Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

பாக்யராஜ் கதையை திருடிய சந்தானம்! பாக்யராஜ் பரபரப்பு புகார்!

$
0
0
தமிழ் சினிமா எத்தனையோ விதமான கதைத் திருட்டுக்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் இப்போது நடந்திருப்பது படுமோசமான ஒன்று. அது, பாக்யராஜின் இன்றுபோய் நாளை வா கதையை, அவருக்கே தெரியாமல், சம்பந்தமில்லாதவர்கள் விற்றதும், அதை கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி சந்தானமும் ராம நாராயணனும் படமாக எடுத்ததும்! இன்று போய் நாளை வா என்ற படத்தின் மூலக்கதை, கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் பாக்யராஜுக்கு சொந்தமானது. அதை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை இன்றுவரை அவர் யாருக்கும் தரவில்லை. தன் மகனை வைத்து அந்தப் படத்தை எடுக்க முயன்று வருகிறார். இது கடந்த ஓராண்டு காலமாக செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பாக்யராஜிடம் இந்த கதை உரிமையை இரு முறை கேட்டிருக்கிறார்கள். அவர் இந்தக் கதையை தானே மீண்டும் படமாக எடுக்கப் போவதாகக் கூறியபிறகு, அடாவடியாக அதே கதையை கண்ணா லட்டு தின்ன ஆசையா என படமாக எடுத்து, ரீலீஸ் வரை கொண்டுவந்துவிட்டார்கள். இப்போது பாக்யராஜ் தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார். மான நஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் கதைப் பஞ்சம் அல்லது கற்பனை வறட்சி எந்த அளவு தலைவிரித்தாடுகிறது... திரையில் நேர்மையைப் பேசுபவர்கள் எத்தனை கபடம் நிறைந்தவர்களாக உள்ளனர்... சிரிப்பு நடிகர்கள் நிஜத்தில் எத்தனை பெரிய வில்லன்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சின்ன சாம்பிள்தான்!

  நன்றி  தட்ஸ் தமிழ்



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!