Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

களை! பாப்பா மலர்!

$
0
0
களை!


பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அவினாஷ் புத்தகப்பையை தூக்கி எறிந்தான். என்ன அவினாஷ்...! இவ்வளவு கோபமா வறே? என்ன விஷயம்? காபியை கொடுத்தபடி தாய் கேட்டாள்.

காபியை குடித்து முடித்த அவினாஷ் “அம்மா நாளையிலிருந்து ஸ்கூலுக்கு போகமுடியாது” என்று கோபமாகக் கூறினான் அவினாஷ்.அதைக்கேட்ட அவனது அம்மா “ஏண்டா கண்ணா இப்படி சொல்றே? போய்வர ரொம்பகஷ்டமா இருக்கா பசங்க ஏதாவது தொந்தரவு பண்ராங்களா? படிப்பு வாழ்க்கைக்கு ரொம்ப அவசியமாச்சேப்பா ! என்ன விஷயம் எங்கிட்டே தைரியமா சொல்லுடா கண்ணா” என்று பரிவாக கேட்டாள்.

     உடனே அவினாஷ் அழுது விட்டான். “எங்க தமிழாசிரியர் ரொம்பக் கோவக்காரரும்மா என்னையே சும்மா திட்டுவாரு இன்னிக்கு என்னை போட்டு அடிச்சிட்டாரு இதபாரும்மா என்று முதுகைக் காட்டியவன் நான் இனிமே ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான்.

  “கண்ணா ஆசிரியர் தப்பு செய்யாம அடிக்கமாட்டாரு! நீஎன்ன தப்பு செஞ்சே?”

   அ.. அது.. வந்து.. “சொல்லு என்ன செஞ்சே?’

“பாடம் நடத்தறப்ப கவனிக்காம வெளிய வேடிக்கை பார்த்தேன்”

 “அதுக்காகவா அடிச்சாரு ?” 

 “ஆமாம்மா!”

“நான் விசாரிக்கறேன் நீ பிடிவாதம் பிடிக்காம ஸ்கூலுக்கு போகனும் சரியா!”

  அறை குறையாய் சம்மதித்தான் அவினாஷ். 

மறுநாள் அந்த தமிழாசிரியரை சந்தித்தாள் அவினாஷின் தாய். ‘நான் அவனை காரணமில்லாம அடிக்கலம்மா! பாடம் நடத்தறபோது கவனிக்காம மத்த பசங்களை வம்புக்கு இழுப்பது வகுப்பு நடக்கும்போது சிரிப்பு மூட்டறது சின்னபசங்களை அடிக்கிறதுன்னு அவன் பண்ற வால் தனங்கள் அதிகம்.இப்படி பல தவறுகள் செஞ்ச அவனை பலமுறை கண்டிச்ச நான் அன்னிக்கு கொஞ்சம் நிதானத்த இழந்துட்டேன் அதான் அடிக்கும்படியா ஆயிடிச்சி மத்தபடி பசங்கள பிரம்பால திருத்தறத விட அன்பால திருத்தறதயே நான் விரும்பறவன். அவன்கிட்ட இருக்கற அந்த பிடிவாதமும் குறும்பும் இல்லாட்டி அவன் நல்ல பையன் தான் அந்த கெட்ட குணத்த நாமதான் களையெடுக்கணும்.’ என்றார் தமிழாசிரியர்.

   “ரொம்பநன்றி ஐயா! அவனை எப்படியாவது திருத்த முயற்சி பண்றேன் என்று விடைபெற்றுக்கொண்டு மகனை எப்படி திருத்தலாம் என்ற யோசனையுடன் வீட்டிற்கு வந்தாள் அவினாஷின் தாய்.

  தோட்டத்தில் இருந்தான் அவினாஷ். “என்ன அவினாஷ் என்ன பண்றே?”

  “கீரைப் பாத்தியிலே களை எடுத்தேம்மா!”

 “எதுக்கு?”

 “என்னம்மா கேள்வி இது? களையை அப்படியே விட்டா கீரை எப்படி நல்லா வளரும்?”

“நல்ல பதில்! ஆமாம் முடி வெட்டிட்டு வந்திருக்கே போல?”

‘ஆமாம்மா!”

 “ஏன்? அப்படியே விட்டிருக்கலாம்லே!”

  ‘ என்னம்மா ஆச்சு உனக்கு இப்படியெல்லாம் கேக்கற?”

“எனக்கு ஒன்னும் ஆகலே நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லு?”

 ‘அப்படியே முடிய வளரவிட்டா வளர்ந்து அசிங்கமாகி சிக்கு பிடிச்சுடாதா?”

 ‘நல்லா சொன்னே! எப்படி கீரைப் பாத்தியை களை எடுக்காம விட்டா கீரையை களைஅழிச்சிடுமோ முடிவெட்டலன்னா சிக்கு பிடிச்சிடுமோ அதுபோலதான் சின்ன பசங்களான நீங்களும்”

  “ஒன்னுமே புரியலம்மா!”

 “சொல்றேன், வளர்ற செடிகள்ல களைகள் ஊடுறுவதுபோல வளர்ற பசங்களான உங்க கிட்ட தவறான செய்கைகளான பிடிவாதம், பிறரை அடித்தல், கோள்மூட்டல், விளையாட்டுத்தனம் போன்றவை வளருது அவற்றை முளையிலேயே கிள்ளி எறியணும்.”

  “ எப்படி நீ கீரை பாத்தியிலே களை எடுத்தியோ அது போல ஆசிரியர்கள் உன்கிட்ட இருக்கற தீய குணங்கள களை எடுக்கிறாங்க! முதல்ல அன்பா பின்னர் சற்று கடுமையா பூச்சடிச்ச செடிக்கு மருந்தடிக்கிற மாதிரி!”

  “இப்ப புரியுதா இனி ஒழுங்கா ஸ்கூலுக்கு போவியா?”

  “ அம்மா என்னை மன்னிச்சுடும்மா இப்பவே என் தீய குணங்களை எல்லாம் விட்டுடறேன். நாலையிலருந்து ஒழுங்கா ஸ்கூலுக்கு போய் நல்ல பிள்ளையா நடந்துக்கறேன்” என்ற மகனை தழுவிக் கொண்டாள் அந்த பாசத்தாய்.

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!