ஆர்யாவை மணந்தாரா நயன் தாரா? கொளுத்தி போட்ட தட்ஸ் தமிழ்!
தமிழ் சினிமாவில் இப்போதுதான் அஞ்சலி பற்றிய பரபரப்பு ஓய்ந்த நிலையில் நயன் தாரா பற்றிய ஒரு கிசு கிசு பரவி வருகிறது. அது நயன் தாரா- ஆர்யா காதல் என்பதுதான். இந்த கிசு கிசு பரபரப்பாக இருக்கையில் தட்ஸ் தமிழ் இணையதளம் வேறு ஒன்றை கொளுத்திப் போட்டது. அது ஆர்யா நயன் இருவரும் புனேயில் சர்ச்சில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதுதான். ஹிட்ஸுக்கா இப்படி பட்ட தலைப்பு செய்திகள் கொடுப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
தமிழ் சினிமாவில் எப்போதும் ஹைலைட்டாக இருந்தவர் நயன் தாரா. முதலில் சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்டு அது காதல் வரை சென்றும் கசந்து விட்டது. பின்னர் பிரபு தேவாவுடன் கல்யாணம் வரை சென்ற காதலும் கழன்று கொண்டது. தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி என்றாலும் நடிகை என்ற முறையில் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கும் நடிகையாம் நயன் தாரா. சிவ கார்த்திகேயன் கூட இதுபற்றி கூறி சிலாகித்து இருந்தார்.
இதற்கிடையில் ஆர்யா- நயன் பற்றிய கிசுகிசுக்கள் பரவத்தொடங்கி விட்டன. ப்ளே பாய் இமேஜுடன் வலம் வரும் ஆர்யா இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை! அவருடன் இன்னும் சில நடிகைகளை இணைத்தும் அவ்வப்போது கிசு கிசுக்கள் வருவதுண்டு. இந்த நிலையில் தட்ஸ் தமிழ் இணையதளம் ஆர்யாவுக்கும் நயனுக்கும் புனே சர்ச்சில் திருமணம் என்று செய்தி போட்டது.
நுழைந்து பார்த்தால்தான் தெரிந்தது அது ஏப்ரல் ஃபூல் ஆக்கும் தகவல் என்று. அது ஒரு சினிமா படப்பிடிப்பு. ஆர்யா நயன் தாரா இணைந்து நடிக்கும் ராஜா-ராணி படப்பிடிப்பில் ஒரு காட்சிதானாம் அது. புனேயில் உள்ள ஒரு சர்ச்சில் மூன்று நாட்கள் படம் பிடிக்கப்பட்டதாம் இந்த திருமணக் காட்சி!
இது சினிமா போல இல்லை நிஜமாகவே இருந்தது என்று குழுவினர் கூறினார்கள் என்று கூறி பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளது தட்ஸ் தமிழ்! அது மட்டும் தான் ஹிட்ஸ் அள்ளுமா? நாமும் கொஞ்சம் அள்ளிக்குவோம்னு இந்த மகா முக்கியமான தகவலை உங்க கிட்ட பகிர்ந்துகிட்டேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!