புகைப்பட ஹைக்கூ
நம்பிக்கை
பிடித்திருக்கிறது
தூரிகை!
வண்ணச்சிதறலில்
ஒளிர்கிறது
நம்பிக்கை!
பிடிமானமில்லை!
படிமானமானது
ஓவியம்!
தீட்டதீட்ட
கூர்பட்டது
நம்பிக்கை!
கைவிட்டாலும்
கைவிடவில்லை!
நம்பிக்கை!
வண்ணம் பூசியதும்
மாறியது
வாழ்க்கை!
ஊக்கம் உடையாதவரை
இல்லை இவருக்கு
துக்கம்!
கைகள் முடங்கினாலும்
துளிர்த்தது
கலை!
ஊமையான விரல்கள்
பேசியது
ஓவியம்!
கலைந்த கனவுகளை
நிஜமாக்கியது
சித்திரம்!
சிந்தியது வண்ணங்கள்!
சிதறவில்லை!
நம்பிக்கை!
ஒவியத்துள்ளே
ஒளிந்து கிடக்கின்றது
நம்பிக்கை!
கை விடாத ஊக்கம்
கை கொடுத்தது
தூரிகை!
உயர்ச்சியை
நுகர வைத்தது
உலராத தூரிகை!
விதைபட்ட நம்பிக்கை!
விழுதானது
தூரிகை!
ஊற்றெடுத்த நம்பிக்கை!
உருவானது
வாழ்க்கை!
ஊற்றெடுத்த நம்பிக்கை!
உருவானது
வாழ்க்கை!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!