Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

பொங்கலுக்கு ரேசனில் ரூபாய் 100 அன்பளிப்பு! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

$
0
0

பொங்கல் பரிசு ரூ 100 ஜெ. அறிவிப்பு!

தமிழக அரசியல் வாதிகள் எதை மறந்தாலும் இலவசத்தை மறக்கமாட்டார்கள் போல! தமிழக மக்களும் இளிச்சவாயர்கள்! கரண்ட் இல்லை விவசாயம் படுத்துவிட்டது. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்பதை எல்லாம் மறந்துவிட்டு வழக்கம் போல இலவசத்திற்கு அடிமை ஆகி விடுவார்கள்!
   இந்த இலவச அறிமுகம் முதன் முதலில் எம்.ஜி.ஆர் காலத்தில் அறிமுகம் ஆனது. கதர் தொழிலை கை கொடுத்து தூக்கிவிட கோ- ஆப்டெக்ஸில் வேட்டி புடவைகள் கொள்முதல் செய்து பொங்கல் சமயத்தில் ஏழைகளுக்கு கொடுத்து துவக்கிவைத்தார் அந்த மகராசன் அப்போதே இதில் தில்லுமுல்லுகள் அதிகம்.
   இலவச டீவி கொடுத்து ஆட்சிக்கு வந்த கலைஞர் அய்யா பொங்கல் வைக்க வெல்லமும் அரிசியும் இதர பொருட்களும் கொடுத்து மக்களை மகிழ்ச்சி பொங்க வைத்தார்.
  எதிலுமே ஏட்டிக்கு போட்டியாக செயல்படும் தமிழக முதல்வரம்மா! இப்போது பொங்கல் பண்டிகைக்கு ரேசனில் கார்டு தாரர் அனைவருக்கும் நூறு ரூபாய் தரப்போறாங்க! இதன் மூலம் கவர்மெண்டு காசை வாங்கி கவர்மெண்டுக்கே வருமானம் தரப்போறான் தமிழன். அதாங்க டாஸ்மாக்!
    மக்கள் நல திட்டங்களில் அக்கறை காட்டாது இப்படி இலவசம் கொடுத்தே காலம் தள்ளும் தமிழக அரசை என்ன சொல்லி பாராட்டுவது வார்த்தைகளே வரவில்லை! எப்படியோ புத்தாண்டு தினத்தன்று குடிமக்களை மகிழ்வித்து மகிழ்ந்த அரசு பொங்கலன்றும் குடிக்க காசு கொடுக்கிறது. வாங்கி குடித்து கரண்ட் இல்லாவிட்டாலும்  காவிரியில் தண்ணீர் வராவிட்டாலும் குடியே முழுகி போனாலும் குடியில் முழுகி மனக்கவலை எல்லாம் மறந்து இருக்க இந்த ஐடியா பண்ணியிருக்குது இந்த அரசு.
    இந்த ஐடியா கொடுத்த சிகாமணி யாருன்னு தெரியலை! தெரிஞ்சா அவருக்கு ஒரு கட் அவுட் வைச்சி கும்பிடலாம்.
   தமிழக அரசு பொங்கலுக்கு ரேசனில் கொடுக்கப்போகும் பொருட்கள் பற்றிய அரசு அறிவிப்பு கீழே!
 தமிழர்திருநாளானபொங்கல்பண்டிகைக்காகஅரிசிபெறும்சுமார் 1 கோடியே 84 லட்சம்குடும்பஅட்டைதாரர்களுக்கு 160 ரூபாய்மதிப்பிலானசிறப்புப்பொங்கல்பரிசுதொகுப்புஒன்றுஅளிக்கப்படும். இந்ததொகுப்பில், 20 ரூபாய்மதிப்பிலான 1 கிலோபச்சரிசி, 40 ரூபாய்மதிப்பிலான 1 கிலோசர்க்கரைமற்றும்பொங்கல்பண்டிகைக்காகஇதரபொருட்கள்வாங்குவதற்காக 100 ரூபாய்ரொக்கம்ஆகியவைஅடங்கும். இந்ததொகுப்புஅந்தந்தநியாயவிலைக்கடைகள்மூலம்குடும்பஅட்டைதாரர்களுக்குவழங்கப்படும். இதனால்அரசுக்குகூடுதலாக 300 கோடிரூபாய்செலவுஏற்படும். இதனால், விவசாயிகளின்துயர்துடைக்கவழிவகுப்பதோடு, பொங்கல்பண்டிகையைதமிழகமக்கள்அனைவரும்மகிழ்ச்சியுடன்கொண்டாடவழிவகைசெய்யும்என்பதைத்தெரிவித்துக்கொள்கிறேன்"" என்றுஅரசுஅறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதனாலே எல்லாத்தையும் மறந்து மகிழ்ச்சியா ரூபா வாங்கிகினு பொங்கலை கொண்டாடுங்கள் மக்களே!
தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!