தளிர் ஹைக்கூ கவிதைகள்!
அனுமதியின்றி கட்டியவீடுகள்
அகற்றிக் கொண்டிருந்தான் சூரியன்!
புற்களில் பனிக்கூடுகள்!
அசைந்த ஓவியங்கள்!
மறைந்து போனது!
நிழல்!
கொட்டுகின்றது
திட்டுகின்றோம்!
பனி!
வழிந்தோடும் கற்பனைகளில்
மிதந்தோடுகிறது
குழந்தைப் பருவம்!
உடை பெற்ற கற்களில்
உயிர்பெற்றது
கலை!
மிதிபட்டாலும்
நல்வரவு சொன்னது
மிதியடி!
தேய்கின்ற நிலவு
முகம் கறுத்தது
பூமி!
ஆற அமர்ந்து ரசிக்கையில்
ஆடைக்கட்டிக்கொண்டது
தேநீர்!
போர்த்திக்கொண்ட பூமி
விலக்கிப்பார்க்கின்றன விளக்குகள்!
இருட்டு!
ஈரக்காற்று!
பிடித்துக்கொண்டது!
சளி!
தண்ணீரில் இறங்கியும்
தலை முழுகவில்லை!
குவளை மலர்கள்!
பதுக்கி வைத்தன!
சிறைபடவில்லை!
எறும்புகள்!
தேய்ந்த தடங்கள்!
நினைவுபடுத்தின
வலித்த பாதங்கள்!
ஒளிந்த சூரியன்!
காட்டிக்கொடுத்தன பறவைகள்!
மாலைப்பொழுது!
நீர் ஊறியும்
நிறையவில்லை தாகம்!
நாக்கு!
கட்டி அணைக்கையில்
விலகிப்போகின்றன துயரங்கள்!
குழந்தைகள்!
ஒளிகொடுக்க
உயிர் கொடுக்கிறது
தீக்குச்சி!
விடைகளிலிருந்து
கேள்விகள்பிறக்கின்றன!
குழந்தைகள்!
மழைவிட்டதும்
குடைபிடித்தன!
காளான்கள்!
பிரித்து வைத்தாலும்
ஒட்டிக்கொள்கிறது!
குழந்தையிடம் மண்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!