Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

$
0
0
தளிர் ஹைக்கூ கவிதைகள்!


சுட்டதால்
சுட்டது பாறை
வெயில்!

பூமித்தாய்க்கு
பூப்பறித்துக் கொடுத்தது!
காற்று!

குற்றம் செய்யாமலேயே
பழி ஏற்றுக் கொண்டது
தண்ணீர்!

வேறோடிய நம்பிக்கை!
உயிரிழக்கவில்லை!
துளிர்த்த புற்கள்!

வெப்பம் கொளுத்துகையில்
ஓய்வெடுக்கச் சென்றது
காற்று!

தவழ்ந்து வருகையில்
ஓடிப்போகின்றன கவலைகள்!
குழந்தை!

படித்துக் கக்கிய பாத்திரங்கள்
பரிசீலனைக்கு வந்தன!
விடைத்தாள்கள்!

சுட்டெரித்தது
ஈரம் உறிஞ்சிய
மணல்!


உயிர்கொடுக்க
உயிரைவிட்டது
தீக்குச்சி!

விரிசல்களில்
விளைகின்றது
விருட்சங்கள்!

நம்பிக்கை வளர்கையில்
நன்றாய் செழிக்கிறது
வாழ்க்கை!

உயர்ந்துகிளர்ந்த மேகங்கள்!
ஈர்த்துக் கரைத்தன காற்று!
மழை!

பதுக்கி வைத்தன
சிறைபடவில்லை!
எறும்புகள்!

துடைத்து எறிந்தாலும்
துரத்திக் கொண்டே வருகின்றது
மண்!


சிரித்ததும்
சிறைபட்டன
பூக்கள்!

கூடவே வந்து குளிர்வித்தாலும்
நெருங்கவில்லை!
நிலா!

சுயத்தை மறைக்க
ரசம் பூசிக்கொண்டது
கண்ணாடி!


மலையின் சிரிப்பில்
மயங்கியது மக்கள் கூட்டம்!
அருவி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537