Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

ஓடி ஓளிந்த கலைஞரும்! ஒழுங்கு காட்டிய அழகிரியும்! கலக்கல் கதம்பம்!

$
0
0

ஓடி ஓளிந்த கலைஞரும்! ஒழுங்கு காட்டிய அழகிரியும்! கலக்கல் கதம்பம்!

சென்னையில் பாமகவினர் இணையும் விழாவில் தனக்கு பின்னர் ஸ்டாலின் இருக்கிறார் என்று கலைஞர் பேசியதும் திமுகவினரிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நேற்றுக்கூடிய பொதுக்குழுவில் ஸ்டாலின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். உனக்கும் பேப்பே! உங்கப்பனுக்கும் பேப்பே! என்று கண்ணாமுச்சி காட்டுவதில் வல்லவரான கருணாநிதி குடும்பத்தில் குழப்பம் வரும் என்று தான் இருக்கும் வரை நான் தான் தலைவர்! அதற்கப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள்! என்று தெரிவித்து விட்டார்.
    அண்ணன் எப்ப சாய்வது? திண்ணை எப்போது காலியாவது? என்று தொண்டர்கள் அலுத்து போயினர். இந்த நிலையில் மதுரையில் பேட்டி கொடுத்த அழகிரி அவரது தந்தை பாணியில் திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று சொல்லிவிட்டு தந்தையை சந்திக்க சென்னை வந்தார்.
  அழகிரி வருவதை அறிந்தும் கருணாநிதி அவரை சந்திப்பதை தவிர்த்தார். சென்னை தி.நகர் நட்சத்திர ஓட்டலில் தங்கிய அழகிரி கோபால புரத்திற்கு பத்து மணிக்கு வருவதாக தகவல் வந்ததும் கலைஞர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். அழகிரியும் சளைக்க வில்லை! கலைஞர் வருவார் என்று காத்திருந்தார்.
   ஆனாலும் அழகிரியை சந்திப்பதை தவிர்த்த கலைஞர் முரசொலி அலுவலகம், அறிவாலயம் அன்பழகன் வீடு என்று சுற்றிவிட்டு சி.ஐ.டி நகர் வீட்டிற்கு சென்று விட்டாராம்.
  கோபாலபுரத்தில் மாலை வரை காத்திருந்த அழகிரி தன் மனக்குமுறலை தயாளு அம்மாளிடம் கொட்டிவிட்டு வருத்ததுடன் மதுரை கிளம்பி விட்டார்.
   திமுக ஒரு காலத்தில் கட்டுக் கோப்பான கட்சியாக இருந்தது. இன்று தந்தை மகனுக்குள்ளே பிரச்சனை என்று வந்து விட்டது. மாறி மாறி திராவிட கட்சிகளிடம் ஆட்சியை தரும் மக்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். தம் மக்கள் நலன் கருதாமல் தன்னலம் கருதாமல் பொது மக்கள் நலன் கருதும் அரசியல் வாதிகளிடம் தமிழகம் இருந்தால்தான் உருப்படும். புதிய மறுமலர்ச்சி ஏற்படும்!

டயானா படம் ஏலம்!
  யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்! அப்படித்தான் இங்கிலாந்து முன்னாள் இளவரசி டயானாவும். அவர் இருக்கும் வரை அனைத்து மீடியாக்களும் அவரையே சுற்றி வந்தன. இறந்தபிறகும் கதை கதையாக எழுதின. இப்போது இறந்து பத்து பன்னிரண்டு வருடங்கள் ஆனபின்னும் அவரை விடவில்லை மீடியாக்கள்!
    இப்போது மீடியாக்களுக்கு தீனி போட்டுள்ளது அவரது இளவயது புகைப்படம் ஒன்று. 1979 -80 களில் அவரது 18 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இப்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்தின் டெய்லி மிரர் பத்திரிக்கை வசமிருந்த இந்த புகைப்படத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் டயானா இருக்கிறார். இதை பதிப்பிக்க வேண்டாம் என்ற குறிப்புடன் அதை தூக்கி எறிந்துள்ளனர். இப்போது டெய்லிமிரரிடமிருந்து பழைய குப்பைகளை சேகரிக்கும் நிறுவனம் வசம் இந்த புகைப்படம் சென்று விட்டது. இது அவர்களுக்கு பொக்கிஷமாகி விட்டது. இந்த புகைப்படத்தை ஏல நிறுவனத்தில் கொடுத்து ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது பழைய பேப்பர் நிறுவனம். சாதாரணமாக 450 பவுண்ட்கள் ஏலம் போகும். இந்த படம் அதை விட பலமடங்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
    விஜய்! சூர்யா! அஜித் கூட நடிக்க மாட்டேன்! லஷ்மிமேனன்.
  கும்கியில் அறிமுகமாகி இளைஞர்களை கவர்ந்தவர் லஷ்மி மேனன். இவர் லேட்டஸ்டாக ஒரு ஸ்டேட்மெண்ட் விடுத்து இளைஞர்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். அது முன்னனி ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்பதுதான். என்ன காரணம் என்று கேட்டால் அஜித், சிம்பு, விஜய், சூர்யா போன்றோருடன் நடித்தால் நெருக்கமான காட்சிகளுடன் முத்த காட்சியில் நடிக்க வேண்டியிருக்க வேண்டும். அதனால் நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறார்இதுபற்றிஅவர்கூறும்போது, "ஒருநல்லநடிகையாகவேண்டும்என்றுசென்னைக்குவந்தேன். வந்தவேகத்தில்அதற்கேற்றபடங்கள்கிடைத்தன. நல்லநடிகைஎன்றபெயரையும்பெற்றுவிட்டேன். இனிமுன்னணிநடிகையாகவேண்டும். அதற்குமுன்னணிநடிகர்களுடன்நடிக்கவேண்டும். ஆனால்அஜித், விஜய், சூர்யா, விக்ரம்ஆகியோருடன்நடிக்கவேண்டுமென்றால்பாடல்காட்சிகளில்கவர்ச்சியாகநடிக்கவேண்டியிருக்கும். கூடவே, முத்தக்காட்சி, அதிகநெருக்கம்என்றெல்லாம்காட்சிஇருக்கும். எனக்குஅதுசரிப்பட்டுவராது. அதனால்தான்அவர்களுடன்நடிக்கவேண்டும்என்றஆசையைவிட்டுவிட்டேன். எனக்குபொருத்தமானகதாபாத்திரங்களில்மட்டுமேநடிப்பேன். படங்களின்எண்ணிக்கைகணக்கல்ல... கொஞ்சகாலம்நடித்தாலும்டீசன்டாகநடித்துவிட்டுப்போய்விடவேண்டும்," என்றார். அதுக்குள்ளஇவ்வளவுதெளிவா... ரொம்பபட்டுட்டார்போலிருக்கு!!

 . நடிக்க வந்த பிறகு இப்படி கூச்சப்பட்டால் பிழைக்க முடியுமா?
பரபரப்பான பேட்டி!
டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்து போன மாணவியின் ஆண் நண்பர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி இப்போது பரபரப்பாகி உள்ளது. அந்த தனியார் தொலைக்காட்சி மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிந்து உள்ளது. இது காவல் துறையின் கையால் ஆகாத தனத்தை காட்டுகிறது.
  அப்படி என்ன அந்த பேட்டியில் சொல்லி விட்டார் அந்த நண்பர்.
   ஓடும்பேருந்தில்இருந்துதாங்கள்வெளியேதூக்கிஎறியப்பட்டபின்னர், சுமார் 25 நிமிடங்கள்சாலையில்உயிருக்குப்போராடியதாகவும், பொதுமக்கள்யாரும்உதவமுன்வரவில்லைஎன்றும்கூறியுள்ளார். அரைமணிநேரம்கழித்துசம்பவஇடத்திற்குவந்தகாவல்துறையினர், இந்தவழக்குஎந்தகாவல்நிலையஎல்லைக்குள்வரும்எனஆலோசனைநடத்தியதாகவும்இதில் 45 நிமிடங்கள்விரயமானதாகவும்அந்தமாணவர்தெரிவித்துள்ளார். மேலும், சாலைஓரத்தில்நிர்வாணமாகவிழுந்துகிடந்தஎங்களைகாவல்துறையினர்வேடிக்கைபார்த்தனர். அப்போது, யாரோஒருவர்கொடுத்ததுணியைவைத்துஎனதுதோழியின்உடலைமறைக்கமுயன்றேன். ஆம்புலன்ஸ்வேன்எதுவும்வராதநிலையில், ரத்தவெள்ளத்தில்கிடந்தஎனதுதோழியின்நிலைகுறித்துமிகவும்கவலைஅடைந்தேன். பின்னர்நானேஎனதுதோழியைபோலீஸ்வேனில்தூக்கிவைத்தேன். காவல்துறையினர்அருகேயுள்ளமருத்துவமனைக்குகொண்டுசெல்லாமல், நீண்டதூரம்பயணித்துசப்தர்ஜங்மருத்துவமனையில்அனுமதித்தனர்எனவும்தெரிவித்துள்ளார்.
  மக்களின் மனிதாபிமானம் எங்கே போனது? காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா என்று எண்ணத் தோன்றுகிறது?    


Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!