“அன்பார்ந்தமாணவர்களேநமதுபள்ளியில்சுதந்திரதினவிழாவையோட்டிஒருஓவியக்கண்காட்சியைநடத்தஉள்ளோம்திறமைஉள்ளஓவியம்வரையத்தெரிந்தமாணவர்களும்தத்தமதுஓவியங்களையும்கண்காட்சியில்வைக்கலாம். சிறந்தஓவியத்துக்குபரிசுஉண்டு.” பள்ளிப்ரேயரில்அறிவித்தார்தலைமைஆசிரியர்.
ஓவியத்திறமைஉள்ளமாணவர்கள் கண்காட்சியில்வைப்பதற்காக, தத்தமதுகைத்திறமையைகாட்டிபடம்வரையஆரம்பித்தார்கள். அதில்மணியும்ஒருவன். அவன்சுமாராகபடம்வரைவான். கண்காட்சிக்காகசிலபடங்களைவரைந்தான்.ஆனால்ஒன்றுமேஅவனுக்குத்திருப்திஅளிக்கவில்லை. கண்காட்சியில்எப்படியும்பரிசினைபெற்றுவிடவேண்டும்என்றுஒருவெறிஅவனுள்பிறந்தது.
மீண்டும்படங்களைவரையஆரம்பித்தான்ஆனால்எதுவுமேஅவனுக்குபிடிக்கவில்லை.
அவனுக்கு அப்போதுதான் அவனது அடுத்த தெருவில் வசிக்கும் விநாயகம் அண்ணனின் நியாபகம் வரைந்தது. மிகவும் நன்றாக படம் வரைவார். பள்ளி செய்முறை பயிற்சி ஏடுகளில் படம் வரைய மாணவர்கள் அவரை அணுகுவது உண்டு. அப்போதுதான் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.இப்படி படம் வரைந்து கொடுப்பது அவரது படிப்புக்கு பயிற்சியாகவும் இருந்தது. மணி அவரிடம் சென்றான்.
“அண்ணா! எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணுமே!” என்று பீடிகை போட்டான்.
“என்னப்பா! ரெக்கார்ட் நோட்டுல ஏதாவது படம் வரையணுமா?”
"இல்லேன்னே! எங்க ஸ்கூல்ல சுதந்திர தின ஓவியக் கண்காட்சி வைச்சிருக்காங்க! அதுக்கு படம் வரையணும். நல்லா இருக்கற படத்துக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும்னே! நீங்க வரைஞ்சு கொடுத்தா எனக்குத்தான் பர்ஸ்ட் ப்ரைஸ்! ப்ளீஸ்ணே! முடியாதுன்னு சொல்லாதீங்க!"கெஞ்சினான் மணி.
“ இது தப்பாச்சே மணி! ரெக்கார்ட் நோட்டுல வரைஞ்சி கொடுக்கிறதே தப்பு! சின்ன பசங்க பாவம்னு ஏதோ ஒண்ணு ரெண்டு வரைஞ்சி கொடுக்கிறேன். இப்ப நான் வரைஞ்ச படத்தை நீ கொண்டு போய் பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கினா சுயமா வரைஞ்சவனுக்கு என்ன மதிப்பு இருக்கு!”
“ அண்ணே! நான் சுயமா வரைய முயற்சி செய்யறேன்! ஆனா அழகா வர மாட்டேங்குது!”
“அதனால என்ன? நிறைய வரைஞ்சு பழகு! இந்தவருஷம் இல்லாட்டி அடுத்த வருஷம் பரிசு வாங்கிட்டாப் போச்சு!”
மணி முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு திரும்பினான்.
அவனுக்கு இந்த முறை எப்படியும் பரிசு வாங்கிட வேண்டும் என்ற வெறி. அன்று மாலை மீண்டும் விநாயகத்தின் வீட்டுக்கு சென்றான். “ அண்ணே! அண்ணே!” என்று கூப்பிட்டான். “என்னப்பா மணி! அதான் படம் வரைய முடியாதுன்னு சொல்லிட்டேனே! ஏன் தொந்தரவு பண்றே?”
“ இல்லேன்னே நீங்க வரைஞ்சி வச்சிருக்கிற படம் ஏதாவது இருந்தா பார்த்து அதே மாதிரி வரையலாம்னு நினைக்கிறேன்னே! உங்க படங்கள் ஏதாவது இருந்தா கொடுங்கண்ணே! அதை பார்த்து இங்கேயே வரைஞ்சு பழகறேன்!”
விநாயகமும் அவர் வரைந்துவைத்திருந்த சில படங்களை எடுத்துக் கொடுத்தார். அதை வைத்துக்கொண்டு தாளில் பெயருக்கு எதையோ வரைந்து கொண்டு இருந்தான் மணி. ஓர் அரை மணிநேரத்தில் விநாயகம் ஏதோ வேலையாக வெளியே செல்ல, அவர் வைத்திருந்த படங்களில் ஒன்றை எடுத்து தன்னுடைய நோட்டில் வைத்துக் கொண்டான். பின்னர் மற்ற படங்களை வழக்கம் போல எடுத்த இடத்தில் வைத்து விட்டான்.
விநாயகம்வரைந்தஅப்படம்பாரதமாதாகையில்கொடியேந்திநிற்கஇந்துமுஸ்லீம்கிறிஸ்துவர்இனபேதமின்றிகைகோர்த்துநிற்பதாகஅழகாகஇருந்தது இனிஎனக்கேபரிசுஎன்றுபெருமிதப்பட்டான். ஆனால்அவனதுமனசாட்சிஅவனைஇடித்துரைத்தது. மணிபரிசுக்காகமற்றவர்படைப்பைஉன்படைப்பென்றுகூறலாமா?அதையெல்லாம் பார்த்தால் பரிசு கிடைக்காது!என்றுசமாதானப்படுத்திக்கொண்டான்மணி.
கண்காட்சியிலும்அப்படத்தைவைத்துவிட்டான். எல்லோரும்அவனைப்பாராட்டிஉன்படத்திற்குத்தான்பரிசுஎன்றுகூறியபோதுஅவனுக்குஉற்சாகம்கரைபுரண்டுஓடியது..
கொடியேற்றிமுடித்ததும்கலந்துகொண்டசிறப்புவிருந்தினர்ஒருவர்பேசினார். “அன்பார்ந்தகுழந்தைகளே! நான்உங்களுக்குதேசப்பிதாவின்வாழ்வில்நடந்தசம்பவம்ஒன்றைகூறுகிறேன். சிறுவயதில்அவர்பள்ளியில்படித்துக்கொண்டிருந்தபோதுபள்ளிக்குஆய்வாளர்வந்தார். அவர்காந்தியை‘கெட்டில்’ என்றஆங்கிலவார்த்தையைஎழுதும்படிகூறினார். காந்திக்குஅதற்கு‘ஸ்பெல்லிங்க்’ தெரியவில்லை. ஆசிரியர்பக்கத்துமாணவனைப்பார்த்துஎழுதும்படிசைகைசெய்தார். ஆனால்காந்திமறுத்துவிட்டார்.
மற்றவனைபார்த்துகாந்திஎழுதிஇருக்கலாம்ஆனால்மறுத்தார்ஏன்? தமக்குச்சொந்தமில்லாததைதம்முடையதுஎன்றுசொல்லஅவரதுமனசாட்சிமறுத்தது. அதனாலேஅவர்உலகஉத்தமராகஉயர்ந்தார். இவ்வாறுஅவர்சொல்லிக்கொண்டேபோகமணியின்மனம்கூசியது.
காந்திபக்கத்துப்பையனைபார்த்துஎழுதவேகூசினார். ஆனால்நானோமற்றவரின்பொருளைஎனதுஎன்றுசொந்தம்கொண்டாடுகிறேனே! நானும்ஒருமனிதனா? அவன்தலைகுனிந்தான்.
“ஓவியக்கண்காட்சியில்முதல்பரிசுமணி!” என்றுஅறிவிப்புமுழங்க, “மணி, சார்அந்தபடத்தநான்வரையலை! எனக்குபரிசுவேண்டாம்என்றான். “ என்னப்பாசொல்றே? ”ஆசிரியர்கேட்கநடந்தஅனைத்தையும்கூறினான்மணி.
“என்னைமன்னிச்சிடுங்கசார்! பரிசுக்குநான்தகுதியானவன்இல்லை. இனி இதமாதிரிசெய்யமாட்டேன் !”என்றான்கண்ணீருடன்!
“ மணிநீகண்டிப்பாபரிசுக்குத்தகுதியானவன்தான்! இத்தனைபேர்முன்னாலநீஉண்மையைஒத்துகிட்டுஉயர்ந்தவன்னுநிரூபிச்சுஇருக்கே! படம்வரைந்தவருக்குகட்டாயம்பரிசுஉண்டுஅதுபோலஉண்மையைஒத்துக்கஒருதைரியம்வேண்டும் . அந்ததைரியம்உன்கிட்டஇருக்கு! திருந்தியஉனக்கும்பரிசுஉண்டு!”என்றார்தலைமைஆசிரியர்.
மணிகண்ணீருடன்அவர்காலில்விழுந்தான். அங்கேபோட்டோவில்மகாத்மாபுன்னகைசிந்தியபடிஅவனைஆசிர்வதித்தார்.
வாய்மையேவெல்லும்!
டிஸ்கி} இது நான் கல்லூரி படிக்கையில் எழுதிய கதை! வலைப்பூ துவங்கிய புதிதில் பதிவிட்டேன். அப்போது என்னை பாராட்டியும் சில திருத்தங்கள் சொல்லியும் தமிழறிஞர் புலவர் இ.பு. ஞானபிரகாசம் அவர்கள் கருத்துரை இட்டார். அந்த பதிவை கொஞ்சம் திருத்தி சீரமைத்து இன்று சுதந்திர தின சிறப்பு பதிவாக வெளியிடுகின்றேன். சில ஆங்கிலச்சொற்களை பேச்சுவழக்கில் உபயோகிப்பதால் அப்படியே தந்துள்ளேன் தமிழ்படுத்தவில்லை!
பழைய பதிவிற்கு லிங்க்:மணியை மாற்றிய மகாத்மா
இதற்கு இ.பு ஞானப்பிரகாசம் அவர்கள் வழங்கிய கருத்துரை என்னால் மறக்கமுடியாத ஒன்று. இதோ அது.
இ.பு.ஞானப்பிரகாசன்August 12, 2011 at 4:50 PM
சிறுவர்களுக்கான படைப்புலகம் இருக்க இருக்கச் சுருங்கி வரும் இந்நாளில், இணையம் வழியே சிறுவர்களுக்கு இலக்கியத்தை வழங்கும் உங்கள் முயற்சிக்கு முதலில் என்னுடைய உளமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்!
கதை நன்றாகவே இருக்கிறது. ஆனால் ஓவியர் ஒருவர் வரைந்த படத்திற்கும் சிறுவன் வரைந்த படத்திற்கும் கூட வேறுபாடு தெரியாதவர்களாகவா இருக்கிறார்கள் நம் ஆசிரியப் பெருமக்கள்?...
மேலும், கதையில் கதை மாந்தர்கள் பேசும் இடங்களில் பேச்சுத் தமிழையே பயன்படுத்தினால், படிப்போருக்கு அந்நியத் தன்மை ஏற்படாமல் இருக்கும். இதைக் குறையாகச் சொல்லவில்லை என்னுடைய ஒரு சிறு ஆலோசனையாகத்தான் முன்வைக்கிறேன்.
அடுத்து, கதையின் தொடக்கத்தில் 'பிரேயர்'என்று ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளீர்கள். கடவுள் வாழ்த்து என்றே குறிப்பிட்டிருக்கலாமே! கதை மாந்தர்கள் பேசும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் தூய தமிழையே பயன்படுத்துவது நல்லது என்பது என்னுடைய ஆலோசனையாக இல்லாமல் ஒரு வேண்டுகோளாகவே கேட்டுக் கொள்கிறேன்!
தொடரட்டும் உங்கள் சிறுவர் இலக்கியச் சேவை!
நன்றி! வணக்கம்!
கதை நன்றாகவே இருக்கிறது. ஆனால் ஓவியர் ஒருவர் வரைந்த படத்திற்கும் சிறுவன் வரைந்த படத்திற்கும் கூட வேறுபாடு தெரியாதவர்களாகவா இருக்கிறார்கள் நம் ஆசிரியப் பெருமக்கள்?...
மேலும், கதையில் கதை மாந்தர்கள் பேசும் இடங்களில் பேச்சுத் தமிழையே பயன்படுத்தினால், படிப்போருக்கு அந்நியத் தன்மை ஏற்படாமல் இருக்கும். இதைக் குறையாகச் சொல்லவில்லை என்னுடைய ஒரு சிறு ஆலோசனையாகத்தான் முன்வைக்கிறேன்.
அடுத்து, கதையின் தொடக்கத்தில் 'பிரேயர்'என்று ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளீர்கள். கடவுள் வாழ்த்து என்றே குறிப்பிட்டிருக்கலாமே! கதை மாந்தர்கள் பேசும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் தூய தமிழையே பயன்படுத்துவது நல்லது என்பது என்னுடைய ஆலோசனையாக இல்லாமல் ஒரு வேண்டுகோளாகவே கேட்டுக் கொள்கிறேன்!
தொடரட்டும் உங்கள் சிறுவர் இலக்கியச் சேவை!
நன்றி! வணக்கம்!
முடிந்தவரை அவரது ஆலோசனைகளை திருத்தங்களை ஏற்று செயல்படுத்தி உள்ளேன். ஆங்கிலச்சொல் கலப்பு மட்டும் நீக்கவில்லை! கதையை அந்நியப்படுத்தும் தன்மை என்று அவர் சொல்லியிருப்பதே அதற்கு காரணம்.
வந்து வாசித்து கருத்திட்டு ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்!