தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 6
நாலு முழ வேட்டியில்
நர்த்தனமாடுது!
தமிழன் பண்பாடு!
வேட்டிக்கு மறுவாழ்வு
கொடுத்தது
கிரிக்கெட் கிளப்
மணலில் உருவானது மலை!
மலையில் மறைந்து போனது
மழை!
குடியை வளர்த்து
குடியை அழிக்கிறது
குடியாட்சி!
சாலைகள் வளர்ந்தன!
அழிந்தன
கிராமங்கள்!
அரசியல் வலையில்
சிக்கியது
மீனவன் உயிர்!
வளைந்து வளைந்து
உயர்கிறார்கள்
அரசியல்வாதிகள்!
நஞ்சோடிய சமூகம்!
கருகின பெண்
பிஞ்சுகள்!
மேசைத் தட்டல்!
மேலெழுந்து பரவியது!
அழுக்கு!
பொதுவான கடவுள்!
வகைப்படுத்தி தரிசனம்!
நுழைவுச்சீட்டு!
கல்வியைவிற்று
பட்டம் வாங்குகிறார்கள்!
கல்வித் தந்தைகள்!
கடன்பட்டு வாங்கினார்கள்
கனவாகிப்போனது
களவுபோன வீடு!
அழையாவீட்டில்
நுழையும் விருந்தாளியானது
மொழித் திணிப்பு!
சுமை ஏற்றி
பளு குறைக்கின்றது
டாஸ்மாக்!
ஏறும்விலைவாசி
இறங்கிப் போகிறது
மக்களின் உயிர்மூச்சு!
தண்ணீர் விற்பனையில்
தன்னிறைவு கண்டது
தமிழகம்!
சீஸாக்களில் அடைபட்டு
பைசாக்கள் ஆனது
தண்ணீர்!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!