Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

இதெல்லாம் பிள்ளையார் நிறைவேற்றினாரா? தெரியவில்லை!

$
0
0
  நான் ஒரு கோயில் குருக்கள் என்பது என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். நான் பூஜை செய்யும் பிள்ளையார் கோயில் தற்சமயம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. கிராமங்களில் இப்படி எத்தனையோ சக்தி மிக்கத் தலங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன. ஒரு வேளை பூஜைக்கும் கூட வழி இல்லாமல் மூடிக் கிடக்கின்றன.

     தற்போது நிறைய ஆன்மீகப் பத்திரிக்கைகள் பெருகிவிட்டன. அவர்களுக்கு தம் வாசகர்களுக்கு எதையாவது புதிதாய் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆகவே நிறைய கோயில்களை பற்றி எழுதுகின்றார்கள். சும்மா கோயிலைப் பற்றி எழுதினால் போதுமா? பக்தர்கள் சென்று விடுவார்களா? இந்த குறை நீங்கும்! அந்தகுறை நிவர்த்தியாகும் என்று சொல்கிறார்கள்.

    உண்மையில் அப்படி நிவர்த்தி ஆகுமா? ஆகாது என்றால் அப்புறம் கடவுள் எதற்கு? இதற்கு பதில் சொல்லி நான் பதிவின் ஆழத்திற்குள் சென்று நாத்தீகம், ஆத்தீகம் பற்றி விவாதிக்க விரும்பவில்லை! இந்து சமயத்தில் எல்லோருக்கும் முன்பிறவி, ஊழ்வினை குறித்த நம்பிக்கை இருக்கின்றது. அந்த வினைகள் முன்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையிலேதான் இந்த பிறவி வாய்த்துள்ளது என்ற நம்பிக்கையும் உண்டு. அப்படி இருக்கையில் நமக்கு வரும் துன்பங்கள் எல்லாம் கடவுளை வணங்கிவிட்டால் உடனே ஓடி விடுமா?

  வெயில் அடிக்கிறது! வெயிலை தடை செய்ய முடியுமா? முடியாது . மர நிழலில் நிற்கலாம், குடை எடுத்துப் போகலாம். ஒரு மின்விசிறி, ஏசி மிஷின் வைத்துக் கொள்ளலாம். இவையெல்லாம் வெயிலில் இருந்து நம்மை தற்காலிகமாக காத்துக் கொள்ள உதவுமே தவிர முழுவதும் காத்துவிடாது. அதே போலத் தான் பரிகாரங்களும்.

    எல்லா கோயில்களிலும் இன்று பரிகாரங்கள் பிரதானம் ஆகிவிட்டன! அப்போதுதான் கூட்டம் வருகிறது. பரிகாரம் செய்தும் பலன் கிடைக்கவில்லையே என்று பலரும் புலம்புவதை பார்க்க முடிகிறது. நாம்  செய்த ஊழ்வினையை அதற்கான தண்டணையை அனுபவித்தே ஆக வேண்டும்.  சில நோய்களுக்கு மருந்து இல்லை என்பது  போல ஊழ்வினைக்கும் பரிகாரம் இருப்பதாய் தெரியவில்லை!

      அந்த தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும். அப்புறம் பரிகாரங்கள் எதற்கு? வெயிலில் இருந்து மரம்  நிழல் கொடுத்து காப்பதைப் போல பரிகாரங்கள் நம்மை கொஞ்சம் கஷ்டத்தை விலக்கித் தரும் அவ்வளவே? அப்படியானால் சிலருக்கு பரிகாரங்கள் உடனே பலித்து விடுகின்றதே அது எப்படி? அவர்கள் ஊழ்வினை பயனை அனுபவித்து விட்டார்கள். இனி அந்த கஷ்டம் அவர்களுக்கு இல்லை என்பதாக இருக்கும். அதனால் உடனே நிறைவேறிவிடுகின்றது.

    இதெல்லாம் போகட்டும்! நான் சொல்ல வந்ததே வேறு! திருமணம் தடை, குழந்தை இல்லை, கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை, நோய் தீரவேண்டும்  இதெல்லாம் கேட்டு பரிகாரங்கள் நேர்த்திக் கடன் செய்கின்றார்கள் சரி. ஆனால் இப்படியெல்லாம் கூட கடவுளிடம் வேண்டுவார்களா?

    நான் பூஜை செய்யும் கோயிலுக்கு இரண்டு வருடம் முன்பு ஒரு மாணவன் வந்தான். இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்தான். குள்ளமான  உருவம், மெல்லிய தேகம், கருப்பு நிறம், தலையில் கொஞ்சம் முடிகள் குறைவு.  அவனுடைய குறைகளைப் பாருங்கள். பிள்ளையாருக்கு ஒரு லெட்டரே எழுதிவிட்டான். அதை இதை பிள்ளையாரிடம் வைத்துவிடுங்கள் என்று சொல்லி கொடுத்தான்.

   அவன் சென்ற பின் அதில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறான் என்று பார்த்தேன்.
    பிள்ளையாரப்பா! இந்த செமஸ்டரில் ஆல் பாஸ் ஆகவேண்டும் பர்செண்டேஜ் 70க்கு மேல் வரவேண்டும்.

நான் வெள்ளையாக மாறவேண்டும்.

இப்போது இருக்கும் உயரத்தை விட இன்னும் உயரமாக ஆறு அங்குலம் உயர வேண்டும்.

இங்கிலிஷ் புரியவில்லை! அது நன்றாக புரிய வேண்டும்.

தலையில் முடி சரியாக வளரவில்லை! அது வளர்ந்து நன்கு நீளமாக  வளர வேண்டும்.

இப்படி ஓர் நாலைந்து கோரிக்கைகள் எழுதி வைத்திருந்தான். படித்தவுடன் சிரிப்பு மாளவில்லை! இந்த கோரிக்கைகளை பிள்ளையார் நிறைவேற்றினாரா என்பதும் இன்னும் தெரியவில்லை!



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!