புகைப்பட ஹைக்கூ 78
பொதுவெளியில் முத்தம்
கிளம்பவில்லை யுத்தம்
அணில்கள்!
இதழ்களில் படிந்தது
ஈரம் மட்டுமல்ல இதயமும்!
அணில்கள்!
இதழ்பதித்ததும்
இடம்பதித்தது இதயத்தில்!
அணில்கள்!
அணில்களின் அந்தரங்கம்!
கலைத்தது
கேமராக் கண்!
பெருக்கெடுத்த அன்பு
பெற்றெடுத்தது
முத்தம்!
சங்கமம் ஆகும் முன்
சங்கீதம் இசைத்தன
அணில்கள்!
அள்ளித் தெளித்தது
துள்ளித் திரிந்த அணில்கள்
அன்பு!
இணைந்த கைகள்
இசைத்தது காதல் கீதம்!
அணில்கள்!
கறைபடாமலே
சிறைபட்டன
அணில்கள்!
மெய் மறக்கையில்
மெய் சிலிர்த்தது
அணில்கள்!
முடிவே இல்லா யுத்தம்
முத்தத்தில் தொடங்கின
அணில்கள்!
சிந்தை மயங்கி
சிந்தை கவர்ந்தன
அணில்கள்!
சிறை வைக்கையில்
சிறைபட்டது
அணில்கள்!
அன்பின் மொழி
வசப்பட்டது
அணில்கள்!
விதைபட்ட முத்தம்!
விளைவித்தது அன்பு!
அணில்கள்!
உணர்வில் கலந்ததும்
ஒளியை இழந்தன
அணில்கள்!
காதலர்கள் முத்தம்!
காதலன் பிடித்தான்!
அணில்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!