Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

எழுச்சிகொள் நண்பா! கவிதை!

$
0
0

வீழ்ச்சி அடைந்து விட்டோம்
 என்று வேதனைப்படாதே
நண்பா!
எழுச்சிகொள்!
ஏறுபோல நட!
ஊறு விளைவித்தவர்கள் கூட
ஒதுங்கிப் போவார்கள்!
வீழ்ந்த விதைதான்
விருட்சமாய் பூமியில்
எழுந்து நிற்கிறது!
விழுகின்ற அருவிதான்
ஆறாய் பெருக்கெடுத்து
அவனியை காக்கிறது!
விழுகின்ற மழைத்துளி
இல்லையேல்
துளிர்த்திடுமோ மண்!
பாறை உடைந்தால்
மணல் ஆகிறது!
மணல் கரைந்தால் மண் ஆகிறது!
உடைந்து விட்டோமே என்று
உடைந்து போவதில்லை!
உன் எல்லைகளை விரிவாக்கு!
உலகத்தை திரும்பி பார்க்கச் செய்!
வீழ்ச்சிகள் எழுச்சிக்குத்தான்!
வரலாறு இதை சொல்லியிருக்கையில்
வருத்தம் ஏன்?
திருத்தமுடன் முயற்சி செய்
பயிற்சியில் அயர்ச்சி இல்லையேல்
படிப்படியாய் வந்திடும் வெற்றி!
துடிப்புடனே செயல்படு!
துவங்கட்டும் உன் வெற்றிப்படி!

டிஸ்கி} எனது ஹைக்கூவில் இருக்கும் கூர்மை கவிதைகளில் இல்லை என்று சகோதரி எழில் குறிப்பிட்டிருந்தார். நீண்ட இடைவெளியில் எழுதுவதால் இந்த குறை இருக்கும் என்று நினைக்கிறேன்! தெரியாத காதலை விட்டு தெரிந்த நம்பிக்கை கவிதை இது! இரவு இரண்டரை மணிக்கு தீடீரென விழிப்பு வருகையில் முதலிரண்டு வரிகள் உதயமாயின. எப்படி இருக்கு என்று கமெண்ட் செய்யுங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles