புகைப்பட ஹைக்கூ 22
கறை
நல்லது
ஹோலிப்பண்டிகை!
நனைந்தும்
குளித்தார்கள்!
ஹோலிப்பண்டிகை!
வண்ணச்சிதறல்களால்
வந்தது மழை!
ஹோலி!
ஹோலி வந்தால் ஜாலி!
பையில் பணமே இல்லை காலி!
விரட்டி தூவுவோம் ரங்கோலி! (லிமரிக்)
வசந்த வரவேற்பில்
வண்ணங்கள் பறிமாற்றம்!
ஹோலிப்பண்டிகை!
மழையில் நனைந்ததும்
மகிழ்ந்தன குழந்தைகள்
ஹோலி!
சிதறிய வண்ணங்கள்
சிறைபிடித்த சிறுவன்!
ஹோலிப்பண்டிகை!
பாசமழைக்கு போட்டியாக வந்தது
வண்ண மழை!
ஹோலி!
வண்ணம் பூசிக்கொண்டது
வயல்வெளி!
ஹோலிப்பண்டிகை!
சிதறிய வண்ணங்கள்
வரவழைத்தன மகிழ்ச்சியை
ஹோலிப்பண்டிகை!
இயற்கையிடம்
தோற்றது செயற்கை ஓவியம்!
ஹோலிப்பண்டிகை!
வான்மழை அல்ல!
வண்ணமழை!
ஹோலிப்பண்டிகை!
வண்ணங்கள் சிதறியதும்
வந்தது மகிழ்ச்சி!
ஹோலிப்பண்டிகை!
இரைந்த வண்ணங்கள்
வருவித்தது வசந்தம்!
ஹோலி!
தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!