Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

முன்னோர்கள் நல்லாசி வழங்கும் ஆடி அமாவாசை!

$
0
0
ஆடி அமாவாசை!


சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாள் அமாவாசை எனப்படுகின்றது. இது மாதம் தோறும் நிகழும். இந்த நாளில் ஈர்ப்பு விசை அதிகரித்து கடல் கொந்தளிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அமாவாசை தினம் முன்னோர்களின் தினமாக இந்துக்களால் அனுசரிக்கப்படுகின்றது. அமாவாசை தினத்தில் முன்னோர்கள் நமது இல்லங்களுக்கு வருவதாக ஐதீகம். அன்று முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து அவர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் உணவருந்துதல் வழக்கம். பசுக்களுக்கு உணவளிப்பது, பிராமணர்களுக்கு தானம் அளிப்பது, மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு  உதவி செய்வது ஆகியவை அமாவாசை தினத்தில் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்று நம்பப் படுகின்றது.

  இந்துக்கள் நதிகளை புனிதமாக கருதினர். நதிகளை பெண் தெய்வங்களாகவும் வழிபட்டனர். அதன் காரணமாகவே நதிகளுக்கு பெண்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அமாவாசை தினத்தில் நதிக்கரைகளில் பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் செய்தல் மிகவும் உகந்தது ஆகும். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து காவேரி,பாகீரதி,  போன்றவை புண்ணிய தீர்த்தங்கள். இந்த தீர்த்தங்களில் தர்ப்பணம் செய்வது விஷேசமாகும். இது தவிர்த்து புண்ணிய க்ஷேத்திரங்களில் தர்ப்பணம் செய்வதும் விஷேசமாகும்..

ஆடிஅமாவாசையன்றுமுக்கடல்கூடும்கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம்அக்னிதீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம்நவபாஷாணம்உள்ளகடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம்போன்றஇடங்களில்கடல்நீராடுவதுசிறப்பிக்கப்பட்டுள்ளது.
  ஆடிஅமாவாசையன்று, தமிழகத்தில்காவேரிப்பூம்பட்டினத்தில்காவேரிசங்கமமுகத்தில்நீராடுவதுசிறப்பாகப்பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில்ஓடும்காவேரி, திருவையாறு, குடந்தைஅரிசலாறு, ஸ்ரீரங்கம்அம்மாமண்டபம்காவேரிப்படித்துறை, திருச்சிக்குஅருகிலுள்ளமுக்கொம்புஆகியதீர்த்தக்கரைகளில்இந்தநாளில்மக்கள்கூட்டம்நிறைந்துகாணப்படும்.
அன்றையதினம்வேதவிற்பன்னர்மேற்பார்வையில்பிதுர்பூஜைசெய்வதால்குடும்பத்தில்சுபகாரியங்கள்தடையின்றிநடைபெறுவதுடன், முன்னோர்களின்ஆசியும்கிட்டும்என்றுஞானநூல்கள்கூறுகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோயில் குளக்கரையில் ஆடி அமாவாசை தர்ப்பணம் மிகச்சிறப்பாக செய்யப்படுகின்றது. திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் தர்ப்பண பூஜைகள் நடக்கின்றது.
இருவேறுசக்திகளானசூரியனும்சந்திரனும்ஒன்றாகஇணையும்அமாவாசையன்றுஎந்தகிரகமும்தோஷம்பெறுவதில்லை. இதன்காரணமாகஅமாவாசைதிதியில்சிலவிஷயங்களைமேற்கொண்டால்வெற்றியாகமுடியுமென்பர். இறைவழிபாடு, மருந்துஉண்ணுதல், நோயாளிகளைக்குளிப்பாட்டுதல்உள்ளிட்டசெயல்களைஅமாவாசையன்றுதுவங்கலாம்என்றுசித்தநூல்கள்கூறுகின்றன.
எந்தவொருபரிகாரப்பூஜையாகஇருந்தாலும், அமாவாசையன்றுசெய்தால்நல்லபலன்கள்கிட்டும். குருதோஷம், ராகு- கேதுதோஷம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய்கிரகங்களால்ஏற்படக்கூடியதோஷங்கள், களத்திரதோஷம், மாங்கல்யதோஷம்ஆகியவற்றுக்குஅமாவாசைதிதியன்றுபரிகாரம்செய்வதுநல்லது. மேலும்இந்தகாரியங்களுக்குதட்சிணாயனகாலஆடிஅமாவாசைஉகந்தநாளாகக்கருதப்படுகிறது. 
 ஆடிமாதம் முதல் தைமாதம் வரை தேவர்கள் ஓய்வெடுக்கும் நாளாக கருதப்படுகின்றது. இந்த நாட்களில் நமது முன்னோர்கள் நம்மை காப்பதற்காக நம் இல்லங்களுக்கு வருவர் என்று தர்ம நூல்கள் கூறுகின்றன. அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை நாளில் வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சூரியனும், சந்திரனும்ஒன்றாக இணைந்திருக்கும்நாளான அமாவாசையன்றுபித்ருக்களுக்குபசியும்தாகமும்அதிகமாகஏற்படும் என்றுதர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன.
 அமாவாசைதிதியைபித்ருதிதிஎன்றுகூறிஅன்றைய நாளில்இறந்தவர்களின் பசியையும்தாகத்தையும்போக்க கறுப்புஎள்கலந்ததண்ணீரால் தர்ப்பணம்செய்யவேண்டும்இதனால்இறந்தவர்களின்பசியும்தாகமும்விலகிஆசிவழங்குவார்கள்.
சூரியன்பிதுர்க்காரகன், சந்திரன்மாதூர்க்காரகன். இவர்களைசிவசக்திசொரூபமாகசாஸ்திரங்கள்கூறுகின்றன. இந்தஇரண்டுகிரகங்கள்சேரும்புனிதமானஆடிஅமாவாசையன்று, முன்னோரையும்மறைந்ததாய், தந்தையரையும்நினைத்துதிதிகொடுப்பது. புண்ணியநதிகள், கடல்போன்றஇடங்களில்புனிதநீராடிஇஷ்டதெய்வஆலயங்களில்வழிபாடு, சிறப்புபூஜைகள்செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்குஅன்னதானம், வஸ்திரதானம்செய்வதுநாம்செய்தபாவங்கள், கர்மவினைகள், தீவினைகள்அனைத்தையும்போக்கிவாழ்வில்புண்ணியத்தைசேர்க்கும்என்பதுநம்பிக்கை. இத்தகையவழிபாடுகளால்முன்னோர்செய்தபாவவினைகள்நீங்கிஅவர்களுக்குமுக்திகிட்டும். அவர்களதுபரிபூரணஆசீர்வாதம்குடும்பத்தினர்அனைவருக்கும்கிடைக்கும்என்பதுஐதீகம்.
 .அமாவாசைதிதியன்றுஒவ்வொருவீட்டுவாசலிலும் அந்தந்தவீட்டுபித்ருக்கள் வந்துநின்றுகொண்டுதங்களுக்குத் தரப்படும்எள்கலந்த தண்ணீரைபெற்றுக்கொள்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்என்றுநம்பப்படுகிறது. அன்றைய தினம்வீட்டில்தர்ப்பணம் செய்துஅவர்களுக்குஎள்கலந்த தண்ணீரைதரப்படவில்லைஎன்றால் அவர்கள் ஏமாற்றமடைந்துவருத்தப்பட்டுகோபத்தோடுசெல்கிறார்கள்என்றும், ஒருசிலபித்ருக்கள் சாபம்கூடதந்துவிட்டுச் செல்கிறார்கள்என்றும் கூறப்படுகிறது.
மறைந்த முன்னோர்களுக்குநாம்செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமதுகுடும்பத்தினரின்நன்மைக்காவேசெய்யப்படுகிறதுஅகவேதவறாதுசிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும்செய்யவேண்டும்.

.ஒருவருடத்தில்பித்ருக்களுக்குதர்ப்பணம்செய்யவேண்டியநாட்கள்மொத்தம்தொன்னூற்றுஆறுநாட்கள்.
இவைகளில் 14 மன்வாதிநாட்கள்,
யுகாதிநாட்கள் 4,
மாதப்பிறப்புநாட்கள் 12,
அமாவாசை 12, மஹாளயபட்சம் 16,
வ்யதீபாதம் 12, வைத்ருதி 12,
அஷ்டகா 4, அன்வஷ்டகா 4,
பூர்வேத்யு 4 நாட்கள்.
இந்தநாட்களில்செய்யப்படும்தர்ப்பணத்தால்பித்ருக்கள்மிகவும்மகிழ்ச்சிஅடைகிறார்கள்.
 தர்ப்பணம்ஏன்?
திவசத்தின்போதுபிண்டம் கொடுப்பதுஏன்திவசத்தின்போதுஇறந்தபெற்றோர்பாட்டனார்மற்றும்முப்பாட்டனார்  ஆகியமூவரின் பெயர்களைச்சொல்லிஅழைத்து அவர்களுக்குபிண்டம்கொடுக்கப்படுவதுவழக்கத்திலுள்ளது. ஏன் தெரியுமாகுழந்தைபிறக்கமூலகாரணமான பொருள் ஆணிடமுள்ளசுக்கிலம்எனப்படும்தாதுவாகும். இந்தத் தாதுவில் 84 அம்சங்கள்உள்ளன.
அதில் இருபத்துஎட்டு(28)அம்சங்கள்அந்த மனிதன்உட்கொள்ளும்உணவுமற்றும் அருந்தும்நீர்முதலியவற்றால் உண்டானவைபெற்றோரிடமிருந்துஇருபத்தியொரு(21) அம்சமும்பாட்டனாரிடமிருந்துபதினைந்து(15) அம்சமும், முப்பாட்டனாரிடமிருந்துபத்து(10) அம்சமும், நான்காம் மூதாதையிடமிருந்துஆறு(6)  அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்துமூன்று(3) அம்சமும், ஆறாம் மூதாதையிடமிருந்துஒரு(1) அம்சமும்என ஆறுதலைமுறையினரின் ஐம்பத்தியாறு (56)அம்சங்கள்ஏழாம்தலைமுறைமனிதனின்  சுக்கிலத்தோடு(28) அம்சங்கள் தொடர்புகொண்டவை.
இதில்அதிகமாகதங்கள்அம்சத்தைதங்கள்வாரிசுகளுக்குத் தருபவர்கள், பெற்றோர், பாட்டனார், முப்பாட்டனார்ஆகியமூவரேஅதனால்தான், திவசத்தின்போதுஇந்த மூவரின்பெயர்களைக் கூப்பிட்டுபிண்டம்கொடுக்கப்படுவதுவழக்கத்திலுள்ளது.
கோவில்கள், குளங்கள், கடல் போன்றஇடங்களில்செய்யப்படும் தர்ப்பணங்களுக்குமிகஅதிகமானசக்திஉண்டு.

திலதர்ப்பணபுரிஎனும்ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில்உள்ளது) தர்ப்பணம் செய்வதுமிக, மிகவிசேஷமாக கருதப்படுகிறதுஇங்குஸ்ரீராமரும்லட்சுமணரும் தம்தந்தையானசரத மகாராஜாவிற்குதர்ப்பணம்செய்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
 தமிழ் வருடங்கள் இரண்டு அயனங்களாக பிரிக்கப்படுகிறது. தை முதல் ஆனி வரை உத்திராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயினம் என்றும் சொல்லப்படுகிறது. தட்சிணாயனத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை, உத்தராயணத்தில் வரும் முதல் அமாவாசை தை அமாவாசை, மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை ஆகியவைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
  இத்தகைய சிறப்பான நாட்களிலாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வழிபடுதல் குடும்பம் சிறக்க உதவும். ஆடி அமாவாசை பற்றிய கதை ஒன்றை வாசிக்க இங்கே க்ளிக்கவும்  ஆடி அமாவாசை கதை  
இத்தகைய சிறப்புக்கள் கொண்ட இந்த அமாவாசை நாளில் பித்ருக்களை வழிபடுவோம்! சிறப்புறுவோம்! நன்றி!
(படித்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!