்து தொடர் நாயகனாக மிளிர்கின்றார். அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினர்.

      தொடரின் துவக்கத்திலேயே முரளிவிஜய் காயம், அடுத்த போட்டியில் தவானுக்கு காயம், சஹாவுக்கு காயம் என முக்கியவீரர்கள் காயத்தால் அவதிப்பட்டனர். கோஹ்லி பார்மில் இல்லை. ஐந்து பவுலர்கள் பார்முலாவை வேறு கையில் எடுத்திருந்தார் கோஹ்லி. பின்வரிசையில் நிலைத்து ஆட திறமையான மட்டையாளர்கள் இல்லாத போதும் சாதித்து காட்டியுள்ளது இந்திய அணி.


    தோனி எப்போதும் தற்காப்பு பாணி ஆட்டத்தை மேற்கொள்வார். ஆக்ரோஷமான போக்கு இருக்காது. சில சமயம் வியுகங்களை மாற்ற யோசிப்பார். ஆனால் கோஹ்லியின் வியூகம் தோனிக்கு நேர் எதிரானது. எதிரணி மட்டையாளர்கள், பந்துவீச்சாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட தோனி விரும்ப மாட்டார். ஆனால் கோஹ்லி ஆக்ரோஷமானவர். எதிரணியினரை சீண்டுவார். அவர்கள் வம்புக்கிழுக்கையில் சண்டைக்குச் செல்வார். அப்படித்தான் இஷாந்த் சர்மாவும் இந்த தொடரில் நடந்து கொண்டார். தம்மிகா பிரசாத், சண்டிமால் ஆகியோருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது கொஞ்சமல்ல நிறையவே மிகை. எனவேதான் ஓர் போட்டிக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளார்.


     கேப்டன் ஆன பிறகு ஓர் முழுமையான தொடருக்கு கோஹ்லி பொறுப்பேற்றது இந்த தொடரே. இதில் வென்று சாதித்துக் காட்டிவிட்டார். இவர் பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் ஒவ்வொரு போட்டியிலும் சக மட்டையாளர்கள் கை கொடுக்க போட்டி இவர் வசம் வந்தது. 

     கண்டிப்பாக இது தோனிக்கு பின்னடைவாகவே தோன்றுகிறது. டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்திற்கு இந்தியாவை கொண்டுவந்தது அவர்தான் என்றாலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து ஓய்வும் பெற்றார். தற்போது ஒருநாள் போட்டிகளிலும் சொல்லிக் கொள்ளும் படி வியுகம் அமைக்கவில்லை. முன்பு அவரிடம் இருந்த கேப்டன் கூல் என்ற அணுகுமுறையும் மாறி உள்ளது. 

   அதே போல ஓர் அணிக்குள் இரண்டு தலைவர்கள் என்ற இந்தியாவின் புதிய அணுகு முறை வீரர்களிடையே பிளவையும் ஏற்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள் அது உண்மையோ இல்லையோ பிளவை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. டெஸ்ட் அணியில் ஆடும் பலர் ஒருநாள் அணியிலும் ஆடுகின்றனர். கோஹ்லியும் அதில் ஒருவர். அவரே தலைவராக டெஸ்ட் அணியிலும் சாதாரணவீரராக தோனி வழி நடத்தலில் ஆடுவதற்கும் வேறுபாடு இருக்கும். வீரர்களுக்கும் எவரை சப்போர்ட் செய்தால் அணியில் நீடிக்கலாம் என்ற குழப்பம் இருக்கும்.
   ஏற்கனவே சூதாட்ட சர்ச்சைகள்  இருக்கும் கிரிக்கெட்டில் இப்போது இரு தலைவர்களில் எவர்  வழி நடப்பது என்ற பிரச்சனை. தோனி வழிநடத்தலை கோஹ்லி ஏற்க மறுக்கலாம். இப்படியெல்லாம் நடப்பது பிளவை ஏற்படுத்தக் கூடியது.

     தோனி நீண்டகாலம் தலைவராக இருந்து விட்டார். வயதும் கூடிவிட்டது. இன்னும் ஓர் இரண்டு ஆண்டுகள் விளையாட வாய்ப்பு இருக்கும் அவ்வளவுதான். எனவே அவர் பெருந்தன்மையாக தனது தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துவிடலாம். விக்கெட் கீப்பராக மட்டும் தொடரலாம். அல்லது முழு ஓய்வையும் அறிவித்து விடலாம். 


   அது நடக்கும் என்றே தோன்றுகிறது. இலங்கையுடனான இந்த தொடரில் கோஹ்லியின் அணுகுமுறை அவருக்கு பெருத்த ஆதரவை தந்துள்ளது. இது தோனிக்கு பெரும் பின்னடைவே! அவரது ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே நான் நினைக்கிறேன்.

  இந்த தொடர் வெற்றி ஓர் கூட்டு முயற்சியில் கிடைத்த வெற்றி! இந்த கூட்டு முயற்சி ஒருநாள் தொடரில் தொடர தோனி விட்டுக் கொடுக்க வேண்டிய காலம் வந்தாகிவிட்டது.  

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

அப்பாவின் சினேகிதன்!

$
0
0
அப்பாவின் சினேகிதன்!

      
சென்னை அண்ணா நகரில் நேர்முகத் தேர்வை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கையில் பெற்றுக்கொண்ட களிப்பில் மிதந்தபடி டீ குடிக்கலாம் என்று அந்த டீக்கடைக்குச் சென்றேன். சத்தியமாய் அவரை அந்த டீக்கடையில் அந்த கோலத்தில் காண்பேன் என்று என்னுடய கனவில் கூட நினைத்துப்பார்க்க வில்லை.அவருக்கும் என்னைக்கண்டதும் அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும் முகம் வியர்த்துக்கொட்ட என்னையே பார்த்தார்.அது பொறியில் அகப்பட்ட எலியின் பரிதாபப் பார்வையாக எனக்குத் தோன்றியது.
         அவர் அப்பாவின் சினேகிதர்.நீலகண்ட அய்யர்.. ஊரில் கெத்தாய்ப்பாக கோட் சூட்டில் உலாவரும் அவர் இங்கே காவியுடுத்தி பனியனோடு டீ ஆற்றிக்கொண்டிருந்தார்.அதை நான் பார்த்துவிட்டேன்.அவர்கைகள் உதறுகிறது. ஆற்றும் டீ கீழே சிதறுகிறது.என்ன ஒரு ஏமாற்றுக்காரமனிதர்.இவரிடம்போய் அப்பா சிபாரிசு கேட்டாரே? மனதில் வெறுப்பின் அலைகள்.
      நீலகண்ட அய்யர் அப்பாவின் நீண்ட கால சினேகிதர்.சென்னை செகரிட்டரியேட்டில் வேலை என்று சொல்லிக்கொள்வார்.ஊருக்கு வருவது ஆறுமாதத்திற்கு ஒரு முறைதான். கோட் சூட்டோடு வரும் அவர் தங்கும் நாட்களில் கூட பேண்ட் சட்டையோடுதான் நடமாடுவார். நடையில் ஒரு மிடுக்குதொனிக்கும்.ஆளும்கட்சி,எதிர்கட்சி என்று எல்லாக் கட்சி பிரமுகர்களின் பெயர்களைச் சொல்லி அவனெல்லாம் எனக்கு சுண்டக்காய்டா! என்பார். காரியம் ஆகனும்னா என்கிட்டதான் வந்து நிப்பானுங்க என்று பெருமையாய் சொல்லிக்கொள்வார்.
     அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம்கூடியிருக்கும் அவர் சொல்லும் கதைகளைக் கேட்க.கதை என்றால் எல்லாம் அவரது அனுபவங்கள் தான். அவர் பணி நிமித்தமாக சென்ற இடங்கள்,அங்கு நடந்த சுவையான சம்பவங்கள் பற்றி வெகு அழகாக விவரிப்பார்.அந்த விவரிப்பில் கேலி,கிண்டல், சோகம்,கோபம் என நவரசமும் கலந்து இருக்கும்.அவருடைய இந்த கதையைக்கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நான் அவருடைய ரசிகன்.மிகவும் படாடோபமாக நடந்துகொள்வார் அவர். அதேசமயம் மிகவும் கண்டிப்பானவர். போஸ்ட்மேனொருவன் ஒர் கடிதத்தை ஒருநாள் தாமதமாக தந்தான் என்ற போது அவனைப் பற்றி புகார் எழுதி அவனை ஒரு வழி பண்ணிவிட்டார். அதே போஸ்ட் மேண் மனைவிக்கு உடல் நலமில்லாமல் போன போது தானே முன் வந்து எல்லா உதவிகளையும் செய்தார். இதுதான் அவரது குணம்.

       செக்ரெட்டரியேட்டில் வேலை என்பதோடு அவனைத்தெரியும்,இவனைத் தெரியும் என்றதால் பலரும் அவரிடம் என் பையனுக்கு ஒரு வேலை வாங்கித்தரக்கூடாதா ஐயரே என்பார்கள். மூச் அவர் வாயே திறக்க மாட்டார்.பிறகு அவரிடம் பேசவே மாட்டார்.வேலை கேட்டவர் நொந்து போய் ஐயரே எதுக்கு பேசமாட்டேங்கிறீர் வேலை கேட்டது தப்பா? சிபாரிசு பண்ணனா என்னகுறைஞ்சா போயிடுவீர்? என்று கேட்டதுதான் தாமதம் ஆமாம் வோய் உம்ம பையனுக்கு திறமை இருந்தா வேலை தானா கிடைக்கும். அத வுட்டுட்டு சிபாரிசு அது இதுன்னு இனி எங்கிட்ட வராதீர் என்று கட் அண்ட் ரைட்டாய் சொல்லி விடுவார்.
     சிபாரிசு என்றாலே எரிந்து விழும் அவரிடம் காரியம் ஆகாது என்று உணர்ந்தவர்கள் விலகிப்போனார்கள்.கடைசியில் அப்பா மட்டுமே நிலைத்தார்.அதற்கும் வந்தது சோதனை.நான் வேலையில்லாமல் சுற்றுகிறேனே என்று அப்பா,ஐயரே என் பையனுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணக்கூடாதா என்றார். ஐயர் பதில் கூறவில்லை.தொடர்ந்து கேட்ட அப்பா அலுத்துப்போனார்.நண்பனுக்கு நண்பன் உதவி செஞ்சா என்ன? கல்லுளி மங்கனா பதில் பேசாம இருக்கானே என்று புலம்பியவர் ஒருநாள் ஐயரிடம் எம் மவனுக்கு வேலை வாங்கித் தரமுடியும்னா வீட்டுக்கு வா இல்லேனா இனி வராதே என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். 
அன்று போனவர்தான் ஆறுமாதம் ஆகிவிட்டது அவரை ஊரில் பார்த்து.இன்று இந்த நிலைமையில் காண்கிறேன். டீ ஆற்றிக்கொண்டிருக்கும் இவரிடம் எனக்கு வேலை வாங்கித்தரச்சொன்னால் எப்படி முடியும் எனக்கு ஒரே ஆத்திரம். 
"நாராயணா!"குரல் கேட்டு நிமிர்ந்தேன். முறைப்போடு, "மரியாதையா பேசு மேன்! கஸ்டமர பேர் சொல்லித்தான் கூப்பிடுவாயா? "என்று பொறிந்தேன்.
    அவர் முகத்தில் அவமானத்தின் ரேகைகள்.நான் வெற்றிக்களிப்பில் இருந்தேன்.அவர் தயங்கி , "நா..சார் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் "என்றார்.  "எனக்கு டயமில்ல நான் என்ன உங்கள மாதிரி டீ ஆத்திட்டு இருக்கேனா என்ன?உங்ககூட பேசறதுக்கு?"
     "இல்லப்பா.. ஆனா நான் சொல்ற விளக்கத்த..."
  "என்னப்பெரிய விளக்கம் ஒரு டீமாஸ்டர்னு எனக்கு தெரிஞ்சத ஊர்ல சொல்லாதேன்னு கேக்கப்போறிங்களா? அத இப்பவே கேட்டுட்டு கிளம்புங்க! "அவரை கல்லால் அடித்த திருப்தி எனக்கு.அவர் மிகவும் கூனி குறுகிப்போனார் என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு.
   உணர்ச்சி ததும்ப அவர் பேசலானார்.   "சார் நான் டீ ஆத்தறவந்தான் இல்லேங்கல! ஆனா எனக்கும் உணர்ச்சிகள்,குடும்பம் பாசம்,நண்பர்கள் எல்லாம் இருக்கு. அத கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க தம்பி!. என்ன நான் செஞ்ச ஒரே தப்பு நான் செக்ரெட்டரியேட்ல வேலை செய்யறாதா சொன்னதுதான். அது சின்ன வயசுல ஒரு ஆர்வத்தில எல்லோரும் என்ன சுத்தி இருக்கணுமுன்னு நினைச்சு நான் பெரிய வேலயில் இருக்கறதா சொன்னா எல்லாரும் நம்மல சுத்தி வருவான்னு நான் போட்ட தப்பு கணக்கு சார்!. அத எல்லோரும் நம்பவே எனக்கு ரொம்ப வசதியாயிடுச்சு நான் ஒரு சமையற்காரனா செக்ரட்ட்ரியேட் கேண்டின்லதான் இருந்தேன். அதத்தான் சொன்னேன் ஆனா நீங்க எல்லோரும் பெரிய அதிகாரின்னு நினைச்சுகிட்டீங்க அதுல என் தப்பு நான் உண்மைய சொல்லாதுதான்."

       "ஆனா அப்படி சொன்ன பொய் நம்ம ஊருக்கு எவ்வளவு நன்மைய தந்துருக்குன்னு உனக்குதெரிஞ்சிருக்கலாம் ரோடு போடவச்சேன், குடிதண்ணி வசதி, பஸ் வசதி எல்லாத்துக்கும் நான் சொன்ன பொய்தான் உதவுச்சு ஆனா பொய் என்னிக்கும் உண்மை ஆயிடாது. என்னை நான் நியாயப் படுத்தல! நான் செஞ்சது தப்பு தான் ஆனா அது என் அன்பு நண்பனையும் எங்கிட்ட இருந்து பிரிச்சப்பதான் எனக்கு வலிச்சது. ஊர்ல இருந்த ஒரே நண்பன் உங்கப்பாதான் அவனும் பிரிஞ்சப்பதான் நான் தப்பு செய்திட்டேன்னு உறைச்சுது. இப்ப நான் தனிமைப்படுத்தபட்டுட்டேன்.நானும் உங்க்ப்பாவும் சின்னகுழந்தயிலைருந்து 50வருஷமா நண்பர்களா இருந்தோம் ஆனா இப்ப இந்த அற்ப விஷயத்திற்காக பிரிஞ்சிட்டோம்னா அது நன்னா இல்ல !"
      "ஐயா நான் ஒரு டீக்கடைக்காரன்னு ஒத்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன் ஊரே என்னை கேலி பண்ணும். ஆனா என் நட்பு அது உடையக்கூடாதுய்யா! இது நான் ரொம்ப நாளா யோசிச்சு எடுத்த முடிவு!.இத எப்படி சொல்லறதூ உங்கப்பாகிட்டன்னு தவிச்சுகிட்டு இருந்தேன்.நீயே வந்து என்னை பார்த்துட்டே இனி தயங்காம இந்த சமையற்காரன பத்தி உங்கப்பாகிட்ட சொல்லி அவர எங்கூட மறுபடி பேசச்சொல்லுவியாப்பா? "அவர் குரல் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். அவர் செய்தது தவறுதான். அதற்கு தண்டணை நட்பு முறிவதுதானா? கூடாது. என்மனதை என்னவோ செய்ய ஓர் உந்துதலில் அவர் கையைப்பிடித்துக்கொண்டேன். 
      "கவலைப்படாதீங்க மாமா நீங்க எப்பவும் போல மதிப்பா ஊருக்கு வந்துஅப்பாவ பாருங்க. இப்ப இந்த வேலைய வாங்கி தந்ததே நீங்கதான்! நாராயணா! என்ன சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல? ரெண்டு நண்பர்கள சேர்த்துவைக்க ஒரு பொய் சொன்னா தப்பில்ல மாமா!. இப்ப நான் வேலையில் சேர்ந்துட்டேன் அதுக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்தான் இது. இந்த வேலைய நீங்க வாங்கி தந்ததா வீட்ல அப்பாகிட்ட சொல்லப்போறேன். நீங்க பழையபடி வீட்டுக்கு வரணும் உங்க மிடுக்கான நடைய நான் பார்க்கணும் "என்றேன். 
     "நாராயணா!.. "அவர் வார்த்தை வராமல் அழ,  "அழாதீங்க மாமா! உங்ககிட்ட நான் எப்பவும் ஒரு மிடுக்கான தோரணையைத்தான் பார்த்திருக்கேன் இனியும் பார்க்கவிரும்பறேன் "என்றேன்.
   அவர் கண்களை துடைத்தபடி  "டேய் நீ ரொம்ப பெரிய மனுசன்னு உணர்த்திட்டேடா!  "என்று என்னை தழுவிக்கொண்டார்.

 (மீள்பதிவு) 

டிஸ்கி} கொஞ்சம் பிஸி ஷெட்யூல், கோயிலில் ஆஞ்சநேயர், பைரவர் பிரதிஷ்டை, ஒரு வாரமாய் இணையம் பக்கம் வர முடியவில்லை. வெள்ளியன்று மகனுக்கு பிறந்தநாள், மற்றும் காதுகுத்தல் விழா எனவே பொறுத்துக் கொள்ளுங்கள். விரைவில் அனைவர் பதிவுகளுக்கும் வந்து கருத்திடுவேன். நன்றி!

புதுக்கோட்டைக்கு வாருங்கள்! புது மாற்றம் காணுங்கள்!

$
0
0

புதுக்கோட்டைக்கு வாருங்கள்! புது மாற்றம் காணுங்கள்!


    நான்காவது வலைபதிவர் திருவிழா வருகின்ற 11-10- 15 அன்று புதுக்கோட்டையில் புதிய பொலிவோடு அரங்கேற உள்ளது. 2012ம் ஆண்டிலும் 2013ம் ஆண்டிலும் சென்னையில் சீரும் சிறப்பாக நடைபெற்றது தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு. பிரம்மாண்டமான இரு சந்திப்புக்களை அடுத்து சென்ற வருடம் மதுரையில் மகத்தான சந்திப்புத் திருவிழா அரங்கேறியது. மூன்று விழாக்களும் திருவிழாவாக ஜொலித்தது. எண்ணற்ற பதிவர்கள் கலந்துரையாடி மகிழ்ந்து நூல்கள் வெளியிட்டு மகிழ்ந்த அந்த தருணங்கள் என்றென்றும் இனிமையானவை.

    சென்ற ஆண்டு மதுரை சந்திப்பில் இந்த ஆண்டு பதிவர் விழா புதுக்கோட்டையில் நடத்துவது என்று தீர்மாணிக்கப்பட்டது. பதிவரும் மூத்த ஆசிரியரும் பட்டிமன்ற பேச்சாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் முத்துநிலவன் ஐயா தலைமையில் விழாக்குழுவினர் விரைந்து பணியாற்றி வருகின்றனர்.

    இந்த ஆண்டு விழாவில் புதியதாக வலைபதிவர் கையேடு ஒன்று தயாரித்து வழங்க ஆவண செய்துள்ளார்கள். தமிழ்வலைபதிவர்களின் விவரங்களை அதில் அறிந்து கொள்ளலாம். இமாலயப் பணியான இதை சிறப்பாக தொகுத்து வருகின்றார்கள். உங்கள் பதிவும் அதில் இடம் பெற வேண்டுமெனில் செப்டம்பர் மாதம் 20 தேதிக்குள் உங்களைப் பற்றிய குறிப்புக்களை இந்த மின்னஞ்சலில் பதிவு செய்யுங்கள்.bloggersmeet2015@gmail.com

   விழாவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இங்கே சென்று தங்களுடைய வருகையை உறுதி செய்யுங்கள்.வருகையை பதிவு செய்க
 விழாவில் ஏராளமான பரிசுகள், போட்டிகள் காத்திருக்கிறது. விழாவினை பற்றி அறிந்து கொள்ள இங்கே சொடுக்கி பாருங்கள்.வலைபதிவர் விழா விருதுகள் விவரம்

வலைபதிவர்களின் சந்திப்பு சிறக்க உங்கள் தளங்களில் சந்திப்பு பற்றி பகிருங்கள்! உங்கள் சக வலைப்பதிவர்களுக்கு தெரிவியுங்கள். விழாவுக்கு தங்களால் இயன்ற சரீர, உதவியுடன், நிதி உதவியையும் தாராளமாக வழங்குங்கள்! நிதி வழங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்.

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645


 விழாவை பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள ஓர் வாட்சப் குழுமம் துவங்கப்பட்டுள்ளது. அதன் எண்: 9443476716

இந்த வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிந்திட இந்த வலைப்பூவை தொடருங்கள் வலைப்பதிவர் சந்திப்பு 2015
 
 சென்னை பதிவர் சந்திப்பில் அப்துல் பாசித், மேலையூர் ராஜா, சுரேஷ்குமார்,ரமணி ஐயா, திண்டுக்கல் தனபாலன் சைதை அஜிஸ் அவர்களுடன் நான்.
இந்த பதிவர் சந்திப்புக்கு மட்டுமல்ல! அனைத்து பதிவர் சந்திப்புக்களுக்கும் மட்டுமல்ல பதிவர்களுக்கெல்லாம் வழி்காட்டியாக வாழ்ந்து வரும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் மிகச்சிறப்பாக தன் உழைப்பினை நல்கி வருகின்றார். மேலும் புதுக்கோட்டை பதிவர்களும் விழா சிறக்க அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். அவர்களின் உழைப்பு சிறக்க விழா சிறந்தோங்க தோள் கொடுப்போம்! நம்மால் ஆன உதவிகளை ஆலோசனைகளை, ஊக்கங்களை பகிர்ந்து கொள்வோம்! புதுக்கோட்டையில் ஒன்றுகூடுவோம்! வாழ்க பதிவர்கள்! வளர்க பதிவர் ஒற்றுமை!

புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்புக்கு வாருங்கள்! உங்களுள் ஓர் புதிய மாற்றம் காணுங்கள்!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 48

$
0
0

1.    

மன்னா! ஏன் இப்படி தூக்கத்தில் அலறி அடிக்கிறீர்கள்?
  கனவில் எதிரி மன்னன் போரில் விரட்டுகிறான் ராணியாரே!
கனவிலும் கூடவா நீங்க ஜெயிக்க வில்லை!

2.   மாப்பிள்ளை பஸ் கண்டக்டராத்தான் இருக்கணும்னு எப்படிச் சொல்றீங்க?
கவனிக்காம போற ப்ரெண்ட்ஸை விசில் அடிச்சி கூப்பிடறாரே!

3.   அமைச்சரே எதிரியின் கோட்டையை பிடிப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?
இப்படியெல்லாம் மனக் கோட்டை கட்டாதீர்கள் மன்னா!

4.   தலைவர் அன்னிய முதலீட்டாளர்கள் நம்ம மாநிலத்தையே நாட வேண்டும்னு சொல்றாரே என்ன விஷயம்?
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணக் கூடாதுன்ற நினைப்புலதான்!

5.   அந்த தியேட்டர்ல என்ன கலாட்டா?
பால்கனி டிக்கெட் வாங்கின யாரோ ஒருத்தர் பாலும் பழமும் எங்கேன்னு கேட்டு அடம்பிடிக்கிறாராம்!

6.   அன்பே! நம் காதல் வீட்டினருக்கு கசக்கிறதாம்! இனிப்பாய் எதாவது சொல்!
ஆனால் எனக்கு புளிப்புதான் பிடிக்கிறது! சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க!


7.   மன்னா! எதிரி மன்னன் நமது கோட்டையை சுற்றி வளைத்துவிட்டான்!
சுற்றி வளைத்து பேசாதீர்கள்! சரணாகதி ஆகவேண்டும் என்று சொல்லுங்கள்!

8.   இன்னிக்கு தோசை வார்க்கையிலே கொஞ்சம் தீஞ்சி போயிருச்சு!
  அப்புறம்?
அதான் என் முகம் இப்படி காஞ்சி போயிருக்கு!

9.   அந்த சாமியாரை ஏன் கைது பண்ணிட்டு போறாங்க!
அவர்கிட்ட சாந்தியை தேடிப்போன பெண்கள் எல்லாம் வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்!

10. தலைவரோட சம்சாரம் எதுக்கு திடீர்னு மதுவிலக்குக்கு ஆதரவா குதிச்சிருக்காங்க!
  தலைவரோட சின்ன வீட்டோட பேரு மதுவாம்!

11.டாக்டர் பட்டம் வாங்கினதும் தலைவரோட அலும்பு தாங்க முடியலை!
  ஏன் என்ன ஆச்சு!
ஓ.பி சீட்டு வாங்கிட்டுத்தான் உள்ளே வரணும்னு சொல்றாரு!

12. டீக்கடையிலே என்னங்க கலாட்டா?
ஜிராக்ஸ் காபி கொடுக்க மாட்டீங்களான்னு ஒரு கஸ்டமர் கலாட்டா பண்றாருங்க!


13.பழைய பேப்பர் வாங்கறவரை கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா ஏன்?
  எல்லோரையும் குறைச்சலாவே எடை போடறார்!

14. மன்னரின் வீரம் எல்லாம் எங்கே போயிற்று?
  எதிரியின் கர்ஜணையைக் கேட்டதும் ஈரமாய் நாறிப்போயிற்று!

15. பொண்ணுக் கண்ணுலே இனிமே தண்ணியே பார்க்கக் கூடாது மாப்பிள்ளை!
  வெங்காயம் எல்லாம் போட்டு சாப்பிடற அளவுக்கு நாங்க அவ்வளவு வசதியானவங்க கிடையாது மாமா!
16.டாக்டர் உங்க மருந்து சீட்டுல என்ன எழுதறீங்கன்னே புரிய மாட்டேங்குது! கொஞ்சம் தெளிவா எழுதக் கூடாதா?
தெளிவா எழுதினா மருந்து கடைக்காரனுக்கு புரியாதே பரவாயில்லையா!

17.புலவர் ஏன் வருத்தமாய் இருக்கிறார்?
மன்னரை வாயறா புகழ்ந்தும் அவரின் வயிறார வில்லையாம்!

18.அவர் ஆட்டோ ஓட்டுறவருன்னு எப்படி இவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்சி சொல்றீங்க?
கையைப் பிடிச்சு இந்த குலுக்கு குலுக்கிறாரே அதை வச்சுத்தான்!

19.முதல்வராத் தான் இந்த சபைக்குள்ள நுழைவேன்னு  எங்க தலைவர் சபதம் போட்டிருக்காராம்!
அப்ப கடைசி வரைக்கும் சபைக்குள்ள நுழையப் போறது இல்லேன்னு சொல்லு!


20. அந்த டாக்டருக்கு ரொம்பவும் நல்ல மனசு!
எப்படிச் சொல்றே?
ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடி கடைசி ஆசை என்னன்னு கேட்டு நிறைவேத்திட்டுதான் பண்ணுவாருன்னா பார்த்துக்கோயேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




மேஹதார்த்தி என்ற முகில்! முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

$
0
0
மேஹதார்த்தி என்ற முகிலுக்கு முதல் பிறந்த நாள்!







சென்ற வருடம்  ஓர் இனிய விடிகாலைப் பொழுதில் உதயமான மேஹதார்த்திக்கு  முதல் பிறந்தநாள். காதணி விழாவும் குலதெய்வம் ஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நேற்று  நடைபெற்றது.

        வலையக உறவுகளே! வாருங்கள்! வாழ்த்துங்கள்!

மேஹதார்த்தி பிறந்த போது எழுதிய பதிவு:  இங்கே!பிள்ளை பிறந்தான்


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து  ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

சிரிப்பின் காரணம்! பாப்பா மலர்!

$
0
0

சிரிப்பின் காரணம்!  பாப்பா மலர்!


மஹாராஜா தர்மர் இந்திரப் பிரஸ்தத்தில் மிகப்பெரிய ராஜசூய யாகம் செய்தார். அந்த வேள்வியின் முடிவிலே கோடிக்கணக்கான தான தருமங்கள் செய்து முடித்தார். கோதானம் என்னும் பசு தானம், பூதானம் என்னும் பூமி தானம், வஸ்திர தானம் என்னும் துணி தானம், சொர்ண தானம் என்னும் பண தானம், அன்ன தானம் முதலியன செய்தார் தர்மப் பிரபு.
     அப்போது அவருடைய மனதில் தம்முடைய தர்ம குணத்தைப் பற்றி பெருமையாக ஓர் சிந்தனை ஓடியது. அவர் தானம் செய்யும் போது தாரை வார்த்த நீரே வெள்ளம் போல ஓடியது. அந்த தீர்த்தத்தில் ஓர் கீரிப்பிள்ளை உருண்டு புரண்டது. அப்புறம் அது தர்ம ராஜரைப் பார்த்து கலகலவென சிரித்தது. அதன் வெடிச்சிரிப்பினை கேட்டு அனைவரும் வித்தியாசமாக நோக்கினர்.


    யுதிஷ்டிரன் என்று அழைக்கப்பட்ட தர்மராஜா அந்த கீரிப்பிள்ளையைப் பார்த்து அதிசயித்தார். அதன் உடல் பாதி பொன் நிறமாகவும் மீதி கருமையாகவும் இருந்தது. தர்மர் கனிவுடன் அந்த கீரியைப் பார்த்து, “கீரியே! இந்த மாபெரும் சபையிலே வந்து என்னைப் பார்த்து ஏன் சிரிக்கின்றாய்?” என்று கேட்டார்.

     “மஹாராஜா தர்மரே! நீ செய்த இந்த கோடிக்கணக்கான தான தருமங்கள் ஓர் ஏழை அந்தணன் தானம் செய்த அரைக்கால்படி மாவுக்கு சமானம் ஆகவில்லை! அதை நினைத்தேன்! சிரித்தேன்!” என்று சொல்லிவிட்டு மேலும் சிரித்தது கீரிப்பிள்ளை.

     இந்தகால மன்னர்கள் என்றால் இந்த கேலியான பேச்சுக்கு சுட்டு வீழ்த்திவிடுவார்கள். ஆனால் அந்தகாலமாயிற்றே! மஹாராஜா சக்ரவர்த்தியான தர்மராஜா, கீரியே! யார் அந்த அந்தணர் அவர் செய்த தானம் எவ்வாறு உயர்ந்தது சற்று விரிவாகச் சொல்! என்றார்.

    மஹாராஜா! அந்த அந்தணர் ஓர் கானகத்தில் வசித்து வந்தார். அவருக்கு ஓர் மனைவியும் ஓர் மகனும் மருமகளும் இருந்தார்கள். அந்த அந்தணர் காட்டில் உதிர்ந்த தானியங்களை பொறுக்கி எடுப்பார். அதை அமாவாசை பவுர்ணமி தினங்களில் குத்தி அரிசியாக்குவார். பின்னர் அதை வறுத்து மாவாக்குவார். அந்த சத்துமாவை நால்வரும் பகிர்ந்து உண்பார்கள். பதினைந்து தினங்களுக்கு ஒருமுறைதான் அவர்கள் உணவு எடுப்பார்கள். ஏனைய தினம் உபவாசம்தான். தண்ணீரே உணவாக கொண்டு தவமியற்றி வந்தார்கள்.

   அப்படி ஒருமுறை அவர் மாவை தயார் செய்து நான்கு தேக்கு இலைகளில் பகிர்ந்து வைத்து உண்ணத் துவங்கிய போது வயிறு ஒட்டிப்போய் பசியோடிருந்த ஓர் ஏழை அங்கே வர அந்த அந்தணர் தன் பங்கு மாவை ஏழைக்குக் கொடுத்தார். அப்போதும் ஏழையின் பசி ஆறவில்லை. அந்தணரின் மனைவியும் தன் பங்கை அந்த ஏழைக்குக் கொடுத்தார். அதை உண்ட பின்னரும் ஏழை பசியாறவில்லை. தயங்கி நின்றார். உடனே இன்முகத்துடன் அந்தணரின் மகன் தன் பங்கு மாவை கொடுத்தார். அப்போதும் ஏழைக்குத் திருப்தி ஏற்படவில்லை. உடனே மருமகளும் தன் பங்கு உணவை இன்முகத்துடன் தந்துவிட்டார். அதை உண்டதும் ஏழை திருப்தி அடைந்து அவர்களை ஆசிர்வதித்து சென்றுவிட்டார்.

   அடுத்த பதினைந்து நாட்கள் அவர்களுக்கு உணவு இல்லை! மீண்டும் தானியங்களை பொறுக்கி மாவாக்கி உணவுண்ண அமர்ந்தபோது அந்த ஏழை வந்து கையேந்தி நின்றார். இப்போதும் அந்தணர் முகம் சுளிக்கவில்லை. தன் பங்கு உணவைத் தர, மற்றவர்களும் இன்முகத்துடன் தங்கள் பங்கு உணவைத் தந்துவிட்டனர். இன்னுமொரு பதினைந்து தினங்கள் கழிந்தது. மீண்டும் உணவு சேகரித்து உண்ண அமருகையில் ஏழை வந்து நின்றார். அந்தணர் கொஞ்சம் கூட கோபப்படவில்லை. இன்முகத்துடன் வரவேற்று உணவளித்தார். அவரது மனைவியும் மகனும் மருமகளும் கூட முகம் சுளிக்காமல் தங்கள் பங்கு உணவையும் தந்து உபசரித்தனர்.

   இப்படி ஐந்து முறை அந்த அந்தணர் குடும்பத்து உணவை அந்த ஏழை யாசித்து உண்டுவிட்டார். ஐந்தாவது முறை அவர் யாசிக்கும் போது இவர்கள் மிகவும் மெலிந்து  நாடி நரம்புகள் தளர்ந்து இருந்தனர். அப்போதும் இவர்களின் தர்ம சிந்தனை நலியவில்லை. அந்த ஏழையை இன்முகத்துடன் உபசரித்தனர். 


   ஐந்தாவது முறை உணவு உண்ட போது அந்த ஏழை அறக்கடவுளாக மாறி அவர்களை ஆசிர்வதித்தார். “ குணவான்களே! 90தினங்களாய் நீங்கள் சாப்பிடாது இருந்த போதும் தர்ம சிந்தனையுடன் என்னை வரவேற்று உங்கள் உணவைத் தந்து உபசரித்தீர்கள்! உங்கள் முகம் வாடவில்லை! எரிச்சல் அடையவில்லை! முன்னிலும் அதிக அன்போடு உபசரித்தீர்கள்! உங்களுடைய இந்த உயர்ந்த பண்பு போற்றப்படவேண்டியது. உங்களை புண்ணிய உலகினுக்கு அழைத்துச் செல்கிறேன்! என்றார்.

   வானத்தில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கி, தேவர்கள் வாழ்த்த அதில் அவர்கள் ஏறி வானுலகம் சென்றார்கள். அப்போது அங்கு சென்ற நான், அவர்கள் தானம் செய்த இடத்தில் சிதறி இருந்த மாவில் உருண்டு புரண்டேன்! அப்போது என் உடலில் பாதி பொன் நிறமாக மாறியது. அது முதல் யார் தானம் செய்கிறார்களோ அங்கெல்லாம் சென்று புரண்டு வருகிறேன். என் உடல் முழு பொன்னிறம் அடையவில்லை!

   இங்கு நீங்கள் தானம் செய்வதாகக் கேள்விப்பட்டு இங்கு வந்து இந்த தீர்த்தத்தில் உருண்டு புரண்டேன்! அப்போதும் என் உடல் நிறம் மாறவில்லை! அப்படியானால் அந்த அந்தணரின் தானமளவுக்கு உங்களுடைய இந்த கோடிக்கணக்கான தான தர்மங்கள் சமானம் இல்லைதானே! அதை நினைத்தேன்! சிரித்தேன்! என்றது கீரி.

   தர்மர் தலை கவிழ்ந்தார்! தானே மிகப்பெரிய தர்மவான்! என்று நினைத்திருந்த அவரது கர்வம் அழிந்தது.

(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

விதவிதமாய் விநாயகர்கள்!

$
0
0
விதவிதமாய் விநாயகர்கள்!



காஞ்சிபுரம் விபூதி விநாயகர்:

    காஞ்சிமாநகரின் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி உள்ளார் விபூதி விநாயகர். இந்த விநாயகர் உடலில் எப்போதும் திருநீறு பூசியபடி இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.

விகட சக்ர விநாயகர் காஞ்சிபுரம்:

    காஞ்சிமாநகரின் பிரதான விநாயகர் இவரே! ஏகாம்பரேஸ்வரர்ஆயிரங்கால் மண்டபத்தில் அமைந்துள்ளார் இவர். பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுதல் வழக்கம். இது தோர்பிஹி கரணம் என்னும் சம்ஸ்கிருத சொல்லின் திரிபாகும். இது நிகழக் காரணமாக இருந்தவர் இந்த தல விநாயகர். ஒருசமயம் மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை இவர் விழுங்கிவிட மஹாவிஷ்ணு கூத்தாடி தோப்புக்கரணம் போட்டு சிரிக்க வைத்தபோது சக்ராயுதம் வெளியில் வந்து விழுந்ததாம். இந்த விகடம் செய்ததால் இவருக்கு இந்த பெயர். குமரக்கோட்டத்திலும் விகடச் சக்ர விநாயகர் எழுந்தருளி உள்ளார்.

அச்சிரப்பாக்கம் அச்சாணி முறித்த விநாயகர்:
    திரிபுரத்தை எரிக்க விநாயகரை வணங்காது புறப்பட்ட சிவபெருமானின் தேர் அச்சினை முறித்த விநாயகர் இவர். அச்சு இறு பாக்கம் என்பது மறுவி அச்சிருபாக்கம் ஆனது. தேவர்கள் தேர்வடிவாக இருந்ததால் தங்கள் துணையாலே திரிபுர தகனம் நிகழ்வதாக செருக்குற்றனர். இதனால் சிவபெருமான் தேரின் அச்சு முறித்ததாகவும் இந்த விநாயகரை வணங்கி பின்னர் தேர் சீரானதாகவும் வரலாறு உண்டு. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்து அச்சிரப்பாக்கம் அமைந்துள்ளது.

ஆயிர  யானை திரை கொண்ட விநாயகர்;
  திருவண்ணாமலை  அண்ணாமலையார் ஆலயத்தில் கிளிக்கோபுரத்தில் உள்ளார் இந்த விநாயகர். ஒரு சாண் உயரமே உடையவர். முகிலன் என்ற அசுரனிடம் ஆயிரம் யானைகளை திரையாக பெற்றதால் இந்த பெயர்.

சிதம்பரம் நரமுக விநாயகர் எனும் ஆதி விநாயகர்;
    மனித உருவமாகவே உள்ள விநாயகர் இவர். சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் கும்பகோணம் பண்ருட்டி வழி செல்லும் பாதையில் புவனகிரி தாண்டியவுடன் இந்த ஆலயம் அமைந்துள்ளது. தனிக் கோயிலில் ஜடாமுடியுடன் வலது கையில் மோதகம் இடக்கையில் விளாம்பழம் உடன் பெருத்த தொந்தியுடன் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார்.

திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்:
     சிதம்பரம் காட்டு மன்னார்குடி குமராட்சியினை அடுத்து திருநாரையூர் பிரிகிறது. விநாயகரின் ஆறாம் படை வீடாக இந்த தலம் அமைந்துள்ளது. தேவராத்தை தொகுத்த நம்பியாண்டார் நம்பியின் பிறந்த ஊர் திருநாரையூர். ஒரு முறை நம்பியின் தந்தை வெளியூருக்கு சென்றமையால் நம்பியை பிள்ளையார் பூஜை செய்ய சொல்லி சென்றார். நம்பி பூஜை செய்து நைவேத்தியம் செய்த போது பிள்ளையாரை வற்புறுத்தி உண்ண செய்தார். பிள்ளையார் அமைதி காக்க நம்பி தன் தலையை பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். பிள்ளையாரும் அவர் பக்தியை மெச்சி அமுது உண்டார். தகவல் அறிந்த ராஜ ராஜ சோழன் இது உண்மையில்லை தன் முன்னிலையில் நைவேத்தியம் செய்து உண்ண செய்ய வேண்டும் என்றான். விநாயகர் செவி சாய்க்கவில்லை! விநாயகர் மீது இரட்டை மணி மாலை பாடிய நம்பியின் பக்திக்கு மெச்சி அனைவர் முன்னிலையிலும் பிள்ளையார் உண்டார். சிற்பியினால் செதுக்கப்படாத பிள்ளையார் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் ஆனார்.

 வீர கேரள புரம் நிறம் மாறும் விநாயகர்;
   நாகர் கோவிலில் இருந்து 20 கீ.மி தொலைவில் அமைந்துள்ளது. சேரன் வீர கேரளவர்மனால் நிர்மாணம் செய்யப்பட்ட கோயில்.ராவணன் வழிபட்ட விநாயகர். திண்டு சுருட்டி அமர்ந்துள்ள இவர் உத்தராயணத்தில் கறுப்பாகவும் தட்சிணாயணத்தில் வெள்ளையாகவும் இருப்பார். எனவே பச்சோந்தி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சந்திர காந்த கல்லினால் இந்த மாற்றம் நிகழ்வதாக சொல்லப்படுகிறது. இந்த தல ஆலமரமும் தட்சிணாயணத்தில் இலை உதிர்ந்தும் உத்தராயணத்தில் இலை வளர்ந்தும் காணப்படும். கிணற்று நீரும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நிறம் மாறும். திருமணத்தடை நீக்கும் தலம்.

மொட்டைப் பிள்ளையார் அழகிய பாண்டிய புரம்.
  நாகர் கோயிலில் இருந்து வடக்கே பத்து கிமீ தொலைவில் அமைந்து உள்ள பூதப்பாண்டியில் இருந்து 5கிமீ தொலைவில் பழையாற்றங்கரையில் உள்ளது இத்தலம். செல்வந்தர் சேத்தூர் ஜமீன் தார் 1008 சதுர்தேங்காய் விடுவதாக வேண்டிக்கொண்டு விட கடைசி தேங்காய் பிள்ளையாரின் தலையை பதம் பார்த்து தலை மொட்டை ஆனது. அதனால் மொட்டை பிள்ளையார் ஆனார். இவர். தன் தலை கொடுத்து ஜமினீன் தலை காத்ததாகவும் சொல்கிறார்கள்.

நத்தம் ஶ்ரீ காரிய சித்தி கணபதி:

 சென்னை செங்குன்றம் அடுத்த பஞ்செட்டியில் இருந்து மேற்கே பிரியும் சாலையில் 3 கிமீ தொலைவில் நத்தம் அமைந்துள்ளது. இங்குள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஶ்ரீ காரிய சித்தி கணபதி தொந்தியில்லா கணபதி. பிரம்மனுக்கு அருளிய இவர் முக்கண்ணணாக ருத்திராட்ச மாலை,பரசு ஏந்தி ஓங்காரவடிவில் தாமரை மொட்டில் அமர்ந்துள்ளார். இவரை வணங்குவதால் காரிய சித்தி ஆகும். திருமணத்தடை, உத்தியோகத்தடை, பிள்ளைப்பேறு, போன்ற தடைகளுக்கு பரிகார ஸ்தலமாக திகழ்கிறது.

சர்ப்ப ஹஸ்த விநாயகர்:
   இராஜபாளையத்திலிருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பாச அங்குசத்திற்கு பதிலாக சர்ப்பங்களை கையில் தாங்கியுள்ளார். சங்கரன் கோவில் கோமதி அம்மன் ஆலயத்தில் எழுந்தருளி உள்ளார்.

திருப்பாலைவனம் கதவிற் கணபதி
     பொன்னேரி- பழவேற்காடு சாலையில் அமைந்துள்ள திருப்பாலைவனத்தில் கதவிற் கணபதி அருள்பாலிக்கின்றார். சுமார் ஒரு சாண் அளவே உள்ள இவரின் கீர்த்தியோ பெரிது. மஹா மண்டபத்தில் தனி சன்னதியில் இருக்கும் இவரை வணங்கிட வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


விநாயகரின் அறுபடை வீடுகள்!

$
0
0
விநாயகர் பற்றிய சுவையான தகவல்கள்!


விநாயகர் பூஜையில் பயன்படும் 21 பத்திரங்கள்
  1. மாசிப்பச்சை,2 கத்திரி, 3,வில்வம்,4,அருகம்புல்,5 ஊமத்தை, 6,எலந்தை,7,நாயுருவி, 8,துளசி, 9,மாவிலை,10,அரளி, 11,விஷ்ணுகிரந்தம்,12,மாதுளம், 13,நெல்லி, 14,மருதாணி,15,நொச்சி,16,ஜாதி 17,வன்னி, 18,கரிசிலாங்கன்னி 19,நீர்மருது 20,எருக்க இலை, 21 கண்டலீ பத்ரம்.

பெண்வடிவமாக சித்தரிக்கப்பட்ட விநாயகர்கள் விநாயகிகள் எனப்படும். இந்தியாவில் 30 இடங்களில் இந்த விநாயகி சிற்பங்கள் உள்ளன. அவைகளில் சில மதுரை மீனாட்சியம்மன் கோயில் முன்மண்டபம், வடீவீஸ்வரம் வைப்புத்தலம் நாகர்கோயில், சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயில் ஆகிய இடங்களில் உள்ளது.


மோதகத்தத்துவம்:

    அரிசி மாவினால் செய்யப்பட்டு அதற்குள் பூரணம் வைக்கப்பட்ட கொழுக்கட்டையை விநாயகருக்கு படைக்கிறோம் இதன் பொருளை அறிந்து கொள்வோம் அரிசி மாவு சுவையற்றது ஆனால் அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது. யானைக்கு பிடித்தமான உணவும் கூட. சுவையில்லாத அரிசி மாவுடன் சுவையான வெல்லம் சேரும்போது விரும்பி உண்ணும் பண்டமாக மாறுகிறது. பக்தி கலந்த வாழ்க்கையே சுவையாக இருக்கும் என்று உணர்த்துகிறது இந்த மோதக தத்துவம்.

பிள்ளையார் சுழி ஏன்?
   உலகின் முதல் சுருக்கெழுத்தர் விநாயகர் என்று வேடிக்கையாக கூறுவார்கள். வியாசர் வேகமாக பாரதம் கூற அதை எழுதியவர் விநாயகர். தன் தந்தத்தை உடைத்து பாரதம் எழுதிய பிள்ளையாரை நினைவு கூர்ந்து பெருமானை சிந்தித்து ஒரு விஷயத்தை எழுத துவங்குகிறோம் அதுவே பிள்ளையார் சுழி.


விநாயகரும் விருட்சங்களும்:
  வன்னி மரத்து விநாயகரை வழிபட திருமணத்தடை நீங்கும்.
  புன்னை மரத்து விநாயகரை வழிபட தம்பதியர் ஒற்றுமை ஆவர்.
மகிழமரத்து விநாயகரை வழிபட இடமாற்ற பிரச்சனைகள் தீரும்.
மாமரத்து விநாயகரை வழிபட கோபம், பொறாமை நீங்கி வியாபாரம் செழிக்கும்.
வேப்ப மரத்து விநாயகரை வழிபட மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும்.
ஆலமரத்து விநாயகரை வழிபட தீராத வியாதி தீரும்.
அரசமரத்து விநாயகரை வழிபட விளையுள் கூடும்.
வில்வமரத்து விநாயகரை வழிபட பிரிந்த தம்பதியர் இணைவர்.
விநாயகர் தத்துவம்:
   தலை ஞானத்தையும், பெரிய காதுகள் வேதாந்த உண்மைகளை கேட்டறியவும், ஐங்கரங்கள் ஐந்தொழிலை செய்யும் ஆற்றலையும், தும்பிக்கை புத்தியினையும் இன்பம் துன்பம் இனிப்பு கசப்பு செல்வம்,வறுமை, என கலந்து அமைவது வாழ்க்கை என்பதை ஒற்றைக் கொம்பு விளக்குகிறது. அண்டங்கள் அனைத்தையும் உயிர்களையும் தன்னகத்தே கொண்டதாக பானை வயிறு அமைந்துந்துள்ளது.


 அருகம்புல் தத்துவம்:
   அருகம்புல்லானது ஓரிடத்தில் வளர்ந்து ஆறு இடங்களில் பரவக்கூடிய மூலிகை. இதே போன்றே கழுமுனையின் வழியில் செல்லும் குண்டலினி சக்தியும் யோகாசனப் பயிற்சி மூலம் ஆறு பிரதான பரவக் கூடியது. எளிமையின் வெளிப்பாடாக அருகம் புல் அமைந்துள்ளது. எளிதில் கிடைக்க கூடியது. விஷ முறிவு தரும். இதை எளிமையின் உருவமான விநாயகருக்கு சமர்ப்பித்து அவரது அருளை பெறுவதாக ஐதீகம்.

விநாயகரின் ஆறுபடை வீடுகள்;
1.      திருவண்ணாமலை ஆயிரம் திரை கொண்ட விநாயகர்
2.      திருமுதுகுன்றம் ஆழத்துப் பிள்ளையார்
3.      திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்.
4.      மதுரை ஆலால சுந்தர விநாயகர்
5.      பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகர்
6.      திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்.

வெயிலுக்குகந்த விநாயகர்:
  இராமநாதபுரம் தேவி பட்டினம் அருகே உப்பூர் தலத்தில் எழுந்தருளி உள்ள விநாயகர் ஆலயத்திற்கு மேற்கூரை கிடையாது. காசி துண்டி கணபதியும் மேற் கூறை இல்லாமல் உள்ளார்.ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்னம் பாடியது இந்த விநாயகரை வணங்கித்தான்.

பலபுத்தகங்களில் படித்து தொகுத்தேன்!
 
(மீள்பதிவு) 

விநாயகர் சதுர்த்தி வேலைகளில் பிசி! விரைவில் வலையுலகம் திரும்புகிறேன்! அதுவரை பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


பிள்ளையார் திருத்தினார்! பாப்பாமலர்!

$
0
0
பிள்ளையார் திருத்தினார்!


விநாயக சதுர்த்தி தினம்! அதிகாலை! அனைவரும் சிறப்பாக பண்டிகை ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தனர். கோபு தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து பிள்ளையார் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மண்ணை பிசைந்து கொண்டிருந்தான். அவன் எவ்வளவு முயற்சி செய்தும் பிள்ளையார் உருவாகவில்லை! தன்மீதே கோபம் வந்தது அவனுக்கு!
 
  அந்த நேரத்தில் தான் செய்த அறை குறை பிள்ளையாரை பார்த்து கோபப்பட்டு அதை தூக்கி போட்டு உடைத்தான்.எதிர்வீட்டை நோக்கினான். அங்கு அவனது தோழன் விஜய் அழகான பிள்ளையார் ஒன்றை வடிவமைத்து இருந்தான்.
 
   “ச்சே! என்னால முடியலை! அவன் மட்டும் எப்படி அழகா செய்யறான்? நான் செய்யாததை அவன் செஞ்சு பெருமையடிச்சுக்க போறான்.” என்று விஜய் மீது பொறாமைப்பட்டான் கோபு.
 
  விஜய் என்ன சிற்பியா? நினைத்தவுடன் பிள்ளையாரை உருவாக்க? முயற்சியும் உழைப்பும் அவனை அழகான பிள்ளையார் உருவாக்கச் செய்திருந்தது. சிறுவயது முதலே களி மண்ணில் பொம்மைகள் செய்வதில் ஆர்வம் கொண்டவன் அவன். விடுமுறை நாட்களில் வீணாக பொழுதை கழிக்க விரும்பாது பொம்மைகள் செய்து பழகினான். அந்த பழக்கம் இப்போது அவனுக்கு கை கொடுத்தது.
 
 ஆனால் கோபு திடீரென பிள்ளையார் பிடிக்க முயற்சித்தால் நடக்குமா? இதை உணராது விஜய் மீது வீண் பொறாமை கொண்டான் கோபு. மீண்டும் ஒருமுறை விஜய் செய்த பிள்ளையாரை பார்த்தான். ஆத்திரம் கொண்டான். அவனுக்கு மட்டும் அழகாய் பிள்ளையாரா? கூடாது என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
  அந்த சமயத்தில் விஜயின் தாய் அவனை அழைக்க அவன் அப்படியே பிள்ளையாரை விட்டுவிட்டு உள்ளே சென்றான். இதுதான் சமயம் என்று கோபு அவசர அவசரமாக எதிர்வீட்டுக்கு சென்று விஜயின் பிள்ளையாரை உடைத்துவிட்டு மறுபடி தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டான்.
 
  அப்போது கோபுவின் தாய், "கோபு நீ பிள்ளையார் செஞ்சு கிழிச்சது போதும்! நான் கடையில இருந்து பிள்ளையார் வாங்கி வந்தாச்சு அதை வச்சி பூஜை பண்ணிக்கலாம் எழுந்து வா!"என்றாள்.
 
  "சரி "என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான் கோபு.கோபு உள்ளே சென்றது வெளியே வந்த விஜய் தன் பிள்ளையார் உடைபட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். ஆனால் மனம் உடையவில்லை! சிறிது நேரத்தில் புதிய பிள்ளையார் ஒன்றை முன்னைவிட அழகாக மீண்டும் செய்துவிட்டான்.
 
    "கோபு பிள்ளையாரை எடுத்துகிட்டு வா! பூஜைசெய்யலாம்!"தாய் குரல் கொடுக்க "இதோ வரேம்மா! "என்று பிள்ளையாரை தூக்கினான் கோபு. அந்த பிள்ளையார் தலை தனியாக உடல் தனியாக பிய்ந்து போனது. 
 
    "அம்மா! பிள்ளையார் உடைஞ்சு போச்சும்மா! "என்றான் அழமாட்டாத குறையாக கோபு.
 
   "போச்சு எல்லாம் போச்சு! நீதான் பிள்ளையார் செய்யலை! வாங்கி வந்த பிள்ளையாரை கூட பத்திரமா எடுத்து வர முடியலையா? இன்னிக்கு நம்ம வீட்டுல பிள்ளையார் பூஜை அவ்வளவுதானா?  "என்றாள் ஆதங்கத்துடன் அவன் அம்மா.
 
   "அம்மா! பிள்ளையார் எனக்கு தண்டனை கொடுத்திட்டாரும்மா! காலையில் விஜய் செஞ்ச பிள்ளையாரை பொறாமைப்பட்டு உடைச்சிட்டேன்!  இப்ப நம்ம பிள்ளையார் உடைஞ்சு போச்சு! "என்று கண்ணீர் விட்டான் கோபு.
 
   "முற்பகல் செய்யில் பிற்பகல் விளையும்கிறது கண் கூடாயிடுச்சு பார்த்தியா? இனிமே இப்படி பொறாமைப்பட்டு மத்தவங்களை கஷ்டப்படுத்தகூடாது கோபு. பரவாயில்லை! வினாயகர் இல்லாமலே பூஜை செஞ்சுக்கலாம்  "என்றாள் அவனது அம்மா.
 
   அப்போது, "கோபு கோபு! "என்று குரல் கொடுத்தபடி வந்தான் விஜய். 
 
 "கோபு காலையில நீ பிள்ளையார் செய்ய முடியாம திணறினதை பார்த்தேன். உனக்காக நானே பிள்ளையார் செய்தேன். அதை யாரோ உடைச்சிட்டாங்க! மறுபடியும் புதுசா செஞ்சு கொண்டாந்திருக்கேன்  இந்தா!"என்று பிள்ளையாரை நீட்டினான் விஜய்.
  கோபுவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது! "விஜய் என்னை மன்னிச்சுடு! நான் தான் பொறாமையில நீ செஞ்ச விநாயகரை உடைச்சிட்டேன். கடைசியிலே அது எனக்காக நீ செஞ்சதுன்னு இப்பத்தான் தெரியுது. யார் மேலேயும் பொறாமை படக்கூடாதுன்னு இந்த பிள்ளையார் சதுர்த்தியிலே விநாயகர் எனக்கு புத்தி புகட்டி இருக்காரு என்னை தயவு செஞ்சி மன்னிச்சுடு!"என்று அவன் கைகளை கட்டிக் கொண்டான்.
 
    "அழாதே கோபு! நான் நேற்றே எனக்கு பிள்ளையார் செஞ்சிட்டேன்! இன்னிக்கு காலையில நீ கஷ்டப்படறதை பார்த்து உனக்காகத்தான் பிள்ளையார் செய்தேன். அது உடைஞ்சி போனதும் நல்லதா போச்சு! உன் பொறாமை குணம் உன்னை விட்டு போனது! வா விநாயகரை வழிபடுவோம் "என்றான்.
 
  பிள்ளையார் அங்கே புன்முறுவலுடன் சிரித்துக் கொண்டிருந்தார்!
 
 (மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

$
0
0

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


தாங்கிப்பிடித்ததை
தவிக்கவிட்டுச்சென்றார்கள்!
துணிக் கிளிப்!

கரி பூசி
விளையாடியது நிலா!
அமாவாசை!

கண்சிமிட்டி சிரித்ததும்
கவர்ந்தோடினர்
குழாய்விளக்கு!

தடுத்துப் பார்த்தும்
இடுக்கினில் ஊடுருவியது!
பனி!

இரவெல்லாம் விடியல்!
விடியலெல்லாம் உறக்கம்!
நகரம்!

சிரித்தது மேகம்!
கூந்தலில்
மல்லிகை!


சேற்றில் பதியும்
தடங்கள்!
நினைவுகள்!

வெட்கிச் சிவந்தது சூரியன்
விலகிப்போனது
பகல்!

ஒலித்ததும்
உயிர்த்தது காகங்கள்!
கோயில் மணி!

தலை குனிவு!
வெட்டப்பட்டது!
நெற்கதிர்!


ஒளி வெள்ளம்
இருளாக்கியது!
மின்னல் மழை!

ஆமையை
வென்றது முயல்!
மின்னல்!

புதைந்து கிடப்பதை
கிளர்ந்துவருகின்றது!
காற்று!

உருவம் இல்லை!
உயிர் கொடுக்கின்றது!
காற்று!

நெருங்கி வருகையில்
குளிர்ந்துபோனது
சூரியன்!
 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

வெளிச்சம்!

$
0
0

வெளிச்சம்!


ஊரை விட்டு சற்று ஒதுங்கியிருந்தது அந்த குடியிருப்பு. கார்பரேஷன் அடிப்படை வசதிகள் கூட சரிவர செய்யவில்லை. பெரும்பாலும் அடித்தட்டு மக்கள் அங்கே கூரை வீடுகளில் வசித்தார்கள். அந்த இடத்தில் நிலம் வாங்கி வீடு கட்டப்போகிறேன் என்று விநாயகம் சொன்னபோதே குடும்பத்தினர் எல்லோரும் எதிர்த்தார்கள்.

      ஆனால் விநாயகம் தான் சல்லிசாக வருகிறது என்று அங்கே மனை வாங்கினார். அந்த பகுதி ஆட்களை கொண்டே வீட்டைக் கட்டினார். எல்லாம் சிக்கனமாக இருக்க வேண்டும் அவருக்கு. குடிக்கும் தண்ணீரில் இருந்து எல்லாவற்றிலும் சிக்கனத்தை கடைபிடிப்பார். எதையுமே வீணாக்கக் கூடாது தெரியுமா? நமக்கு அதிகமா தெரியறது அடுத்தவனுக்கு அடிப்படையாக் கூட இருக்கலாம் என்று சொல்லுவார்.

      இத்தனை பெரிய வீடு கட்டிவிட்டார். மின்சாரத்தை சிக்கனமாக்குகிறேன் என்று எல்.இ. டி பல்புகளை பொருத்தினார். அது கூட பரவாயில்லை பொறுத்துக் கொள்ளலாம். மணி  எட்டரை ஆனால் போதும் வெளி விளக்குகளை அணைத்துவிடச் சொல்லுவார். கேட்டால் எதற்கு வீணாக எரியவேண்டும் என்பார். 

   சுற்றுப்புறம் சரியில்லையே! பூச்சி பொட்டுக்கள் அண்டாது இருக்க வேண்டும் திருடர்கள் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டாமா? விளக்கு எரிந்தால் பாதுகாப்புத்தானே! வாசல் விளக்கை இரவு முழுவதும் எரியவிடக்கூடாதா? என்றால் ஒத்துக் கொள்ள மாட்டார். 

    நமக்கு மட்டும் தான் திருடர்களும் பூச்சி பொட்டுக்களும் வருமா? பக்கத்திலே குடிசையிலே வாழ்கிறார்களே அவர்களுக்கு வராதா? அவர்கள் எப்படி பயமின்றி இருக்கிறார்கள்? நம் வீட்டுக்குள் எதுவும் நுழையாது. நுழையும் போது பார்த்துக் கொள்ளலாம் என்பார்.

    அவர் பிடித்தால் பிடிவாதம்தான்! யார் சொன்னாலும் கேட்க மாட்டார். அதனால் அவர் போக்கிலேயே விட்டு விட்டார்கள். அவரும் சிக்கனமாக இருக்கிறேன் என்று எட்டரைக்கெல்லாம் விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிடுவார். அதே சமயம் அதிகாலையில் எழுந்துவிடுவார். 

     அன்று காலையிலேயே ஓர் எலக்டீரிசியனை கூட்டி வந்திருந்தார் விநாயகம். இப்ப எதுக்கு எலக்டீரிசியன்? அனைவருக்கும் கேள்வி எழுந்தது ஆனால் கேட்கவில்லை.

   மளமளவென்று வேலைகள் நடந்தது. தெருவாசலில் ஒரு பெரிய போஸ்ட் நட்டு அதில் மிகப்பெரிய எல்.இ. டி பல்பு ஒன்று போட்டுவிட்டார்.
    எட்டுமணிக்கே விளக்கு அணைக்கிறதுக்கு எதுக்கு இத்தனை பெரியபல்பு? என்று எல்லோரும் நினைத்துக் கொண்டாலும் ஒருவரும் வாய் திறக்கவில்லை. 

    அன்று மாலைப் பொழுதில் அந்த புதிய விளக்கொளியில் தெருவே பிரகாசிக்க அப்பகுதி குழந்தைகள் அவர் வீட்டு வாசலில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தனர்.  மணி எட்டரையைக் கடந்து ஒன்பது கூட ஆனது. விநாயகம் விளக்கை அணைக்கவில்லை.

    “என்னப்பா! லைட்டை அணைக்கலையா? மணி ஒன்பது ஆச்சே!”

      “இந்த பசங்க படிச்சு முடியறவரைக்கும் விளக்கு எரியட்டும்”.

  “என்னப்பா சொல்றீங்க? வீணா கரண்ட் செலவாகுது? பில் எகிறப் போவுது?”

   “அதெல்லாம் எனக்கும் தெரியும்! இந்த பசங்களுக்காகத்தான் பெரிய லைட்டே போட்டேன். அந்த காலத்துல தெருவிளக்குள படிச்சு உத்தியோகத்துக்கு வந்துதான் உங்களை எல்லாம் காப்பாத்தினேன். இந்த பசங்களும் வீட்டுல விளக்கு இல்லாம படிக்கிறதுக்கு சிரமப் படறதை நேத்துதான் பார்த்தேன். நம்ம தெரு விளக்கு வெளிச்சத்துல ஓரமா நின்னு ஒரு பையன் வீட்டுப்பாடம் எழுதறதை பார்த்ததும் பழைய நினைவு வந்துருச்சு.
      அதனாலதான் காம்பவுண்ட் ஓரம் விளக்கு போட்டு பசங்களுக்கு ஓர் வெளிச்சத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கேன். இதனால நான் ஒண்ணும் ஏழையாகிட மாட்டேன். பாவம் ஏழைப் பசங்களுக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவி இது. உனக்கு புரியாது நீ போ! நான் பசங்க படிச்சு முடிச்சதும் லைட்ட ஆப் பண்ணிட்டு தூங்கறேன்!  “என்றார்.

   அவருக்குள்ளும் இப்படி ஓர் மனிதர் இருப்பது அந்த விளக்கொளியில் வெளிச்சப் பட்டது அவர் மகனுக்கு.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

பரிவு!

$
0
0

பரிவு!


முற்பகல் வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டிருக்கும் சாயந்திரப் பொழுது. திரு ஆயர்பாடி கரிகிருஷ்ணப் பெருமாளை சேவிக்க காத்துக் கொண்டிருந்த சமயம். நடை இன்னும் திறக்கவில்லை. சாலையில் போகும் வாகனங்களையும் பள்ளிவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களையும் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த பெண்மணி நடக்க முடியாமல் என்னை கடந்தார்.
    சுமார் எழுபது வயதிருக்கும். கூந்தல் முழுதும் நரைத்திருந்தது. மெலிந்த தேகத்தில் ஆங்காங்கே வயதின் சுருக்கங்கள். கூன் விழுந்த முதுகு பூத்தட்டை இடுப்பில் சுமந்தவாறு மறு கையொன்றில் சிறு தடி ஊன்றி மெதுவாக நடந்து கொண்டிருந்தார். கட்டியிருந்த கைத்தறி சேலையில் ஆங்காங்கே தென்பட்ட கிழிசல்களை கைத் தையல் போட்டிருந்தார். வெயிலின் தாக்கம் நெற்றியில் வியர்வையாக ஊடுருவி இருந்தது.
    இரக்கப் பட்டது என் மனது! பாவம் இந்த வயதில் பூத் தொடுத்து விற்று பிழைக்கும் நிலை. பிள்ளைகள் இல்லையோ? இருந்தும் கைவிட்டு விட்டார்களோ? பிச்சை எடுக்காமல் உழைத்து பிழைக்க நினைக்கும் இவருக்கு உதவ வேண்டும் என்றது மனது.
    “ பாட்டி! கொஞ்சம் நில்லேன்!”
      “ என்னப்பா தம்பி! பூ வேணுமா? மல்லி, முல்லை, ஜாதி, கதம்பம் எல்லாம் இருக்கு! எது வேணும்? எவ்வளவு வேணும்?
      “ விலை எவ்வளவு பாட்டி?”
      “ முழம் பதினைஞ்சு ரூபா தம்பி! எது வேணும்?”
  “ எல்லோரும் இருபது ரூபா விக்கிறாங்க! நீ கம்மியா சொல்றியே பாட்டி கட்டுபடி ஆகுமா?”
        “இப்ப பூ விலை கம்மியாத்தான் இருக்கு தம்பி! அதான் நான் கொறைச்சுக் கொடுக்கிறேன்! எல்லா சமயத்திலும் ஒரே விலை வித்தா நியாயம் கிடையாது இல்லையா?”
    பாட்டியை மிகவும் பிடித்துப் போய்விட்டது! கட்டாயம் உதவியே தீரவேண்டும் என்று தீவிரமாக சொன்னது மனசு.
  “ சரி பாட்டி  தட்டு முழுக்க இருக்க பூ எல்லாம் அப்படியே எனக்கு கொடுத்திரு! மொத்தம் எத்தனை முழம் இருக்கும் ஒரு ஐம்பது முழம் இருக்குமா? மொத்தமா வாங்கிக்கிறேன்!”
      ஒரு நொடி பாட்டியின் முகம் மலர்ந்தது. பின்னர் பழைய நிலைக்கு திரும்பியது.
     “ என்ன பாட்டி! அளந்து கொடுத்திடறியா? இல்லே நீ அளந்து வைச்சிருப்பே இல்லே எவ்வளோ இருக்கு சொல்லு!  அதுக்கு காசு கொடுத்திடறேன்!”
      “ இ.. இல்லே தம்பி! உன் மனசுக்கு நீ நல்லா இருப்பே! ஆனா முழுசும் வேணாம்! வகையிலே ஒரு ரெண்டு முழம் வேணும்னா வாங்கிக்க!”
        எனக்கு ஏமாற்றமாக போய்விட்டது!
   “ ஏன் பாட்டி! இவ்வளவு பூவையும் இன்னிக்கு உன்னால வித்துட முடியுமா? மீந்தா உனக்கு நஷ்டம்தானே! நான் முழுசும் வாங்கிக்கறேன்னு சொல்றேன்! கொடுக்க உனக்கு என்ன கஷ்டம்?”
       “ நீ சொல்றது வாஸ்தவம்தான் தம்பி! இன்னிக்கு மொத்த பூவும் வித்துட முடியுமாங்கிறது சந்தேகம்தான்!  ஆனா…
   “ என்ன ஆனா…? நான் வாங்கிக்கிட்டா உனக்கு சுமை குறையுது இல்லே!கஷ்டபட வேண்டியது இல்லையே! சீக்கிரமே வீடு போகலாம் இல்லையா?”
    “ எல்லாம் சரிதான் தம்பி! நீ எனக்கு உதவனும்னு நினைக்கிறே! அது புரியுது! இன்னிக்கு உன் கிட்ட எல்லா பூவையும் வித்துட்டு நான் சந்தோஷமா வீட்டுக்கு போயிடலாம்தான் ஆனா… தினமும் என் கிட்ட பூ வாங்கிற சில வாடிக்கையானவங்க இருக்காங்க! அவங்க நான் வரலையேன்னு காத்து இருப்பாங்க! உன்கிட்ட பூவை வித்துட்டா அவங்க ஏமாந்து போயிருவாங்களே! அவங்களுக்காவது…
        “அவங்க கட்டாயம் வாங்கிப்பாங்கன்னு தெரியுமா? ஒருவேளை வேணாம்னு திருப்பிட்டா உனக்கு நஷ்டம்தானே! கைக் கிட்டேயே லாபம் வரப்ப இல்லாத வியாபாரத்தை எதுக்கு நினைச்சிக்கிறே?”
    வாடிக்கையாளரை மதிக்கிறதுதான் தம்பி வியாபாரம்! தினமும் வாங்கிறவங்க ஒரு நாள் வேண்டாம்னு சொல்லலாம்! அது அவங்க உரிமை! விக்கிற நாம இன்னிக்கு இல்லேன்னு சொல்லக் கூடாது! இதுதான் வியாபாரத்தோட நுணுக்கம்! இன்னிக்கு உன்கிட்ட பூவை வித்துட்டா அவங்க எல்லாம் ஏமாந்து போயிருவாங்க! அப்படி ஏமாறக் கூடாது அவங்க! அவங்க வாங்காம போனாக் கூட அவங்களைத் தேடி நான் போவேன். அதனாலே.. வேணும்னா வகைக்கு ஒண்ணோ ரெண்டோ வாங்கிக்க தரேன்.
     கையருகில் வியாபாரம் இருந்தும் வாடிக்கையாளரை மதிக்கும் பரிவு காட்டும் அந்த பாட்டி இன்னும் உயர்ந்து நின்றார். ஓக்கே பாட்டி! உன்னை பாராட்டறேன்! நாலு வகையிலும் ரெண்டு ரெண்டு முழம் குடு! இனிமே நானும் உன் வாடிக்கைதான்! இந்த நேரத்துக்கு தினமும் இங்கே வந்திடறேன்! பூ கொடுக்க மறந்திடாதே! என்றேன்.
     பாட்டி மகிழ்ச்சியாய் புன்னகைத்தார்!

டிஸ்கி} இன்றைக்கு முகநூலில் எழுத்தாளர், பதிவர் ரிஷபன் அவர்களின் ஸ்டேட்டஸ் ஒன்றை படித்தேன்! அதிலிருந்து விளைந்தது இந்த கதை!  கரு கொடுத்த நண்பருக்கு நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 49

$
0
0

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!


1.   நம்ம தலைவர் எப்ப பார்த்தாலும் பைனாகுலரும் கையுமாவே இருக்காரே ஏன்?
அவர் தொலைநோக்கு பார்வையோட கட்சியை வழிநடத்தறாராம்!

2.   போதுமான ஆதாரம் இல்லைன்னு நீ கொடுத்த புகாரை ஸ்டேஷன்ல தள்ளுபடி பண்ணிட்டாங்களா? எந்த ஆதாரம் இல்லாம போச்சு?
நிதி ஆதாரம்தான்!

3.   என் பொண்ணு எல்லார்க்கிட்டேயும்  “நிறை”யத்தான் பாப்பான்னு   மாமனார் சொன்னதை நம்பி ஏமாந்துட்டேன்!
  ஏன் என்ன ஆச்சு?
என் பொண்டாட்டி “ நிறையவே” எதிர்பார்க்கிறாளே!

4.   லெக்கின்ஸ் போட்டா பிடிக்கும்னு அப்போ சொன்னீங்க இப்ப முகத்தை சுளிக்கிறீங்களே!
  அட! நான் நல்லா இறுக்கி பிடிக்கும்னு சொன்னதை நீ தப்பா புரிஞ்சிகிட்டா எப்படி?!

5.   அந்த டைரக்டரை நம்ம சிலை திருட்டு கும்பல்ல ஏன் சேத்துக்க மாட்டேங்கறீங்க தலைவா?
கதையை திருடினாவே மாட்டிக்கிறாரே! சிலையை திருடினா மாட்டாம இருப்பாரா….! அதனாலதான்!

6.   மன்னர் போருக்கு கிளம்பி விட்டார் என்று சொல்கிறீர்களே! நாட்டில் படையெடுப்பு எதுவும் இல்லையே?
  மந்திரி பிரதானிகளுடன் “ அக்கப்போர்” பேச கிளம்பியதைத்தான் அப்படி சுருக்கமாக சொன்னேன்!


7.   மன்னா! நீங்கள் வகுத்த வியூகத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றனவே!
புரியாமல் பேசாதீர்! அப்போதுதானே எதிரி தாக்கும் போது புகுந்து ஓடிவர வசதியாக இருக்கும்!
8.   மந்திரியாரே! இளவரசர் போர்க்களத்தில் புகுந்து விளையாடுகிறாராமே!
அட போங்க மன்னா! அவர் போர் நடக்குமிடத்தில் வந்து கபடியும் பல்லாங்குழியும் ஆடிக்கொண்டிருப்பதைத்தான் அப்படி சொல்கிறார்கள்!

9.    அந்த டாக்டர் கிண்டல் பேர்வழியா இருக்கார்!
   எப்படி சொல்றே?
ஆபரேசன் தியேட்டருக்கு பேஷண்டை கூட்டிட்டு வரட்டான்னு கேட்டா டிக்கெட் வாங்கிட்டாரான்னு கேக்கறாரே!

10. உங்களுக்கு வந்திருக்கிறது சாதாரண கட்டிதான் ஆபரேட் பண்ணிடலாம்னு டாக்டர் சொன்னார்…
அப்புறம்?
இப்ப நான் என் பேங்க் அக்கவுண்ட்டை ஆபரேட் பண்ண முடியாத நிலைமை ஆயிருச்சு!

11.எல்லா கோயில் உண்டியலையும் உடைச்சு சில்லறையை மட்டும் திருடி இருக்கியே ஏன்?
சில்லறை திருட்டுன்னா கண்டிச்சு விட்டுடுவாங்கன்னு சொன்னாங்க அதான்!

12. தலைவருக்கு ஜெனரல் நாலேட்ஜ் கொஞ்சம் கம்மி!
   எப்படி சொல்றே?
 ஓபன் டென்னிஸ் மட்டும் ஆடறாங்களே குளோசிங் டென்னிஸ் ஆட மாட்டாங்களான்னு கேக்கறார்!


13. பேங்குக்கு போன தலைவர் உடனே ஏன் திரும்பி வந்துட்டாரு?
கரண்ட் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணலாம்னு போனா அங்கே கரண்டே இல்லையாம்!
14.எதிரி மன்னன் நம்மை சரியாக எடை போட்டிருக்கிறான் என்று எப்படி சொல்கிறீர் தளபதியாரே!
  பேரிச்சம் பழ காரனாக வந்து நம் கத்தி கேடயங்களை எடை போட்டு சென்றது எதிரிதானாம் மன்னா!


15. மாப்பிள்ளை ஆத்திச்சூடி வழி நடப்பவர்னு சொன்னீங்க ஆனா சதா குடிச்சிக்கிட்டே இருக்காரே!
   ‘ஊக்க”மது” கைவிடேல்னு இருக்கிறதை அவர் கடைபிடிக்கிறார்!

16. ஆட்சியிலே பங்கு கொடுக்கிறவங்களோடதான் கூட்டுன்னு சொன்ன தலைவர் ஏன் சோகமா இருக்கார்?
  யாரும் இந்த சம”ரசத்து”க்கு ஒத்துக்கவே இல்லையாம்!

17. மாற்றம்… ஆரம்பம்னு தலைவர் அறிக்கை விட ஆரம்பிச்சாட்டாரே என்ன விஷயம்!
  புழல்லேயிருந்து வேலுருக்கு மாத்திட்டாங்களாம்!

18. பேய்படத்துக்கு மனைவியை கூட்டிட்டு போய் சண்டையாயிருச்சா ஏன்?
பேய்படத்தை இப்பத்தான் முதன்முதலா பாக்கிறேன்னா! நானும் உணர்ச்சிவசப்பட்டு பேய்படத்தை ஒரு பேயோடு இப்பத்தான் பாக்கிறேன்னு சொல்லி தொலைச்சிட்டேன்!

19. மேலுக்கு சுகமில்லைன்னு மேனேஜர் கிட்ட லீவ் கேட்டா தர மாட்டேங்கிறார்?
   ஏன்?
  நீ ஃபிமேல் தானே அப்புறம் எதுக்கு லீவுன்னு கேக்கறார்?

20.  பொற்கிழி பரிசாக பெற்றும் புலவர் ஏன் சோகமாக இருக்கிறார்?
   பரிசுப்பணம் எல்லாம் கிழிந்த நோட்டாகவே இருக்கிறதாம்!

21. உப்பரிகையில் உலாவ மன்னருக்கு ராணியார் தடை விதித்து விட்டார்களாமே!
  உலாவுகிறேன் என்று தடாகத்தில் குளிக்கும் பெண்களை பார்த்து ஜொள்ளு விடுகிறாராம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

விபத்து!

$
0
0

விபத்து!

    அன்று காலையே சிறப்பாக துவங்கவில்லை! எழுந்தது சீக்கிரம் என்றாலும் பணிகள் துவங்க தாமதம் ஆகிவிட்டது. இரவு சரியான தூக்கமின்மை! எப்படியோ ஒரு வழியாக நத்தம் கோயில் பூஜைகளை முடித்துவிட்டு வெளியூர் கோயில் பூஜைக்கு கிளம்புகையில் மணி காலை 9.30 ஆகிவிட்டது.

   புரட்டாசி மாத பொன்னுருக காயும் சூரியன் பூமியை உருக்க நானும் வியர்வைத்துளிகளில் நனைய ஆரம்பித்து புறப்பட்டேன். எங்கள் ஊர் சாலையில் இருந்த இரண்டு மூன்று கோயில்களில் பூஜை முடித்து பஞ்செட்டி பிரதான சாலையில் செல்கையில் ஒரே வாகன நெரிசல்! முன்னே செல்லும் வாகனங்கள் மிக மெதுவாக செல்ல மணி பத்தரையைக் கடந்து இருக்க லேசான எரிச்சல். தச்சூரில் மேம்பாலம் கட்டியிருந்தும் இன்னும் திறக்கவில்லை! இருபக்க சர்வீஸ் சாலையில் வலப்புற சாலை மிக மோசமானது.

     வேலம்மாள் பொறியியல் கல்லூரி அருகே மரணப் படுகுழிகள்! ஆளை அச்சுறுத்தும் புதிதாக அந்த பக்கம் வருபவர்கள் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு செல்வார்கள். எப்போது மழை பெய்தாலும் அந்த குழியில் விழுந்து எழுந்து சென்றால் காசிக்கு போய்வந்த புண்ணியம்! நெடுஞ்சாலைத்துறையோ அதை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள எல். அன் . டி நிறுவனமோ ஒன்றும் கண்டுகொள்ளாது. ராத்திரியில் சிறு தூறல் போட்டால் கூட அந்த சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் சேர்ந்துவிடும் வடிகால்கள் அடைந்து போயிருக்க சாலை குழிகாடாக மாறிவிடும்.

    பஞ்செட்டியில் இருந்து தச்சூர் செல்ல இடது புற சர்வீஸ் சாலையை பயன்படுத்துகையில் எதிர்ப்புறத்தில் வாகனங்கள் வந்து கொண்டிருந்தது அதனால் வாகனத்தை வேகமாக இயக்க முடியவில்லை! மெதுவாக ஊர்ந்து கொண்டு எதிர்புறத்தில் வந்த வாகனங்களை சபித்தபடி சென்று கொண்டிருந்தேன். தச்சூர் கூட்டுச்சாலையில் மேம்பாலத்தின் உள்ளே நுழைகையில்தான் நெரிசலின் காரணம் புரிந்தது. வலது புறசாலையில் ஏதோ வாகனம் பழுதாகி நின்றுவிட ஏகப்பட்ட நெரிசல் காவல் துறையினர் வண்டிகளை மறுபுறம் திருப்பி விட ஏகப்பட்ட நெரிசல். 

   திரும்பி வருவதற்குள் சரியாகி விடும்! என்று சமாதானித்து பொன்னேரிசாலையில் பயணிக்கையில் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு டாரஸ் லாரியின் அடியில் பைக் சரண் அடைந்து இருந்தது. கூட்டம் கூடி இருந்தது. அடிபட்டது யாருக்கு என்று தெரியவில்லை! இல்லை அடிபட்டவரை மருத்துவ மணைக்கு அனுப்பி விட்டார்களா என்று புரியவில்லை! அங்கும் சாலை படுகுழியாக இருக்கும். யாருக்கு என்ன ஆயிற்றோ என்று யோசித்தபடி சென்று தச்சூர் சிவாலயத்தில் பூஜை செய்துவிட்டு பிள்ளையார் கோயிலிலும் பூஜை முடிக்கையில் மணி பதினொன்றே கால் ஆகிவிட்டது.

    அங்கிருந்து தச்சூர் கூட்டுச்சாலை வருகையில் நெரிசல் குறையவில்லை! வலது புற சாலை வழியே பஞ்செட்டி செல்வது இயலாத காரியமாக தோன்றியது. வாகனங்களும் எதிர்புற சாலைவழியே சென்று கொண்டிருக்க முட்டாள் தனமான காரியம் செய்தேன். ஆப்போசிட் டைரக்‌ஷனில் சென்றுவிட்டேன். எதிரே வாகன நெரிசல் எப்படியோ கடந்து வாகனங்கள் குறைந்ததும் அந்த சாலையின் வலதுபுறமாக மெதுவாக சென்றேன். சுபலஷ்மி காம்ப்ளக்ஸ் அருகே குறுக்கே ஓர் டிவிஎஸ் எக்செல்லில் ஒரு வயதானவர் வருவதை பார்த்து அவர் மீது மோதுவதை தவிர்க்க ப்ரேக் அழுத்தினேன். சாலையில் மணல் பதற்றத்தில் முன் பிரேக்கையும் பிடித்துவிட்டேன் போல வண்டி சரிந்தது. ‘அம்மா… என்று கத்தியபடியே வண்டியிலிருந்து கீழே விழுந்தேன். முகம் தரையில் பதிய சமாளித்து எழுந்தேன். 

   என்னைவிட எதிரில் வந்தவர் பதற்றத்தில் இருந்தார். அவர் தூக்கும் முன் நானே எழுந்துவிட்டேன். நடுசாலையில் விழுந்திருந்தேன்! நல்ல வேளையாக வாகனங்கள் எதுவும் பின்னாலோ முன்னோ வரவில்லை. கைகள் இரண்டிலும் முட்டியிலும் சிராய்த்திருக்க தாடை கொஞ்சம் கிழித்துக் கொள்ள முன் பல் சிறிது உடைந்து உதட்டில் குத்த துணியெங்கும் ரத்தம்!

       டிவிஎஸ் பிப்டி காரர் என் வண்டியை தூக்கி ஓரம் கட்டினார். காம்ப்ளக்ஸில் இருந்த கடையில் கொஞ்சம் காட்டன் வேஸ்ட் கொடுக்க அதை தாடையில் ஒற்றி இரத்தம் நிறுத்த சொன்னார். அவர்களிடம் தண்ணீர் கேட்டு வாங்கி முகம் கழுவி குடிக்கச் சொன்னார். தாடையில் இரத்தம் ஒழுகுவது நிற்கவில்லை!

        அப்படியே ஓர் ஐந்து நிமிடம் கழிய, ஹாஸ்பிடல் போலாம் போய் ஓர் டிடி இஞ்செக்‌ஷன் பண்ணிடலாம்! நான் கூட்டிப் போறேன் என்றார்.
    நான் வேண்டாம் என்று மறுத்தேன். கடையில் இருந்த தெரிந்த பெண்மணியும் டிவிஎஸ் காரரும் இல்லே இஞ்செக்‌ஷன் பண்ணிக்கிட்டா நல்லது! என்றார்கள். இறுதியில் அவர் டிவிஎஸில் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். தச்சூரில் உள்ள ஸ்விப்ட் கிளினிக்கில்  காயத்திற்கு மருந்து போட்டு டிடி இஞ்செக்‌ஷன் போட்டார்கள். தையல் தேவையில்லை டிரெஸ்சிங்க் பண்ணினால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். 

     இதற்குள் டிவிஎஸ் காரரே கட்டணத்தை செலுத்திவிட்டார். நான் எவ்வளவு சொல்லியும் கட்டணம் வாங்க மறுத்துவிட்டார். மீண்டும் அந்த கடையருகே கொண்டு வந்து டிராப் செய்தார். வீட்டில் விடுவதாக சொன்னார். நான் வேண்டாம் நானே மெதுவாக போய் கொள்கிறேன்! என்று சொல்லிவிட்டேன்.

   மதுரைக் காரராம்! வேலம்மாள் பள்ளியில் அவர் மகன் படிக்கிறாராம். மகனுக்கு புரொஜெக்ட் விஷயமாக ஏதோ மோட்டார் வாங்க வந்தவர் என் வண்டிக்கு குறுக்கே வர நான் விழுந்து அவருக்கும் அசகவுர்யம் ஆகிவிட்டது. தலைக்கவசம் ரெகுலராக அணிந்திருந்த நான் அன்று அணியாமல் போனதும், ஆப்போசிட் டைரக்‌ஷனில் வந்ததும் ஆபத்தானதாக ஆகிவிட்டது.

      தலை தப்பியது தம்பிரான் புண்ணியமாக இதோ உங்களுக்கு இந்த கதையை கைவலியோடு டைப் செய்கிறேன்! 

   அந்த டிவிஎஸ் காரர் மீது தவறில்லை! அப்படியே சென்றுவிட்டிருக்கலாம்! இருந்தும் எனக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்து கட்டுப்போட்டு கட்டணமும் அவரே கொடுத்தார். இறுதியில் அவர் பெயரைக் கூட பதட்டத்தில் கேட்க மறந்துவிட்டேன். நன்றி சொல்லி விடைபெற்றேன்.அந்த நல்ல மனிதரிடம். இப்போதும் நன்றி சொல்லுகின்றேன்!

   நான் கீழே விழுந்தது பகல் பதினொன்றரை மணி வாக்கில்! அதே சமயம் என் அப்பாவின் மீது யாரோ குரங்கு வடிவில் அமர்வது போல தோன்றியிருக்கிறது. உடனே என் நினைவும் வந்திருக்கிறது. வீட்டில் கொஞ்சம் பயந்துவிட்டார்கள். நேற்று முழுவதும் பயங்கர வலி! இன்று பரவாயில்லை!

     உங்களோடு இன்னும் பழக பகவான் விட்டு வைத்திருக்கிறான்! அவருக்கும் நன்றி!


சங்கரன் பெற்ற புண்கள்! தித்திக்கும் தமிழ் பகுதி 21

$
0
0

தித்திக்கும் தமிழ்! பகுதி 21


   துன்பங்கள் துரத்தும் போது, கவலைகள் சூழும் போது ஓர் மன ஆறுதலைத் தேடி நண்பர்களிடம் உறவினர்களிடம் போய் கூறி ஆறுதல் அடைவது வழக்கம். சில சமயம் கோயில்களில் போய் ஆண்டவரிடம் நமது குறைகளை சொல்லி , ஏண்டாப்பா சாமி! இப்படி கஷ்டப்படுத்துகிறாயே! கொஞ்சம் காது கொடுத்து என் குறைகளை கேள்! என் கஷ்டங்களை போக்கு என்று வேண்டுவார்கள்.

   இன்றைய நவீன யுகத்தில் துன்பங்களுக்கு பரிகாரங்கள் செய்கிறேன் என்று பல சாமியார்கள் தோன்றி காசு பிடுங்கி சம்பாதிக்கின்றனர் அது வேறு விஷயம். நமக்கு ஓர் துயரம், கஷ்டம் ஏற்படும் போது அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கையில் ஓர் ஆறுதல் அடைகின்றது. நம்மை மீறிய சக்தி ஒன்று இருப்பதை உணர்ந்து அதை இறைவனாக வணங்குகின்றோம். அந்த இறைவனிடத்திலே ஒன்றி தமது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி நிற்கின்றோம். அப்போது நமது துன்பங்கள் அந்த பக்தியிலே கரைந்து போகின்றது.

   இதோ இந்த புலவரும் தமக்கு நேர்ந்த துன்பங்களை இறைவன் ஈசனிடம் முறையிட்டாராம். ஈசனோ  புலவரின் குறைகளை களையாமல் அவரின் குறைகளை பட்டியலிட்டாராம். தெய்வத்திடம் சொல்லி அழப்போனால் அங்கு தெய்வமே இப்படி செய்தால் புலவர் பாவம் என்ன செய்வார்?


  சங்கரன் பெற்ற புண்கள்!

  வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண்ணும்
     வாசறொரு முட்டுண்ட தலையிற் புண்ணுஞ்
  செஞ்சொல்லை நினைந்துருகு நெஞ்சிற் புண்ணுந்
   தீருமென்றே சங்கரன்பாற் சேர்ந்தே னப்பா
  கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
    கொடுங்காலா லுதைத்தபுண்ணுங்க் கோபமாக    
  பஞ்சவரி லொருவன்வில்லா லடித்த புண்ணும்
     பாரென்றேகாட்டி நின்றான் பரமன் றானே.

விளக்கம்: வஞ்சனை உள்ளம் உடையவரிடத்து சென்று அலைந்ததால் நடந்து நடந்து காலில் உண்டான புண்ணையும், ஒவ்வொரு வீட்டின் வாசலில் சென்று முட்டிக்கொண்டதால் தலையில் அடிபட்ட புண்ணையும் என்னுடைய நல்ல பாடல்களை கேட்டு ரசிப்பார் இல்லையே என்று ஏக்கத்தால் நெஞ்சில் உண்டான புண்ணையும் நீக்குவீராக என்று வேண்டிக்கொள்ள சிவபெருமானிடம் சென்றேன்.

   ஆனால் அப்பெருமானோ, பாண்டியன் பிரம்பால் அடித்ததால் உண்ட புண் சிறியது அல்ல என்று அதையும், வேடனான கண்ணப்பன் தன் செருப்பணிந்த காலினால் மிதித்த போது உண்டான புண்ணையும் மிகுந்த சினத்துடன் பாண்டவரில் ஒருவனான அர்ஜுனன் வில்லால் அடித்த புண்ணையும் பார்! இவை உன்னுடைய புண்களைவிட பெரியது என்று காட்டினான். என்கிறார்.

   புலவர் நகைச்சுவைக்காக பாடினாலும் இதன் உட்கருத்து என்ன?
துன்பங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும் என்பதுதான் உட்கருத்து. நமக்கு துன்பம் என்று புலம்புகிறோம்! நம்மை விட துன்பப்படுவோர் ஏராளம். அவர்களோடு ஒப்பிடுகையில் நம் துன்பம் கடுகளவாகி போய்விடும். இன்பங்கள் மட்டும் நிறைந்ததல்ல வாழ்க்கை! துன்பங்களும் கலந்தது. இரவும் பகலும் சேர்ந்ததுதான் ஓர் நாள். அதுபோல இன்பமும், துன்பமும் கலந்ததே வாழ்க்கை! துன்பங்களை பார்த்து துவளாமல் எதிர் நீச்சல் போட கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் புலவர்.

    இந்த பாடலை பாடியவர் இராமச்சந்திர கவிராயர்.
 என்னவொரு சிறப்பான பாடல்! 

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நல்லதொரு பாடலுடன் சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Viewing all 1537 articles
Browse latest View live