புகைப்பட ஹைக்கூ 79
விறகானாலும்
விருட்சம் தந்தது
நிழல்!
சுமையை இறக்க
சுமக்கின்றாள்
சுமை!
வறண்ட நிலம்
வாழ்க்கைபோராட்டம்!
வென்றது பலம்!
உடைந்தவிறகுகள்
அடைத்தது கிழவியின்
பசி!
காய்ந்தது விறகுகள்
எரித்தது
ஏழையின் பசி!
கொளுத்தும் வெயில்
எரிக்கவில்லை
ஏழையின் பசி!
நிழலாய் தொடர்ந்தது
நீண்ட நாள்
கனவுகள்!
ஒடிந்தது விறகுகள்
ஒடியவில்லை!
மூதாட்டியின் நம்பிக்கை!
சுமையான விறகுகள்!
பாரம் இறக்கின
மூதாட்டியின் சுமை!
எரிக்கும் வெயில்!
எரிக்கவில்லை
ஏழையின் எரிபொருள் தேடல்!
வீட்டுச்சுமையிறக்க
விறகு சுமக்கிறாள்
மூதாட்டி!
உயிர்விட்ட மரங்கள்
உயிர்கொடுத்தன
மூதாட்டிக்கு!
கூடவே வந்தது
கொடுக்கவில்லை நிழல்!
விறகுசுமை!
காய்ந்தமரங்கள்
வேய்ந்தன
மூதாட்டியின் வாழ்க்கை!
விலையில்லா விறகுகள்
தலையில் சுமக்கின்றாள்
மூதாட்டி!
முதுமை விரட்டினாலும்
முன்னுள்ள சுமை விரட்டவில்லை
மூதாட்டி!
குளிர்காய
வெயிலில் காய்கின்றாள்
மூதாட்டி!
உலர்ந்தவிறகுகள்
மலர்த்தின
மூதாட்டியின் வாழ்க்கை!
உலர்ந்ததை
சுமக்கின்றாள்
உலர்ந்தவள்!
நிழல்கொடுக்கவில்லை!
உயிர்கொடுத்தது
விறகு!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!