Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

சிவனருள் கிடைக்கச்செய்யும் சோமவாரவிரதம்!

$
0
0
சிவனருள் கிடைக்கச்செய்யும் சோமவாரவிரதம்!


இந்து மதத்தில் எண்ணற்ற விரதங்கள். விரதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நற்பலன்களை தரவல்லது. விரதம் என்றாலே கட்டுப்பாடு என்று பொருள். மனதினை ஒருநிலைப்படுத்தி உணவுக்கட்டுப்பாட்டுடன் இறைவனை மனதில் நிறுத்தி வழிபடுவதுதான் விரதம்.
   ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விரதங்கள் உண்டு. இதில் சிவனை வழிபடும் கார்த்திகை சோமவார விரதம் மிகவும் உத்தமமானது. கார்த்திகை மாதம் சிவனுக்கு உகந்தது. சிவன் அக்னிப்பிழம்பாக இருப்பவர். இந்த கார்த்திகையும் அக்னியில் தோன்றியது. இந்தமாதத்தில் வரும் சோமவாரமான திங்கட் கிழமைகளில் விரதம் இருந்து சிவனை வழிபடுவது சிறப்பாகும்.
    சோமன் என்றால் சந்திரன். சோமனை தலையில் சூடிய சிவன் சோமசுந்தரர் என்று வழங்கப்படுகிறார். திங்கள் என்று தமிழிலும் சந்திரன், சோமன் என்று சம்ஸ்கிருதத்திலும் வழங்கப்படும் நிலா சிறப்பிக்கப்படும் விரதம் இது.
    தன்னுடைய நட்சத்திர மனைவியரில் ரோகிணியிடம் மட்டும் அதிக பாசம் செலுத்திய சந்திரன் தட்சனால் சபிக்கப்பட்ட சந்திரன் க்‌ஷய ரோகத்தால் உடல் நலிவுற்றான். பின் இந்த சோமவார விரதத்தினை கடைபிடித்து மேன்மை பெற்றதோடு சிவனின் மகுடத்திலும் இடம்பிடித்தான்.

   சந்திரனின் துன்பம் நீங்க அவனது மனைவி ரோகிணியும் இந்தவிரதத்தை கடைபிடித்தாள். அதனால் பெண்கள் சகல சௌபாக்கியத்துடன் திகழவும் கணவனுக்கு மேன்மைகள் கிடைக்கவும் நோய்நொடிகள் இன்றி தீர்காயுளுடன் வாழவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

    கார்த்திகை சோமவார தினங்களில் சிவாலயங்களில் சங்கினால் சங்காபிஷேகம் நடைபெறும். நூற்றி எட்டு, ஆயிரத்து எட்டு சங்குகளால் சிவனின் ஐந்து முகங்களுக்கும் ஆவரண பூஜைகள் ஹோம ஜபங்கள் செய்து சங்கில் உள்ள வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட நீரை அபிஷேகித்து அர்ச்சனை செய்வர். இந்த சங்காபிஷேகம் மூலமாக அக்னிப்பிழம்பாக உள்ள ஈஸ்வரனை குளிர்விப்பதாக ஐதீகம்.
     இந்த சங்காபிஷேகத்தை கண்டு களிப்பதுடன் சிவனுக்கு வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி வெண்மை நிற பூக்களால் அர்ச்சித்து வழிபடுவதோடு ஆலயங்களில் உள்ள சந்திரசேகரர் என்ற மூர்த்தியை தரிசித்தால் ஆயுள் விருத்தியடையும்.

 .ஒருமுறைஇந்தவிரதத்தைஎப்படிகடைபிடிப்பதுஎன்றுபார்வதிசிவனிடம்கேட்டார். அதற்குசிவன், காலையில்எழுந்துநீராடி, தினக்கடமைகளைமுடிக்கவேண்டும். வீட்டிலேயேவிரிவாகசிவபூஜைதினமும்செய்யும்ஒருவேதியரையும்அவரதுமனைவியையும்அழைத்துஅவர்களைசிவ-பார்வதியாகநினைத்து, அவர்களுக்குமுடிந்தவரைதானம்செய்யவேண்டும். அதன்பின்பகல்முழுவதும்உண்ணாமல்விரதம்இருந்துமுன்இரவில்ஒருவேளைமட்டும்உணவருந்திசிவசிந்தனையுடன்விரதமிருக்கவேண்டும். வீட்டிலேயேவிரிவாகபூஜைசெய்யஇயலாதவர்கள்சிவன்கோயிலுக்குசென்றுசிவனுக்குஅபிஷேகம்செய்துவேதியர்களுக்கும், அடியவர்களுக்கும்அன்னதானம்செய்யவும். இந்தசோமவாரவிரதம்இருப்பவர்கள்எனக்குமிகவும்விருப்பமானவர்கள். அவர்களுக்குஎன்னிடத்தில்இடம்கொடுப்பேன்என்றுசிவன்கூறுகிறார். 


 கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் வாழவும், தீர்க்காயுளுடன் வாழவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இந்நாளில் தம்பதி சமேதராக சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும். வாழ்வில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. இதற்காக மனம் வருந்துவோர் இந்த விரதத்தை அனுஷ்டித்து, இனி அவ்வாறு தவறு செய்யாமல் இருக்க உறுதி எடுத்தால், அவர்களது பாவங்கள் களையப்படும் என்பது நம்பிக்கை. 

பதவி உயர்வுக்காகவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.சங்கு லட்சுமி கடாட்சமுடையது. எனவே, இந்நாளில், செல்வ அபிவிருத்திக்காக சிவனுக்கு சங்காபிஷேகம் செய்கின்றனர். அது மட்டுமல்ல! சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அன்று அவருக்கு சங்காபிஷேகம் செய்வதால் சமுதாயத்துக்கும் நாம் நன்மை செய்தவர்களாவோம்.
 

இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். மழை தேவையான அளவுக்குப் பொழியும் என்பதும் சங்காபிஷேகத்தின் நோக்கம். விரதமுறை: சோமவாரத்தன்று பகலில் ஒரு பொழுதோ அல்லது இரவிலோ உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க வேண்டும். ஒரு மூத்த அந்தணரையும், அவரது மனைவியையும் வீட்டுக்கு அழைத்து, அவர்களை சிவபார்வதியாகக் கருதி.
 


அவர்களுக்கு புத்தாடை எடுத்துக் கொடுத்து, இயன்றவரை தானம் கொடுக்க வேண்டும். சிவாலயங்களில் சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு விநியோகிப்பதுடன், அன்னதானமும் செய்ய வேண்டும்.
 

குற்றால அருவியில் நீராடுவது இந்நாளில் மிகமிக விசேஷம். ஏனெனில், இங்குள்ள குற்றாலநாதர் கோயிலே சங்கு வடிவமுடையது


  கார்த்திகை மாதத்தில் பெரும்பாலும் நான்கு திங்கட்கிழமைகளே வரும். இந்த வருடத்தில் ஐந்து சோமவாரங்கள் வருகிறது. சிவனுடைய முகங்கள் ஐந்து. எனவே பஞ்சாட்சரனான சிவனுக்கு உகந்த இந்த விரதத்தை இதுவரை அனுஷ்டிக்காதவர்கள் நாளை வரும் கடை கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டித்தால் கூட  முழு பலனும் கிடைக்கும்.

   விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் சிவாலயங்களுக்குச் சென்று அபிஷேகத்திற்கு தங்களால் இயன்ற திரவியங்கள் வாங்கிக் கொடுத்து சங்காபிஷேகத்தினை கண்டு களித்து சிவன் அருள் பெறலாம்.
    இன்றும் குக்கிராமங்களில் எத்தனையோ சிவாலயங்கள் விளக்கேற்றக் கூட வசதியற்று இருக்கின்றன. அப்படிப்பட்ட சிவாலயங்களுக்கு இந்த சோமவாரத்தில் சென்று தரிசனம் செய்து விளக்கேற்ற சுத்தமான  நல்லெண்ணை வாங்கித் தந்து விளக்கேற்றி வழிபடலாம்.

   சோமவார தினத்தில் சிவாலயம் செல்வோம்! இறைவனருள் பெறுவோம்!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!