தளிர் லிமரிக் கவிதைகள்!
லிமரைக்கூ
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாகவேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலியஉணர்வோடு இயங்கக் கூடியது.தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன்‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில்முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடுதமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் /உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத்தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில்இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும்இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதியதமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார்.இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்துவிட்டது.
நிதியமைச்சர் போட்டாரு பட்ஜெட்டு!
புதுமை இல்லா விட்ஜெட்டு!
ஆளுங்கட்சி போட்டார்கள் கைதட்டு!
சர்தார் வல்லபாய் பட்டேலு!
இரும்பில் வடிக்கிறார்கள் சிலை!
இருநூறுகோடி விலை!
பெட்டி பெட்டியாய் எழுந்தது
பெய்தமழையில் விழுந்தது
பெட்டியில் முடங்கிப் போனது!
கண்ணாமூச்சி ஆடுது மத்திய அரசு!
கரைந்துபோகுது மீனவர் உசுரு!
விரைந்து கிடக்குமா நல்ல தீர்வு!
ஏறிப்போச்சு விலைவாசி!
ஏழைக்கு என்றுமே
வயிறு கால்வாசி!
பசிக்குக் கிட்டாச் சோறு!
பருவத்தில் எட்டாக் கல்வி!
புவிக்கு விளைத்திடும் என்றும் ஊறு!
உதைத்து ஆடினார்கள் கால்பந்து!
உடைந்து போனது முதுகு!
சிதைந்து போனது உலகப்பந்து!
தினம் தினம் இருட்டு!
பல்கியது திருட்டு!
தீர வேண்டும் மின்வெட்டு!
வரவே இல்லை மழை!
வறண்டது பூமி!
மரங்களை வெட்டியதால் பிழை!
கை மாறியது கமிஷன்!
கட்டிடத்தில் புதைந்தன உயிர்கள்!
கண்ணைத் துடைக்க விசாரணை கமிஷன்!
அட்சய திரிதியை!
அலை மோதுது விற்பனை!
காலியாகுது பணப்பை!
விளை நிலங்களை போட்டார்கள் கூறு!
விலை உயர்ந்தன எல்லாமே!
வீங்கிப் போனது இந்தியப் பொருளாறு!
வாசலில் அமைப்பது திண்ணை!
வளர்ந்துநிக்குது பண்ணைவீட்டு தென்னை!
வழிபட வேண்டும் பெண்ணை!
வீதிக்கு வீதி சாக்கடை!
வீசுது எங்கும் நாற்றம்!
பூமியை ஆளுது மதுக்கடை!
கள்ளை உண்டால் மயக்கம்!
கலங்கரையை மறைக்கும் பழக்கம்!
கைவிட்டால் கிடைக்கும் வணக்கம்!
பையில் இருக்கணும் சில்லறை!
பசங்க பண்ணுவாங்க அலப்பறை!
படிப்பில் இருக்கணும் அக்கறை!
குளம் குட்டையெல்லாம் வீடாச்சு!
நிலம் நீச்செல்லாம் ப்ளாட்டு!
நீராதாரத்திற்கு வேட்டு வெச்சாச்சு!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
தொடர்புடைய இடுகை: