தளிர் ஹைக்கூ கவிதைகள்!
சிறைபட்டதை அறியாமலே
சிறகடித்துக் கொண்டிருந்தது
வண்ணத்துப் பூச்சி!
காலியான வயிறு!
நிரம்பவே இல்லை!
குப்பைத் தொட்டி!
யாரும் வரையவில்லை!
சுவரில் ஓவியம்!
நிழல்!
குளிர் இரவில் கச்சேரி!
எண்ணிலா பார்வையாளர்கள்!
நட்சத்திரங்கள்!
பற்றுதலை விட்டதும்
வாடிப்போனது!
கொடி!
தள்ளிப்போனதும்
துள்ளிவந்தது மகிழ்ச்சியும் வருத்தமும்
குழந்தை!
கற்றுக்கொண்டு
கற்றுக்கொடுக்கின்றன
குழந்தைகள்!
சிறைவைத்தாலும்
விலங்கிடுவதில்லை!
குழந்தையின் சிரிப்பு!
வெள்ளி முளைத்ததும்
வெட்டி எடுத்தார்கள்!
நரைமுடி!
வானம் கட்டியது
வண்ணச்சேலை!
வானவில்!
பொலிவிழந்த பூக்கள்!
படியவில்லை
பேரம்!
கொத்தினாலும் கத்தவில்லை!
கோலத்தில்
காகம்!
தட்டு நிறைகையில்
அதிகரிக்கிறது பாரம்!
குருக்கள்!
பதுக்கி வைத்தாலும்
கைது செய்யமுடியவில்லை!
இருட்டு!
விசையில்லாமல்
கவர்ந்து இழுத்தது
குழந்தையின் சிரிப்பு!
கொச்சைமொழியும்
இச்சையானது
குழந்தை!
பசியோடு இருந்தாலும்
புசிக்க ஈகவில்லை மக்கள்!
குப்பைத்தொட்டி!
தொடர்ந்து வந்தாலும்
யாரும் உணர்வதில்லை!
நிழல்!
தாவிக்கொண்டே இருந்தது
தடைபோட முடியவில்லை!
மரத்தில் அணில்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!