தளிர் சென்ரியு கவிதைகள்!
சிறைபட்டதும்
சிறைபட்டது அரசு!
தமிழகம்!
அடைபட்டதும்
அடைத்தார்கள்!
கேலியில் நீதி!
மலிந்து போன ஊழல்!
மலிவான மக்கள்!
மறைந்துபோனது நீதி!
சுரண்ட சுரண்ட
வளர்ந்து கொண்டே இருக்கிறது
ஊழல்!
முடி இழந்ததும்
வயிறு நிறைந்தது!
தலைவிக்கு மொட்டை!
பெருகின வட்டச்சாலைகள்!
அருகிப்போயின
வயல்கள்!
கொடுத்து பிடுங்குகிறது
அரசாங்கம்!
டாஸ்மாக்!
உறிஞ்சினார்கள்!
உள்ளே புகுந்தது கடல்!
நிலத்தடி நீர்!
கரையேறுகையில்
கலைத்து போடுகிறது வாழ்க்கை!
புயல்!
உரம் போடாவிட்டாலும்
உயரமாய் வளர்ந்தது!
ஊழல்!
உடையால் அல்ல!
உள்ளே புகுந்த மிருகத்தால் உருவாகிறது
பாலியல் தொந்தரவுகள்!
வளர வளர
சுருங்கிப் போகிறது
உடை!
அரிதாரம் பூசாமலே
அழகாய் வருகிறது நடிப்பு!
தமிழ் திரையுலகு!
கடைகளை அடைத்தார்கள்!
அடங்க மறுத்தது!
ஏழையின் பசி!
புகைந்துக் கொண்டே
அழித்தது அழிந்தது!
கொசுவர்த்தி!
ஆட்டம் முடிந்தும்
வேசம் கலையவில்லை!
தமிழக அரசியல்வாதிகள்!
மறைத்தாலும்
எட்டிப்பார்க்கிறார்கள்!
பான்மசாலா!
தீராத தாகம்!
தீர்வு கண்ட அரசாங்கம்!
டாஸ்மாக்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!