Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

அம்மாவுக்கு “ஜாமீன்” கிடைக்க அதிமுகவினருக்கு அதிரடி யோசனைகள்!

$
0
0
அம்மாவுக்கு “ஜாமீன்” கிடைக்க அதிமுகவினருக்கு அதிரடி யோசனைகள்!


 அம்மாவை சிறையில் அடைத்தாலும் அடைத்தார்கள். அதிமுகவினர் அதை எதிர்த்து நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினம் ஒரு போராட்டமும் வேண்டுதலும் செய்து தமிழக மக்களை உச்சிகுளிர?.. வைத்துக் கொண்டு இருக்கின்றனர். நாமும் நம் பங்குக்கு சில யோசனைகளை முன்வைப்போம்.

 தமிழக அமைச்சர்கள் எல்லோரும் அம்மாவுக்காக தாடி வளர்க்கிறார்களாம். வெளியில் வந்தால் மீசையும் தாடியும் மழித்து விடுவார்களாம். இதனால் ஏதாவது பிரயோசனம் உண்டா நரைத்துப்போன முடியும் தாடியும் சாமிக்கு தேவையா? ஏற்கனவே திருப்பதியிலும் பழனியிலும் இன்னும் எத்தனையோ ஊர் தெய்வ கோயில்களிலும் கொட்டிக்கிடக்கிறது முடி! அதனால் கடவுள் கோபித்துக் கொண்டு ஜாமின் கோரிக்கையை நிராகரித்து விடலாம். எனவே அசைவச் சாமியாக இருந்தால் ஆடு கோழி வளர்க்கலாம். அதுவும் ஒன்று இரண்டு என்று இல்லாமல் அம்மாவின் ராசி எண்ணுக்கு தகுந்தபடி நிறைய ஆடுகோழிகளை வளர்த்து கோவிலுக்கு நேர்ந்துவிட்டால் கோவிலுக்கு வருமானமும் கிடைக்கும் அம்மாவுக்கு விடுதலையும் கிடைக்கும். சைவ சாமிகளாக இருந்தால் ஆடு கோழிகளை கொடுத்தால் கோபித்துக் கொள்ளும். அதனால் நட்சத்திரமரம் அது பூச்செடிகளை கோயிலில் நட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்களாம். கோயில்களாவது அழகு பெறும். கோயிலுக்கு பூசைக்கு பூவும் கிடைக்கும். இதான் சாக்கு என்று சில அமைச்சர்கள் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டாலோ சாமிகுத்தம் ஆகிப்புடும் சொல்லிப்புட்டேன்!

   தாடி வளர்க்கும் அமைச்சர்கள் அப்படியே கோட்டைக்கு நடை பயணமும் வரலாம்.அம்மா விடுதலை ஆகும் வரை நடந்து வந்தால் அவர்களுக்கு வேண்டுதலும் ஆயிற்று. உடம்புக்கு நல்லதும் ஆயிற்று. மக்களை சந்தித்த மாதிரியும் ஆயிற்று.

கோர்ட் வாசலில் குலவை சத்தம் போட்டு அம்மாவுக்கு ஜாமீன் கேட்டு போராடலாம் மகளீர் அணியினர்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிதான் தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் கோயில்களில் யாகம் செய்வதற்கு பதில் அவர் வீட்டின் முன்னால் பெரிதாக யாககுண்டம் அமைத்து யாகம் வளர்த்தால் அந்த புகையின் கொடுமை தாளாது அவர் ஜாமீன் கொடுத்து விடலாம். இதில் ஒரு பின்விளைவும் இருக்கிறது. புகை அவருக்கு பகையாகி கோபம் கொண்டு ஜாமீன் தராமலும் போகலாம்.

 தமிழ்நாட்டையே அம்மா கிட்ட கொடுத்திருக்காங்க மக்கள்! அப்ப அவங்க சேர்த்த சொத்தும் தமிழ்நாட்டிலயே அடக்கம் தானே அப்புறம் எப்படி கொள்ளையடிச்சாங்க?  இப்படி எடக்கு மடக்காக வக்கில்களுக்கு எடுத்து கொடுத்து போராடலாம்.

அரசு வக்கீல் பவானி சிங்! அவர் தமிழரு இல்லே! அதனால தமிழ்நாட்டு கேஸ்ல வாதாடக் கூடாதுன்னு ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாம்.


பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் அம்மா அடைப்பட்டு இருப்பதால் அம்மாவை தெய்வமாக கருதும் அதிமுகவினர் அங்கேயே பொங்கல் வைத்து சிறையை அங்கப்பிரதட்சணம் செய்து அதையே ஒரு கோவிலாக மாற்றலாம். இதனால் எரிச்சல் அடைந்து அம்மாவுக்கு ஜாமின் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள்.

சுப்ரமண்யம் சாமி கேஸ் போட்டதால் அவர் பேர் கொண்ட முருகர் கோயில்கள்ல மொட்டையடிச்சு சுப்ரமண்யம் சாமியோட மனசை குளிரவைக்கலாம்.

அசைவமே சாப்பிடக் கூடாதுன்னு ஜோஸ்யர்கள் சொல்லி இருக்கிறதாலே அம்மாவுக்கு ஜாமின் கிடைக்கற வரை அசைவ ஓட்டல்களை திறக்க கூடாதுன்னு ஒரு போராட்டம் செய்து அம்மாவை குளிர வைக்கலாம்.

அம்மாவுக்கு ஜாமீன்கிடைக்கறவரைக்கும் கடல்ல ஒரு மீனும் பிடிக்க கூடாதுன்னு தடை விதிக்கலாம்.

கர்நாடகா காவிரி தண்ணியை தராவிட்டாலும் நாங்க தண்ணி காட்டுவோம்னு கூவம் தண்ணிய கர்நாடாகவுக்கு திருப்பிவிட்டா அந்த நாத்தம் தாங்கமா அம்மாவுக்கு ஜாமின் கிடைக்கலாம்!

அதிமுக வக்கில்கள் ஏடாகூடமா பேசறதாலே ஜாமீன் கிடைக்காம போயிருது. அதனால அவங்க எல்லோரும் அலகு குத்திக்கிட்டு கோர்ட்டுக்கு போனா ஜட்ஜ் பரிதாபப்பட்டு ஜாமீன் கொடுத்தாலும் கொடுத்திடலாம்.

அதிமுக மகளிர் அணியினர் ஜட்ஜ் வீட்டு முன்னாடி ஒப்பாரி வைச்சு அழுதால் பெண்ணுன்னா பேயும் இறங்கும்னு சொல்றதுனால ஜட்ஜும் இறங்கி ஜாமீன் கொடுக்கலாம்.

சரத்குமாருக்கு நாட்டாமை வேசம் போட்டு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனா அவரோட நாட்டாமை தீர்ப்பை மதிச்சு ஜாமீன் கொடுத்தாலும் கொடுக்கலாம்.

அதிமுக காரங்க எல்லோரும் தங்களோட பேரை ‘ஜாமீன்’னு மாத்திகிட்டா கோர்ட்ல ஜாமீன் கிடைக்காட்டியும் ஒருத்தரை ஒருத்தர் ஜாமின்னு கூப்பிட்டு திருப்தி அடைஞ்சிக்கலாம்!

 அம்மாவுக்கு ஜாமீன் கிடைக்கிற வரைக்கும் யாரும் தீபாவளிக்கு மட்டுமில்ல எப்பவும் மைசூர் பாகு செய்யக்கூடாது விற்க கூடாதுன்னு போராடலாம். அப்படியே மைசூர் போண்டாவையும் மைசூர் சேண்டல் சோப்பையும் தடை செய்யலாம்.

  சிறுவயது குழந்தைகளை நீதிமன்றத்தில் நிறுத்தி எங்களுக்கு அம்மா வேணும்னு அழச்சொல்லாம்! அதனால நீதிபதி மனம் இரங்கி ஜாமீன் கொடுத்தாலும் கொடுத்திடலாம்!

  தலைமை நீதிபதி வீட்டுக்கு கிலோ கணக்குல குலோப் ஜாமூன் அனுப்பிக்கிட்டே இருக்கலாம்! அம்மாவுக்கு வேணும் ஜாமீன்! அதுவரைக்கும் அனுப்புவோம் ஜாமூன்! அப்படின்னு எதிர்கட்சி காரங்களுக்கும் ஜாமூன்  அனுப்பி போராடலாம்!
இன்னும் நிறைய யோசனை இருந்தாலும் ரத்தத்தின் ரத்தங்கள் நலன் கருதி இத்தோட நிறுத்திப்போம்!

(பதிவில் உள்ள கருத்துக்கள் நகைச்சுவைக்கே! யாரையும் புண்படுத்த அல்ல.)


தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!.

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!