Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

புகைப்பட ஹைக்கு 21

$
0
0
புகைப்பட ஹைக்கு 21

ஒளியேற்ற
ஒளி கொடுக்கிறது
மெழுகுவர்த்தி!

ஒளிமயமான
எதிர்காலம் உணர்த்துகிறது
மெழுகுவர்த்தி!

கரைந்தாலும் கலைக்கவில்லை
கனவுகளை
மெழுகுவர்த்தி!

அறிவு சுடர்விட
தீபச்சுடர்
மெழுகுவர்த்தி!

இருண்டகாலம் மறைய
ஏற்றிவைக்கப்பட்டது
மெழுகுவர்த்தி!

உருகினாலும்
இளகவில்லை மின்சாரம்!
மெழுகுவர்த்தி!

எதிர்கால இந்தியாவிற்கு
என்றும் நண்பன்
மெழுகுவர்த்தி!

கனவுகளை நினைவாக்க
களம்புகுந்தது
மெழுகுவர்த்தி!

கற்காலம் அல்ல!
இது கல்விக்காலம்!
மெழுகுவர்த்தி!

உயிரைவிட்டாலும்
உதவிய மகிழ்ச்சியில் பூத்தது
மெழுகுவர்த்தி!

வெட்ட வெட்ட வளர்கிறது
மெழுகுவர்த்தி
வியாபாரம்!

கல்விக் கனவுகளை
கரைசேர்த்தது
மெழுகுவர்த்தி ஒளி!

அறிவை அகலமாக்க
அழிந்து போகிறது
மெழுகுவர்த்தி!

டிஸ்கி} இரண்டு மூன்று நாட்களாக கூடுதலாக வேளைப்பளு மற்றும் தொடர்ச்சியான மின்வெட்டு! அதனால் பல தளங்களுக்கு செல்ல முடியவில்லை! இன்னும் ஓரிரு நாள்களில் நிலைமை சரியடையும்! நண்பர்கள் பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!




Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles