Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

ஆளுக்கொரு நீதி!

$
0
0

ஆளுக்கொரு நீதி!


ஆளுக்கொரு நீதி
கூடாதிங்கு நியதி-அதனால்
நீதி தேவதை இருக்கிறாள்
கண்ணை மூடி!

ஆனால் நடப்பதோ வெறும் கேலி
இதை வெளியில் சொன்னால் அவமதிப்பு!
என்பார்கள் ஆனால் இது
அவமானம் அன்றோ!
சஞ்சய் தத்
மும்பை குண்டுவெடிப்பு
குற்றவாளிகளுக்கு அளித்தார் புகலிடம்!
அதனால் அடைந்தார் சங்கடம்!
நீதிமன்றம் விசாரித்து செய்தது
ஊர்ஜிதம்!
சிறையில் இருக்க வேண்டும்
ஐந்து ஆண்டு!
நீதி சொன்னது கூண்டு!
அதற்கு தந்தது அவகாசம்!
நடிகர் என்பதால்
பரிந்து வந்தது ஒரு கூட்டம்!
சாமான்யன் செய்தால் தவறு
அதையே சாம்பியன் செய்தால்
வரலாறோ?
கண்ணீர் மல்க அளித்தார் பேட்டி
சிறைக்கு செல்வேன் என
ஊடகத்தை கூட்டி!

இன்று கேட்கிறார் அவகாசம்!
படப்பிடிப்பு வேலைகள்
இருக்கிறதாம் பத்தவில்லையாம்
அவகாசம்!

இது என்ன நீதி?
உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதானே
ஆகவேண்டும்!
ஏழைக்கொரு நீதி
இவருக்கொரு நீதியா?
இன்னும் எனக்கு புரியவில்லை!
மின்னும் நட்சத்திரம் என்பதால்
மிகுதியாய் பரிவு காட்டலாமோ?
இதே குற்றம் செய்த பிறரெல்லாம்
சிறையில் இருக்கையில் இவருக்கு
மட்டும் விதிவிலக்கோ?
தவறு செய்தது ஊர்ஜிதமானால்
உடனே சிறையில் தள்ளாமல்
தண்டனையை தள்ளிவைப்பதோ?
விளங்க வில்லை எனக்கு!
இதே நீதி எல்லோருக்கும்
உண்டென்றால் உடைந்து போகாதா
பாதுகாப்பு!
வினோதமான தீர்ப்பு
விரைவில் வரவேண்டும் நல்ல தீர்ப்பு!

டிஸ்கி: தமிழ் புத்தாண்டில் ஒரு புதிய முடிவு எடுத்துள்ளேன்! தினம் தோறும் பதிவிடுவதை குறைத்து வாரம் ஒன்றிரண்டு பதிவுகள் மட்டுமே எழுதலாம் என்று முடிவெடுத்துள்ளேன். நிறைய எழுதுவதை விட நிறைவாக எழுதலாம் என்று எண்ணம். அத்துடன் பணிச்சுமையும் அதிகரித்துள்ளது. உங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!