Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

இந்தியாவின் கிளி யார் தெரியுமா? பொதுஅறிவுத் தகவல்கள்!

$
0
0

இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? பொது அறிவுத் தகவல்கள்!

1. உலகின் பெரிய துறைமுகம் நியுயார்க் துறைமுகம்.

 2.லோக்சபாவின் முதல்  சபாநாயகர் ஜீ.வி மாவ்லங்கர்

3. உலகின் உயர்ந்த கோபுரம் சி.என் .கோபுரம், கனடா.

4. மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர் ஆசார்ய வினோபாவே

5. இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கு தங்கம் தியேட்டர், மதுரை 2563 இருக்கைகள். (இடிக்கப்பட்டுவிட்டது)


6.உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் கிராண்ட் செண்ட்ரல் டெர்மினல், நியுயார்க்

7. கிரிக்கெட்டின் தந்தை  டபிள்யூ.ஜி. கிரேஸ்

8. ஈரானின் பழைய பெயர் பெர்சியா.

9. ஆண் தவளைகள் மட்டுமே சத்தமிடும்.

10 உலகில் நீண்ட நாள் உயிர் வாழும் உயிரினம் முதலை, 300 ஆண்டுகள் உயிர் வாழும்.

11. உலகிலேயே மிகவும் நீளமான பாலம் மகாத்மா காந்தி பாலம்- பாட்னா , நீளம்  ஐந்தரை கிலோமீட்டர்கள்.

12 பேச்சுக் கலையின் தந்தை டெமஸ்தனிஸ்

13. இந்தியாவின் முதல் ஐ.சி. எஸ் பட்டதாரி சத்யேந்திர நாத் தாகூர்

14. உலகின் சிறந்த மீன்பிடி திட்டு கிராண்ட் பேங்க்

15 வேகமாக ஆவியாகும் திரவம் ஆல்க்ஹால்

16. ஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் டிரினாட்

17 . இந்தியாவின் கிளி என்று அழைக்கப்பட்டவர் அமீர் குஸ்ரு

18.இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி( இராஜாஜி)

19. புத்தர் பிறந்த இடம் லும்பினி

 20. ரிசர்வ் வங்கியின் பழைய பெயர் இம்பீரியல் வங்கி.


தளிர் தளம் தொடங்கிய புதிதில் இப்படி பொது அறிவுத் தகவல்கள் பகிர்ந்தேன். இப்போது பகிர்வது இல்லை. இன்று தளிர் தளம் நான்கு லட்சம் பக்க பார்வைகளை கடந்து உள்ளது. உங்களின் பேராதரவோடு இந்த மைல்கல்லை எட்டியுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி.  தளிர் வெறும் பொழுது போக்குத் தளமாக மட்டும் இன்றி பயனுள்ள தளமாகவும் அனைவரும் விரும்பும் தளமாகவும் தொடர்ந்து பீடு நடை போட உங்களின் வருகையும் ஊக்கமூட்டும் பின்னுட்டங்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியம்.

     இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தளம் ஆரம்பித்த புதிதில் வெளியான சில பதிவுகளை மீள்பதிவு செய்து புதிய வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய உத்தேசம். இந்த பதிவைத் தொடர்ந்து சில மீள்பதிவுகள் உங்களின் பார்வைக்கு.

     தளிர் மேலும் வளர்ச்சி பாதையில் செல்ல உங்கள் ஆலோசனைகளை பின்னூட்டத்தில் தெரியுங்கள். தோள் கொடுத்து தொடரும் சொந்தங்களுக்கும் மேலான நண்பர்களுக்கு எனது  நன்றிகளை செலுத்துகின்றேன்! நன்றி! நன்றி! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles