Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

தளிர் அண்ணா கவிதைகள்!

$
0
0

தளிர்அண்ணாகவிதைகள்

    குழந்தை

கோடி வீட்டு கோமளா கண் வைப்பதும்
பக்கத்து வீட்டு பாபுவிடம் பார்த்து பழகவும்
திருட்டு பாலாஜி வந்தால் பொருட்களை மறைக்கவும்
அடுத்த ஊரு மாமிக்கு அளப்பு ஜாஸ்தி என்பதும்
தள்ளி வைப்பதும் குற்றம் காண்பதும்
ஒளிவு மறைவு எதுவும் குழந்தைக்கு கிடையாது.
அதனுலகில் அதற்கு எல்லோரும் “பட்டுத்தாத்தா,பட்டுபாட்டி பட்டு அண்ணா,பட்டு அத்தை”மட்டும் தான்.







அப்பாவின் கட்டில்.

முற்றத்தில் நடு நாயகமாய்
வீற்றிருக்கும் அப்பாவின் கயிற்று கட்டில்.
பர்மா தேக்குல செஞ்சதுடா என்று அவர்
சொல்வதே தனி அழகு.
யாரையும் அதில் அமர விட மாட்டார்
என்னைத் தவிர
வெயில் காலத்தில் வேப்ப மரத்தடி நிழலுக்கும்
அறுவடைக்காலத்தில் களத்து மேட்டிற்கும்
சென்றாலும் அப்பா அதை பராமரித்த விதமே தனி
தளர்ந்த கயிறுகளை இறுக்கும் வித்தையை
பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்.
பின்னோர் நாளில் நீ படுத்துக்கோடா என்று
அப்பா சொன்ன போது என் மகிழ்சிக்கு அளவே இல்லை
காலத்தின் சுழற்சியில் கல்யாணமாகி
மரக்கட்டில் பஞ்சு மெத்தை என மாறிப்போனது படுக்கை.இன்று அப்பாவை போல
மூலையில் கிடக்கிறது அப்பாவின் கட்டில்.                                                           டிஸ்கி: வலைப்பூ ஆரம்பித்த புதிதில் எழுதிய கவிதை! அப்பொது பலரின் பார்வையில் படவில்லை! அதனால் மீள்பதிவு செய்திருக்கிறேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி1  


Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!